ஆன்லைன் வர்த்தகத்தில் பல கோடி ரூபாய் குவித்து உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து கோலோச்சி வரும் அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசாஸ்க்கு இரண்டு நாளில் 1.43 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் அமெரிக்க பணக்காரர்கள் பலருக்கும் இதே போன்ற நஷ்டம் ஏற்பட்டு இருக்கு. வாங்க அவங்களையும் கொஞ்சம் கவனிப்போம்.
அமேஸான்
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், உலகின் மிகப்பெரிய வணிக நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. சுமார் 5 லட்சம் நிரந்தர மற்றும் தற்காலிக ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள். உலகில் அதிக மதிப்பு கொண்ட நிறுவனங்கள் பட்டியலில் ஆப்பிளுக்கு அடுத்த படியாக அமேசான் 2-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவராக ஜெஃப் பிசாஸ் இருந்து வழிநடத்தி வருகிறார். இவர் அமேசான் நிறுவனத்தை 1994-ம் ஆண்டு தொடங்கினார்.
ஃபோர்ப்ஸ்
புகழ்பெற்ற ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் இந்த ஆண்டு முதலிடம் பிடித்தார். இவரின் மொத்த சொத்து மதிப்பு141.9 பில்லியன் டாலர். கடந்த ஆண்டு வரை முதலிடம் பிடித்து வந்த மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இந்த ஆண்டு 2-வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 92.9 பில்லியன் டாலர்.
ஜெஃப் பிசாஸ்
ஜெஃப் பிசாஸின் சொத்து மதிப்பு கடந்த இரண்டு நாட்களில் 1.43 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் பங்குச்சந்தைகளில் ஐடி நிறுவன பங்குகள் இரண்டு நாட்களாக பெரும் சரிவை சந்தித்தன. இதில் அமேஸான் நிறுவன பங்குகளும் கணிசமான சரிவை சந்தித்துள்ளன. சுமார் 19.2 பில்லியன் டாலர்கள் அளவுக்கு அவருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 1.43 லட்சம் கோடி ரூபாய்.
ப்ளூம்பெர்க்
ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள பணக்காரர்கள் பட்டியலில் 500 பேரின் சொத்து மதிப்புகள் 2 நாட்களில் ஒட்டுமொத்தமாக 99 பில்லியன் டாலரகள் வரை சரிந்துள்ளது. கடந்த ஜூலை மாதத்துக்குப் பின் ஜெப் பெசோஸ் சொத்து மதிப்பு மிக அதிகமான அளவு சரிந்துள்ளது. பெசோஸுக்கு அடுத்தபடியாக தொழிலதிபர் வாரன் பஃபெட்டின் சொத்து மதிப்பு 4.5 பில்லியன் டாலர் சரிநதுள்ளது.
தொடரும் பணக்கார இழப்புகள்
பில்கேட்ஸ், மெக்ஸிகோவைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவன உரிமையாளர் கார்லோஸ் ஸ்லிம் உள்ளிட்டோரின் பட்டியலிடப்பட்ட பங்குகளும் கடும் சரிவை சந்தித்துள்ளன. இதனால் அவர்களது சொத்து மதிப்பும் குறைந்துள்ளது. இந்தியாவில் முகேஷ் அம்பானி கூட சுமார் 1.63 லட்சம் கோடி சரிவை சந்தித்து அவர்களுக்கு சியர்ஸ் சொல்லி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications