உலகில் முதல் முறையாக ஹைட்ரஜன் ரயில் (hydrail)விட்ட ஜெர்மனி..!

ஐரோப்பிய யூனின் தேசங்களில் ஒன்றான ஜெர்மனி, கோர்டியா ஐலிண்ட் என்கிற இரண்டு ஹைட்ரஜன் ரயில்களை மக்கள் பயன்பாட்டுக்கு விட்டிருக்கிறது. இந்த ரயில் தற்போது Cuxhaven, Bremerhaven, Bremervoerde and Buxtehude போன்ற ரயில் நிலையங்களுக்கிடையே சுமார் 100 கிலோமீட்டர் செயல்பட்டு வருகின்றன. இது மக்கள் பயன்பாட்டுக்கு முழுமையாக திறந்துவிடப்பட்டிருக்கிறது.

ஏன் ஹைட்ரஜன்

ஏன் ஹைட்ரஜன்

சுற்றுச்சூழலுக்கு, மாசு ஏற்படுத்தும் டீசலுக்கு மாற்றாக ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தும் இந்த ரயில் இன்ஜின்கள் பயன்படுத்துகிறது. இந்த இன்ஜின்களில் இருந்து வெளியேறுவது வெறும் தண்ணீரும், நீராவியும் மட்டுமே. இதை ஜீரோ எமிஷன் டிரெயின் (Zero Emission Train) என்றும் ஆழைக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

உற்பத்தியாளர் உரை

உற்பத்தியாளர் உரை

இந்த ரக ரயில்களை பிரான்ஸ் நிறுவனமான அல்ஸ்டாம் தான் தயாரித்தன. அல்ஸ்டாமின் சி இ ஓ "இந்த ரக ரயில்களின் வெற்றிகரமான மக்கள் பயன்பாட்டுக்குப் பிறகு, தொடர்ந்து தயாரித்து பல நாடுகளுக்கும் விற்கலாம் என முடிவு செய்திருக்கிறோம்".

 ரயில் திறன்

ரயில் திறன்

ஒரு முறை முழுமையாக ஹைட்ரஜன் எரிபொருளை நிரப்பினால் இந்த ரயில் 1000 கிலோமீட்டர் வரை பயணிக்கும். இந்த ஃப்யூயல் செல் தான் மேட்டரே. இந்த ஃப்யூயல் செல்லில் தான் ஹைட்ரஜன் எரிபொருள், ஆக்ஸிஜனோடு வினை புரிந்து மின்சாரத்தை உண்டாக்கும். அந்த மின்சாரம் தான் நேரடியாக இந்த ரயிலை இயக்குகிறது. கூடுதலாக உருவாகும் மின்சாரம் லித்தியம் பேட்டரிகளில் சேமிக்கப்பட்டு ரயிலுக்கே மீண்டும் பயன்படுத்தப்படும். எனவே இந்த ரயிலை செல்லமாக ஹட்ரயில் (Hydrail) என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.

ஜெர்மனிக்குள்ளேயே போட்டி

ஜெர்மனிக்குள்ளேயே போட்டி

தற்போது இந்த ரயில் வடக்கு ஜெர்மனியில் உள்ள ஒரு சில மாநிலங்களில் மட்டுமே பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. அதற்குள் Saxony என்கிற மாநிலம் 14 ஹைட் ரயில்களுக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறது.

 செலவும் செயல்பாடும்

செலவும் செயல்பாடும்

இந்த ரக ரயில்களை வாங்குவது டீசல் ரக ரயில்களை விட அதிக செலவாகும், ஆனால் செயல்பாட்டுச் செலவுகள் டீசல் ரயில்கள் அளவுக்கு ஆகாது என்று அல்ஸ்டாம் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. குறிப்பாக சுற்றுப் புறச் சூழல் மாசான புகை மற்றும் இரைச்சல் இரண்டுமே இருக்காது என்பதை கவனியுங்கள் என்கிறது அல்ஸ்டாம்.

மற்ற நாடுகள்

மற்ற நாடுகள்

பிரிட்டன், நெதர்லாந்து, டென்மார்க், நார்வே, இத்தாலி மற்றும் கனடா போன்ற நாடுகள் தற்போது ஹைட்ரஜன் ரயில்கள் மீது அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்களாம். பிரான்ஸ் நாடு ரயில்களுக்கு ஆர்டரே கொடுத்து விட்டதாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+