எலான் மஸ்க்,உலக அளவில் இவரை தெரியாத ஆளே இருக்க முடியாது, பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உரிமையாளர், உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் ,கிட்டத்தட்ட 41, 560 கோடி அமெரிக்க டாலர்களுக்கு சொந்தக்காரர்.
எலான் மஸ்கிற்கு மூன்று மனைவிகள் மற்றும் 14 குழந்தைகள் இருக்கின்றனர். தன் குழந்தைகள் மீதும் இவர் தனி கவனம் செலுத்தி பார்த்துக் கொண்டு வந்தாலும் இவருக்கு ஒரு திருநங்கை மகள் இருக்கிறார். தற்போது 21 வயதாக கூடிய அவருடைய பெயர் விவியன் வில்சன். விவியன் வில்சன் எலான் மஸ்கின் மூத்த மகள். தனக்கு 16 வயதாகும் போதே தந்தையும் வேண்டாம் அவரின் சொத்தும் வேண்டாம் என கூறி உதறி சென்றவர்.

தி கட் என்ற தளத்திற்கு பேட்டி அளித்துள்ள விவியன் வில்சன் தற்போது தான் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு சிறிய அறையில் வசித்து வருவதாகவும்ம் நிதி ரீதியாக மிகுந்த கஷ்டப்படுவதாகவும் கூறியுள்ளார். நானே சம்பாதித்து என் செலவுகளை பார்த்து கொள்கிறேன், சிக்கனமாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
என்னிடம் நிறைய பணம் இருக்கிறது நான் உலகின் நம்பர் ஒன் பணக்காரனின் மகள் அதனால் என்னிடம் நிறைய பணம் இருக்கிறது என பலரும் நினைக்கிறார்கள் ஆனால் நிதி ரீதியாக நான் மிகவும் சிரமப்படுகிறேன் என தெரிவித்திருக்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு வில்சன் தன்னுடைய தந்தையான எலான் மஸ்க் உடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டார். இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் எலான் மஸ்கை விமர்சனம் செய்து வருகிறார் .

எலான் மஸ்க் பாலின பாகுபாடு கொண்டவர் பெண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் தராதவர் என தொடர்ச்சியாக கூறி வருகிறார். மேலும் அவர் கொடுத்த ஒரு ஐவிஎஃப் சிகிச்சை தான் தன்னுடைய இந்த நிலைமைக்கு காரணம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். வில்சன் 2022 ஆம் ஆண்டு திடீரென நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார் தன்னுடைய பெயரையும் பாலினத்தையும் மாற்ற வேண்டும் என வழக்கு தொடர்ந்ததன் மூலம் உலகம் முழுவதும் அறியும் நபராக மாறினார். 16 வயதிலேயே தன்னுடைய தந்தையை விட்டு பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டார்.
தற்போது குடும்பத்தினருடன் அவர் சேர்ந்து இல்லை தனியாக தான் வசிக்கிறார் . மேலும் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதில் தனக்கு விருப்பமில்லை என கூறும் அவர் தற்போதைக்கு தான் மாடலிங் செய்து அதில் வரும் பணத்தில் வசித்து வருவதாக கூறியிருக்கிறார் .மூன்றாம் பாலினத்தவர் மற்றும் எல் ஜி பி டி கம்யூனிட்டியை சேர்ந்தவர்களின் உரிமைக்காக தொடர்ந்து பேசக் கூடிய ஒரு நபராக அவர் மாறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications