கடந்த சில தினங்களாகவே சர்வதேச பங்கு சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து காணப்படுகின்றன.
உலகின் மிகப்பெரிய இரு பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே, வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

அதிலும் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் என்றும் சீனாவுக்கு மீண்டும் 300 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களுக்கு 10 சதவிகித வரியை உயர்த்த போவதாக, என்று கூறினாரோ அன்றிலிருந்து கடும் வீழ்ச்சி கண்டு காணப்படுகிறது.
ஏற்கனவே இந்த பிரச்சனையால் உலகப் பொருளாதாரம் மந்த மடைந்து வருவதாக உலக வங்கியும் கூறியுள்ளது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் சர்வதேச பங்கு சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. மேலும் இந்த வீழ்ச்சி அமெரிக்க பங்கு சந்தையையும் விட்டு வைக்கவில்லை.
ஆமாங்க.. கடந்த திங்கட்கிழமையன்று 500 கோடிஸ்வரர்கள், அவர்களின் மொத்த நிகர மதிப்பில் 2.1 சதவிகிதத்தை இழந்துள்ளனராம். அதிலும் அமெரிக்கா - சீனாவுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக Bloomberg Billionaires Index ல் உள்ள 21 நபர்கள் மட்டும் 1 பில்லியன் டாலர்களுக்கும் மேல், ஒரு நாளில் இழந்துள்ளனராம்.
ஆமாங்க.. அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் ஒரு நாளில் 3.4 பில்லியன் டாலர்களை இழந்துள்ளராம். இதே Bernard Jean Étienne Arnault is a French business magnate 3.2 பில்லியன் டாலர்களையும் இழந்துள்ளதாராம்.
இதுவே பேஸ் புக் நிறுவனத்தின் தலைவர் mark zuckerberg 2.8 பில்லியன் டாலரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இது தவிர இந்தியாவின் முன்னணி பணக்காரரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு 2.4 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதில் பங்கு சந்தையின் தந்தை என்று கூறப்படும் பில்கேட்ஸ்க்கும் 2 பில்லியன் டாலர்களும் இழப்பு ஏற்பட்டுள்ளதாம்.
இவர்கள் மட்டும் அல்ல, உலக நாடுகளின் மற்ற சந்தைகளிலும் இதே கதி தானாம். அதிலும் பல தனிப்பட்ட முதலீட்டாளர்களும் கோடிக் கணக்கில் இழந்து தவித்து வருகிறார்களாம்.
More From GoodReturns

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்: நாளை இந்திய பங்குச்சந்தைகள் என்ன ஆகும்?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!



Click it and Unblock the Notifications