செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டும் இயங்கும் ரோபோக்கள் எண்ணிக்கை மற்றும் அதன் பயன்பாடு இன்றைய தொழில்நுட்ப மயமான உலகில் மிகமுக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இதன் பயன்பாடு தொடர்ந்து அதிகரிக்கும் காரணத்தால் பல்வேறு துறைகளில் மக்கள் வேலைவாய்ப்பை இழந்து வருகின்றனர்.
இந்நிலையில் நியூசிலாந்தில் ரோபோ அரசியல்வாதியை உருவாக்கியுள்ளனர். இது செய்யும் வேலையைப் பாருங்க. அட லஞ்சம் எல்லாம் வாங்காதுப்பா..!
ரோபோ அரசியல்வாதி
நியூசிலாந்து நாட்டு விஞ்ஞானி ஒருவர் இந்நாட்டு ஹவுசிங், கல்வி மற்றும் குடியுரிமை சார்ந்த அரசு சட்டதிட்டங்களையும், விதிமுறைகளையும் குறித்த சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் ஒரு ரோபோவை உருவாக்கியுள்ளார்.
இது மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்கும் வகையில் இயங்கும் காரணத்தால் இதனை ரோபோ அரசியல்வாதி எனக் கூறப்படுகிறது.
சாம்
நிக் கிரீட்சென் 49வயதான நியூசிலாந்து தொழிலதிபர் இந்த விர்ச்சுவல் அரசியல்வாதியை உருவாக்கி இதற்குச் சாம் என்று பெயர் சூட்டியுள்ளார்.
2020இல்
சாம் மற்றும் அதன் தொழில்நுட்பத்தைத் தொடர்ந்து மெருகேற்றுவதன் மூலம் 2020இல் சாம் நியூசிலாந்து தேர்தலில் ஒரு வேட்பாளராகக் கூட நிறுத்த முடியும். ஆனால் அரசியல் அமைப்பில் இதற்கான இடமில்லை என்பதால் மக்களுக்குப் பயன்படும் வகையில் சாம்-ஐ பயன்படுத்தலாம் என நிக் கிரீட்சென் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியா
சில மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபிய அரசு உலகிலேயே முதல் முறையாகச் சோபியா என்னும் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் ஒரு ரோபோவிற்குக் குடியுரிமை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
ஆதிக்கம்..
தொழில்நுட்பம் சார்ந்த வேலைகளில் மட்டுமே இருந்து வந்த செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோக்கள் தற்போது குடியுரிமை பெற்று அரசியலிலும் ஈடுபடத் துவங்கியுள்ளது.
அடுத்த 50 வருடத்தில் ஐரோபாட் படத்தில் வருவது போல் வீட்டிற்கு ஒரு ரோபோ இருக்கவும் வாய்ப்புகள் உள்ளது.
21 வேலைவாய்ப்புகள்
செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோக்கள் வந்தாலும் அடுத்த 10 வருடத்திற்கு எந்தொரு பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும் சுமார் 21 வேலைவாய்ப்புகள் உள்ளது உங்களுக்குத் தெரியுமா..?


Click it and Unblock the Notifications