சென்னைக்கு இல்லாத பெருமை மும்பைக்கு கிடைத்தது.. உலகளவில் புதிய அந்தஸ்து!

உலகின் செல்வம் படைத்த நகரங்களில் பட்டியலில் ஒரு இந்திய நகரம்.

ஆசிய நகரங்கள் உலகின் முக்கியச் செல்வச் செழிப்பு படைத்த நாடுகளாக வளர்ந்து வருகின்றன. இந்தப் பட்டியலானது உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் முக்கிய நகரங்களில் எவ்வளவு கோடிஸ்வரர்கள் உள்ளனர், மக்கள் எவ்வளவு நபர்கள் வசிக்கின்றனர், அவர்கள் சொத்து எவ்வளவு, பங்குச் சந்தை முதலீடு எவ்வளவு, செய்யும் வணிகங்கள் போன்றவற்றை வைத்துத் தயாரிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள டாப் 15 செல்வம் படைத்த நகரங்கள் குறித்த விவரங்களை இங்குப் பார்க்கலாம்.

 1. நியூ யார்க்

1. நியூ யார்க்

உலகின் பணக்கார நகரங்களில் பட்டியலில் 3.0 டிரில்லியன் டாலர் செல்வ மதிப்புடன் முதல் இடத்தினை நியூ யார்க் பிடித்துள்ளது. உலகின் இரண்டு மிகப் பெரிய பங்கு சந்தைகளான டாவ் ஜோன்ஸ் மற்றும் நாஸ்டாக் இங்குத் தான் அமைந்துள்ளன. நியூ யார்க் சுற்றிலும் மிகப் பெரிய தீவுகளிலும் அதிக அளவிலான செல்வம் உள்ளன. அவற்றின் மதிப்பு போன்றவை இதில் சேர்க்கப்படவில்லை.

 2. லண்டன்

2. லண்டன்

2.7 டிரில்லியன் டாலர் செல்வ மதிப்புடன் லண்டன் மூன்றாம் இடத்தினைப் பிடித்துள்ளது. இந்த நகரத்தில் தான் உலகின் 6 மிகப் பெரிய பங்கு சந்தைகள் உள்ளன. லண்டனைச் சுற்றியுள்ள சிறு நகரங்களான வின்ட்சர், அஸ்காட், விர்ஜினியா வாட்டர், லெதர்ஹெட், வெய்பிரிட்ஜ், ஹென்றி, மார்லோ மற்றும் பிரே உள்ளட்டவையிலும் செல்வம் படைத்தவர்கள் அதிகளவில் உள்ளனர்.

 3. டோக்கியோ

3. டோக்கியோ

ஜப்பானின் தலைநகரான டோக்கியோ 2.5 டிரில்லியன் செல்வ மதிப்புடன் மூன்றாம் இடத்தினைப் பிடித்துள்ளது. உலகின் மூன்றாம் மிகப் பெரிய பங்கு சந்தை இங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

 4. சான் பிரான்சிஸ்கோ பே பகுதி

4. சான் பிரான்சிஸ்கோ பே பகுதி

இப்பகுதியில் உள்ள மொத்த சொத்து 2.3 டிரில்லியன் டாலர்களாகும். சான் பிரான்சிஸ்கோ, சிலிக்கான் வேலி, சான் ஜோஸ், ஓக்லாண்ட், பாலோ ஆல்டோ, லாஸ் ஆல்டோஸ், ரெட்வுட் சிட்டி, மொராக், சான் மேட்டோ மற்றும் மவுண்டெயின் வீவ் ஆகிய இடங்களின் செல்வங்கள் மதிப்பு இதில் அடங்கும்.

5. பீஜிங்

5. பீஜிங்

பீஜிங்கில் உள்ள மொத்த செல்வ மதிப்பு 2.2 டிரில்லியன் டாலர். சீனாவின் தலைநகரான பீஜிங்கில் தான் இந்த நாட்டின் முக்கிய நிறுவனங்கள் எல்லாம் அமைந்துள்ளன.

6. ஷாங்காய்

6. ஷாங்காய்

ஷாங்காய் நகரத்தின் மொத்த சொத்து மதிப்பு 2.0 டிரில்லியன் டாலர் ஆகும். சீனாவின் நிதி நகரமாக ஷாங்காய் உள்ளது. ஷாஙாய் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் இங்குத் தான் அமைந்துள்ளது. சீனாவின் மிகப் பெரிய பங்குச் சந்தையாகவும் உலகின் 4-ம் மிகப் பெரிய பங்கு சந்தையாகவும் சீனா உள்ளது.

7. லாஸ் ஏஞ்சல்ஸ்

7. லாஸ் ஏஞ்சல்ஸ்

நகரின் மொத்த செல்வம் $ 1.4 டிரில்லியன் ஆகும். லாஸ் ஏஞ்சல்ஸிற்கான புள்ளிவிவரங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ், மலிபு மற்றும் பெவர்லி ஹில்ஸ் ஆகியவற்றின் செல்வத்தையும் உள்ளடக்கியது ஆகும்.

8. ஹாங் காங்

8. ஹாங் காங்

ஹாங் காங்கில் 1.3 டிரில்லியன் டாலர் மதிப்பிலான செல்வம் உள்ளது. ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளின் கேட்வேயாக ஹாங்காங் உள்ளது. மேலும் உலகின் 7ம் மிகப் பெரிய பங்குச் சந்தையினை வைத்துள்ளது.

 9. சிட்னி

9. சிட்னி

சிட்னி நகரின் மொத்த சொத்துக்கள் 1.0 டிரில்லியன் டாலர் ஆகும். சிட்னி ஆசியாவிலேயே முதன்மையான நிதி மையங்களில் ஒன்றாக விளங்குகிறது. அதன் வாழ்க்கை, பாதுகாப்பு மற்றும் காலநிலை காரணமாக உலகின் செல்வந்தர்கள் அதிகம் விரும்பப்படும் நாகரில் ஒன்றாகும். முக்கியத் தொழில்கள் நிதி சேவைகள், ரியல் எஸ்டேட், ஐடி, சுற்றுலா, சில்லறை மற்றும் ஊடகங்கள்.

10. சிங்கப்பூர்

10. சிங்கப்பூர்

உலகளவில் வணிகம் செய்வதில் நட்புறவான நாடுகளில் சிங்கப்பூர் ஒன்றாகும் இங்கு 1.0 டிரில்லியன் டாலர் மதிப்பிலான செல்வம் மதிப்பு உள்ளது. அதுமட்டும் இல்லாமல் இங்கு வரி விகிதம் மிகவும் குறைவு.

11. சிக்காகோ

11. சிக்காகோ

சிக்காகோவில் 988 பில்லியன் டாலர் மதிப்பிலான செல்வம் உள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன. பல முக்கியத் துறைகளில் சிக்காகோ சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. முக்கியத் தொழில்களில் போக்குவரத்து, நிதி சேவைகள் (காப்பீடு), எப்எம்சிஜி மற்றும் உற்பத்தி ஆகியவை அடங்கும்.

12. மும்பை

12. மும்பை

இந்தியாவின் பொருளாதார நகரம் என்று அழைக்கப்படும் மும்பையில் 950 பில்லியன் டாலர் செல்வம் உள்ளது. இங்கு 28 பில்லியனர்களின் வீடுகள் உள்ளன. உலகளவில் 12வது மிகப் பெரிய பங்கு சந்தை என்று கூறப்படும் மும்பை பங்கு சந்தை இங்கு அமைந்துள்ளது. நிதி சேவைகள், ரியல் எஸ்டேட் மற்றும் ஊடகம் போன்றவை முக்கியத் தொழில் ஆகும்.

 13. டொராண்டோ

13. டொராண்டோ

டொராண்டோ நகரின் மொத்த சொத்து 944 பில்லியன் டாலர்களாகும். டொராண்டோவில் உலகின் 9 வது மிகப் பெரிய பங்கு சந்தை உள்ளது. முக்கியத் தொழில்கள் நிதி சேவைகள், ரியல் எஸ்டேட், தகவல் தொழில்நுட்பம், செய்தி ஊடகம் மற்றும் தொலைத்தொடர்புகள் ஆகியவை அடங்கும்.

14. பிராங்பேர்ட்

14. பிராங்பேர்ட்

பிராங்பேர்ட் நகரின் மொத்த சொத்து 912 பில்லியன் டாலர்களாகும். பிராங்போர்ட்டில் உலகின் 11 வது மிகப் பெரிய பங்குச் சந்தை உள்ளது, இது ஐரோப்பாவின் முக்கிய நிதி நகரம் ஆகும். முக்கியத் தொழில்கள் நிதி சேவைகள் மற்றும் தொழில்முறை சேவைகள்.

15. பாரிஸ்

15. பாரிஸ்

நகரின் மொத்த சொத்து 860 பில்லியன் டாலர்களாகும். முக்கியத் தொழில்கள் நிதி சேவைகள், ரியல் எஸ்டேட் மற்றும் உற்பத்தி (வாகன, ஆடம்பர நுகர்வு).

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

'அன்றும் இன்றும்'..!

'அன்றும் இன்றும்'..!

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+