WWE-கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அதுவும் 80's மற்றும் 90's கிட்ஸ்களின் ஃபேவரைட் கேம் சேனலாகவும் இன்று வரை இருந்து வருகிறது.
இந்நிலையில் வேர்ல்ட் ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட் (WWE) நிறுவனம் அல்டிமேட் ஃபைட்டிங் சாம்பியன்ஷிப்பை (UFC) நடத்தும் நிறுவனத்துடன் இணைந்து 21.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள விளையாட்டு பொழுதுபோக்கு நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.
பங்கு விகிதம்!
UFC உடன் இணைந்து WWE இணைந்து உருவாக்கும் புதிய நிறுவனத்தில், 51 சதவீத கட்டுப்பாட்டுப் பங்குகளை எண்டெவர் குரூப் ஹோல்டிங்ஸ் இன்க் பெறுகிறது. தற்போதுள்ள WWE பங்குதாரர்கள் 49% பங்குகளை வைத்திருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.
தலைவர்கள்!
இந்த புதிய நிறுவனத்தில் எண்டெவர் தலைமை நிர்வாக அதிகாரி அரி இமானுவேல் இப்புதிய கூட்டணி நிறுவனத்தை வழிநடத்துவார் எனவும், WWE இன் செயல் தலைவர் வின்ஸ் மக்மஹோன் புதிய நிறுவனத்திலும் அதே பதவியில் இருப்பார் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்பெனி டிமாண்ட்!
WWE இன் நிறுவனரும் பெரும்பான்மை பங்குதாரருமான வின்ஸ் மக்மஹோன் ஜனவரி மாதம் மீண்டும் நிறுவனத்துடன் இணைந்து, விற்பனைக்கான சாத்தியக் கூறுகைகளைப் பற்றிக் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து நிறுவனம் வளர்ச்சிப் பாதையில் சென்று, புது நிறுவனத்தை உருவாக்கும் ஐடியாவை சாத்தியமாக்கியுள்ளது.
ரசிகர் கூட்டம்!
WWE நிறுவனம் சென்ற நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில், நிறுவனத்தின் நிகழ்ச்சிகள் சமூக ஊடகங்களில் 16 பில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சென்றுள்ளது. அதுமட்டுமின்றி யூடியூப்பில் 94 மில்லியன் சந்தாதாரர்களுடன் (Subscribers) உடனும், டிக்டாக்-கில் 20 மில்லியன் ஃபாலோயர்களையும் தன்வசம் வைத்துள்ளது.
இதுவே இந்நிறுவனத்திற்கு பலகோடி வருமானத்தை ஈட்டித்தரும் என்பதுதான் ஹைலைட்ஸ்.
WWE இன் பெண் வீராங்கனைகளுக்கு தனிக் ரசிகர் கூட்டம்!
WWE இன் பெண் மல்யுத்த வீரர்களுக்கு சமூக ஊடகங்களில் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது மேலும் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் முழுவதும் உலகில் அதிகம் பின்தொடரும் முதல் 15 பெண் விளையாட்டு வீரர்களுக்குள் WWE இன் பெண் மல்யுத்த வீராங்கனைகளும் அடங்குவர்.
2 மாதங்களில் பல பில்லியன் வியூஸ்!
WWE இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், 7.5 பில்லியனுக்கும் அதிகமான டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகப் பார்வைகளைப் பெற்றுள்ளது, இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 15 சதவீதம் வளர்ச்சியாகும்.
பங்கு விலை!
இன்றைய நிலவரப்படி WWE இன் ஒரு பங்கு விலை 2.15% சரிவுடனும், எண்டெவர் நிறுவனத்தின் பங்குகள் நேற்று 3 சதவீதம் உயர்வைத் தொடர்ந்து இன்று 5.89% சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications