சீனாவின் இரண்டாவது அதிகாரம் மிக்க பதவிக்கு அதிபர் ஜின் பிங்கின் (xi jinping) விசுவாசியான லி கியாங் (Li Qiang) நியமிக்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் பிரீமியர் எனக் குறிப்பிடப்படும் பிரதமர் பதவி பெயர் அளவில் மட்டும் நாட்டை ஆட்சி செய்யும் பதவி ஆகும். ஆனால் முழு அதிகாரமும் அதிபர் ஜி ஜின்பிங் வசம்தான் உள்ளது. இருந்தாலும் அந்நாட்டில் அதிபருக்கு அடுத்த செல்வாக்கும் அதிகாரமும் கொண்ட பதவி பிரதமர் பதவி ( Premier of China ) தான்.
இந்நிலையில் சீனாவில் அதிபர் ஜி ஜின்பிங்-க்கு நெருக்கமானவரான லி கியாங் (Li Qiang) அந்நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லீ காச்சியாங்
இதற்கு முன் பிரதமராக இருந்த லீ காச்சியாங்கின் (Li Keqiang) பதவிக்காலம் முடிந்ததை அடுத்து புதிய பிரதமராக யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு சீனாவில் நிலவுகிறது. பலரும் அதிபர் ஜின்பிங்கு-க்கு விசுவாசமானவரான லி கியாங் பிரதமராக வாய்ப்பு உள்ளதாகக் கூறுகின்றனர்.
ஜிஜியாங் மாகாணம்
லீ கியாங், ஜிஜியாங் மாகாணத்தில் தலைமை ஊழியர்கள் அதிகாரியாக இருந்தார். ஜி ஜின்பிங் ஆட்சி காலத்தில் அவருடைய நெருகிய நண்பரும், நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தார். இந்த நிலையில் தான் 2013 இல் பொருளாதார அதிகார மையமான ஜிஜியாங் மாகாணத்தில் ஆளுநராக பதவி லீ கியாங்-க்கு கொடுக்கப்பட்டது. அதே ஆண்டில் Xi ஜனாதிபதியானார்.
பராக் ஒபாமா
2015 ஆம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவைச் சந்திப்பதற்காக அமெரிக்காவிற்குச் ஜி ஜின்பிங் சென்றிருந்தபோது, லீ கியாங் உடன் சென்றார். மேலும் Zhejiang மாகாணம் செல்வ செழிப்புடன் இருக்க இவர் முக்கிய காரணம்.
இதன் பின்னணி என்ன?
கொரோனா பரவலின்போது ஷாங்காய் நகரில் லி கியாக் மேற்பார்வையில் லாக்டவுன் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. கியாங் திறமையாக செயல்பட்டு கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வந்தார் எனவும், அவர் சிறந்த நிர்வாகி என்பதாலேயே பிரதமர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
வணிக நட்பு
லி கியாங் வணிக நட்பு மற்றும் நடைமுறைச் சிந்தனை உடையவர் மற்றும் டெஸ்லாவை ஷாங்காய்க்குக் கொண்டு வருவதில் முக்கியப் பங்கு அவருக்கு உண்டு. டெஸ்லா மூலம் இப்போது செமிகண்டக்டர் மற்றும் மேம்பட்ட உற்பத்தி நிறுவனங்களைக் சீனா கொண்டுள்ளது.
வர்த்தக வாய்ப்புகள்
லி கியாங் ஆட்சிக்கு வந்தால் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ வணிகங்களுக்கு, எல்லை தாண்டிய வர்த்தகத்தை நடத்துவதில் அதிக சுதந்திரத்தை வழங்கக்கூடும் என வணிகத் துறையினர் நம்புகின்றனர்.
மக்கள் அதிருப்தி!
ஆனால் மற்றொரு தரப்பினர் அவர் கொரோனா தொற்றின் 2வது அலையில் நிலைமையைச் சரியாகக் கையாளாமல் போனதால் உணவுத் தட்டுப்பாடு உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்பட்டது என்றும் அவரை எப்படி பிரதமர் பதவியில் அமர வைப்பார்கள் போன்ற கருத்துக்களும் மக்களிடையே உள்ளது.
2 மாத காலம்
அதுமட்டுமின்றி கோவிட்-19 ஐ கட்டுக்குள் கொண்டுவருவதாக கூறி 2 மாத காலம் மக்களை வீட்டுக்குள்ளேயே சிறைபிடித்ததையும், அவரின் கடுமையான கையாளுதல்கள் மக்களை மிகவும் சிரமத்திற்குள்ளாக்கியது எனவும் சீனாவின் வெகுஜன் மக்கள் அவரின் மீதான அதிருப்தி கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.
ஜி ஜின்பிங் அதிகாரம்
ஆனால் 63 வயதான லி கியாங் சீனாவின் புதிய பிரதமர் பதவிக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. தனக்கு நெருக்கமான லி கியாங்கையே நியமனம் செய்வதன் மூலம் அதிபர் ஜி ஜின்பிங் தனது அதிகாரத்தை மேலும் வலுப்படுத்திக்கொள்ள முடியும் எனபதால் லி கியாங்கிற்கே வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்படுகிறது.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications