சவூதி அரேபியாவின் அரச குடும்பம் தான் உலகிலேயே மிகப் பெரிய பணக்கார குடும்பம் ஆகும். இக்குடும்பத்தின் நிகர சொத்து மதிப்பு 1.4 டிரில்லியன் டாலர்கள் ஆகும். சவூதி அரச குடும்பத்தில் 15 ஆயிரம் பேருக்கு மேல் உள்ளனர். அவர்களுக்கு உலகிலேயே அதிகமான எண்ணெய் கிணறுகள் உள்ளன. அதன்மூலம் ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி ரூபாய் வருமானம் வருகிறது.
மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவூத் தான் குடும்பத் தலைவர். நாட்டின் எண்ணெய் வளத்திலிருந்து இவ்வளவு செல்வம் அவர்களுக்குச் சேர்ந்துள்ளது.

அல்வலீத் பின் தலால் அல் சவூத் தான் இந்த குடும்பத்தில் அதிக செல்வம் வைத்திருப்பவர். 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அவரது நிகர சொத்து மதிப்பு ஆகும். மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவூத் மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானும் தங்களது உண்மையான சொத்து விவரத்தை வெளியிடவில்லை.
இவர்கள் எங்கு சென்றாலும் தங்களது சொந்த போயிங் விமானத்தில் செல்கின்றனர். போகும்போது செலவுக்கு பல நூறு கோடிகளை எடுத்துச் செல்கின்றனர்.
தற்போது சவூதி அரேபியன் வசிக்கும் அல் யமாஹா அரண்மனை 4 மில்லியன் சதுர அடிக்கு பரந்து விரிந்துள்ளது. உள்ளூர் நஜ்டி கட்டடக்கலையில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆடம்பர சொகுசு மாளிகையில் திரையரங்கம், பல நீச்சல்குளங்கள், மசூதி, ஆயிரக்கணக்கான அறைகள் உள்ளன.
அவர்கள் எப்போதும் தங்க முலாம் பூசிய கார்களைத்தான் ஓட்டுகின்றனர். விலை உயர்ந்த படகுகளை வைத்திருக்கின்றனர். பிரபல பிராண்டுகளின் காஸ்ட்லி உடைகளைப் பயன்படுத்துகின்றனர்
400 மில்லியன் செரீன் சூப்பர்படகில் இரண்டு ஹெலிபேடுகள், விளையாட்டு மைதானம் உள்ளது.
சவூதி அரச குடும்பத்துக்குச் சொந்தமான பல குரூஸ் படகுகளில் இதுவும் ஒன்று. இத்துடன் ஒரு போயிங் 747-400 ரக விமானமும் உள்ளது. இது உலகிலேயே பெரிய கமர்ஷியல் விமானமாகும். இந்த விமானத்தில் பல சொகுசு வசதிகள் நிரம்பியுள்ளன.
மற்றொரு குடும்ப உறுப்பினரான துருக்கி பின் அப்துல்லாவுக்கு சொந்தமாக பெரிய கார் கலெக்ஷன் உள்ளது. லம்பார்கினி, அவென்டாடர் சூப்பர் வெலோஸ், ரோஸ் ராய்ஸ் பான்டம் கூப், மெர்சிடஸ் ஜீப், பென்ட்லே ஆகியவையும் உள்ளன. ஒவ்வொரு வாகனமும் 1.2 மில்லியன் டாலர்களாகும்.


Click it and Unblock the Notifications