பெய்ஜிங்: சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவில் பெரிய விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மோதல்கள் அதிகரித்திருப்பதே இதற்கு முக்கிய காரணம். ஏற்கனவே சர்வதேச அளவில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டிருக்கும் சீனாவுக்கு தற்போது உள்நாட்டிலும் மிகப்பெரிய பிரச்சினை உருவாகி இருக்கிறது. அது என்ன என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம்.
சீனாவில் பணவாட்ட பிரச்சனை மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்து இருக்கிறது. பொதுவாக பொருட்களின் விலை ஏறுவதும் அதை வாங்குவதற்கான பணத்தின் மதிப்பு குறைவதையும் நாம் பணம்வீக்கம் என அழைக்கிறோம். ஆனால் இதற்கு எதிர்மாறான ஒன்றுதான் பணவாட்டம். அதாவது பொருட்களின் விலை வேகமாக சரிவடைந்து வருவதே பணவாட்டம் என அழைக்கிறோம்.

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு வேகமாக குறைந்து வரும், அதே சமயத்தில் அந்த நாட்டில் நாணயத்தின் மதிப்பு வேகமாக அதிகரிக்கும். அதாவது மக்கள் கைகளில் அதிக பணப்புழக்கம் இருக்கும் பொருட்களின் மதிப்பு குறைந்து கொண்டே செல்லும்.
பணவாட்டம் பொருட்களை வாங்கி பயன்படுத்தக்கூடிய சாமானிய மக்களுக்கு சாதகமானதாக தெரிந்தாலும், நீண்ட கால போக்கில் நாட்டின் பொருளாதாரத்திற்கு அது பாதிப்பை ஏற்படுத்தும். சீனாவை பொறுத்தவரை அங்கே தற்போது பொருட்களின் உற்பத்தி அதிகரித்துவிட்டது, இதன் காரணமாக சீன சந்தையில் பல்வேறு பொருட்களின் விலையும் குறைந்த வண்ணம் இருக்கின்றன.
சீனாவில் முட்டையில் தொடங்கி உணவு வரை அனைத்தின் விலையும் வேகமாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக வணிகங்கள் தற்போது லாபம் இல்லாமல் இயங்குகின்றன. வணிகங்களுக்கு லாபம் கிடைக்காததால் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றன. பல்வேறு பொருட்களும் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு விட்டதால் அவற்றின் டிமாண்ட் குறைந்து , விலையும் குறைந்து வருகிறது.
அமெரிக்காவுடன் தற்போது வர்த்தக மோதல் ஏற்பட்டிருப்பதால் சீனப் பொருட்கள் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படுவதும் தற்போது தடைப்பட்டு இருக்கிறது. இதுவும் சீன பொருளாதாரத்தையும் சீன உற்பத்தியாளர்களுக்கும் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 145% இறக்குமதி வரியை விதித்திருக்கிறது. இதன் காரணமாக சீன பொருட்களை அமெரிக்க நிறுவனங்கள் இறக்குமதி செய்வது தடைப்பட்டு இருக்கிறது. இதனால் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கும் பொருட்கள் அங்கேயே தேங்கி விடக்கூடிய சூழல் உண்டாகி இருக்கிறது.
தற்போது சீனாவை பொருத்தவரை உற்பத்தியை கட்டுப்படுத்தி பொருட்களின் விலை மேற்கொண்டு குறைவதை தடுக்க வேண்டும். அது மட்டும் இன்றி அமெரிக்காவுக்கு மாற்றான ஒரு சந்தையை சீனா தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. சீன பொருளாதாரம் கொரோனாவுக்கு பிறகு படி படிப்படியாக வளர்ந்து வருகிறது, ஆனால் பணவாட்ட பிரச்சனையும் அமெரிக்காவுடன் ஏற்பட்டிருக்கும் வர்த்தக மோதலும் பெரும் தலைவலியாக மாறி இருக்கிறது.


Click it and Unblock the Notifications