இந்தியா வந்த கையோடு அமெரிக்கா செல்லும் சீன அதிபர்..!! பயங்கர பிளானிங்கா இருக்கே..!!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள கடந்த வாரம் இந்தியா வந்த சீன அதிபர் ஜீ ஜின்பிங் அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல இருப்பது உறுதியாகியுள்ளது. இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின் ஆகியோரை சந்தித்த ஜீ ஜின்பிங் தற்போது அமெரிக்க அதிபர் டிரம்பையும் சந்திக்க உள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அழைப்பை ஏற்று, சீன அதிபர் ஜீ ஜின்பிங் அரசு முறை பயணமாக அடுத்த வாரம் வாஷிங்டன் செல்கிறார். ஏற்கனவே உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் பல முக்கிய பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில் டிரம்ப் - ஜின் பிங் சந்திப்பு உலக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்தியா வந்த கையோடு அமெரிக்கா செல்லும் சீன அதிபர்..!! பயங்கர பிளானிங்கா இருக்கே..!!

கடந்த மே மாதம் டிரம்ப் சீனா சென்றிருந்தார், அப்போது ஜீ ஜின்பிங் அமெரிக்கா வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். இதன்படி செப்டம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஜீ ஜின் பிங் அமெரிக்கா செல்கிறார். இந்த பயணத்தின் முக்கிய நிகழ்வுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 23ஆம் தேதி சீன அதிபர் ஜின்பிங் மற்றும் அவரது மனைவி பெங் லியுவான் ஆகியோர் வாஷிங்டன் டி.சி. அருகே உள்ள ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் ராணுவ தளத்திற்கு விமானத்தில் வந்து இறங்குகின்றனர். அங்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரில் சென்று அவர்களை வரவேற்க உள்ளார். ராணுவ தளத்தில் இதுபோன்ற வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுவது மிகவும் அரிதான ஒன்றாகும்.

இதனை அடுத்து செப்டம்பர் 24ஆம் தேதி அன்று சீன அதிபருக்கு ரோஸ் தோட்டத்தில் ராணுவ மரியாதை அணிவகுப்பு நடைபெறும். பின்னர், இரு நாட்டு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்கள். அன்றைய தினம் மாலை சிறப்பு அரசு விருந்து அளிக்கப்படுகிறது. இந்த விருந்தின் தொடக்கத்தில் இரு தலைவர்களும் உரையாற்ற உள்ளனர்.

செப்டம்பர் 25அம் தேதி அன்று வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் தம்பதியினர் ஷி ஜின்பிங் தம்பதியினருக்கு தேநீர் விருந்து அளிப்பார்கள். அதன் பிறகு, அமெரிக்காவின் 250-வது சுதந்திர ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, வாஷிங்டனில் உள்ள தேசிய காப்பகத்திற்கு சென்று பார்வையிடுவார்கள்.

வெள்ளை மாளிகையில் நடைபெறும் இந்த அரசு விருந்து நிகழ்ச்சியில், உலகின் முன்னணி டெக் மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.அவர்களின் பட்டியலும் வெளியாகியுள்ளது.

ஜெஃப் பெசோஸ் - அமேசான் நிறுவனர்

எலான் மஸ்க் - டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ்

சுந்தர் பிச்சை - கூகுள்

மைக்கேல் டெல் - டெல் டெக்னாலஜிஸ்

ஜென்சன் ஹுவாங்க் - என்விடியா

சாம் ஆல்ட்மேன் - ஓபன் ஏஐ

டிம் குக் - ஆப்பிள்

ஈரான் போர், உலகளாவிய பொருளாதார சூழல், வர்த்தக மோதல்களுக்கு மத்தியில் இருபெரும் நாடுகளின் தலைவர்கள் சந்தித்து கொள்வது உலகின் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் நிகழ்வாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+