சீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி ஜூன் 25ஆம் தேதி ஹாங்காங் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. இதன் காரணமாகச் சியோமி நிறுவனத்தின் தலைவரான லீ ஜுன் அவர்களுக்கு வர்த்தக உலகிலேயே அதிகப்படியான போனஸ் தொகை வழங்கியுள்ளது சியோமி நிர்வாகம்.
1.5 பில்லியன் டாலர்
மிகவும் குறைந்த காலகட்டத்தில் பெரிய அளவிலான வளர்ச்சியைச் சியோமி அடைந்ததற்கு முக்கியமான காரணம் லீ ஜுன் என்றால் மிகையாகாது. இதனைக் கருத்தில் கொண்டு சியோமி நிர்வாகம் அவரைப் பெருமைப்படுத்தும் விதமாகச் சுமார் 1.5 பில்லியன் டாலர் அளவிலான பங்குகளைப் போனஸாக அளித்துள்ளது.
காரணம்
இந்தப் போனஸ் நடப்பு நிதியாண்டின் வர்த்தகமோ, லாபமோ, ஐபிஓவில் சியோமி ஏற்படுத்திய தாக்கமோ என எந்தக் காரணமும் இல்லாமல் அளித்துள்ளது என வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
56 ஊழியர்கள்
சியோமி பங்குச்சந்தையில் இறங்கியதன் வாயிலாக இந்திய வர்த்தகத்தின் தலைவரான மனு ஜெயின் உட்பட இந்நிறுவனத்தின் 56 ஊழியர்கள் மில்லியனராக உருவாக உள்ளனர்.
மனு ஜெயின் தற்போது சியோமியின் 2.3 மில்லியன் பங்குகளை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எவன் ஸ்பீஜெல்
இதேபோல் ஸ்னாப்சாட் பங்குச்சந்தையில் பட்டியலிடும் போது இந்நிறுவனத்தின் தலைவரான எவன் ஸ்பீஜெல்-க்கு 638 மில்லியன் டாலர் அளவிலான போனஸ் அளிக்கப்பட்டது. ஆனால் சியோமி நிர்வாகம் அளித்த தொகை வர்த்தக உலகில் இதுவரை யாரும் அளிக்காத தொகை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications