சீனாவின் மிகப்பெரிய டெக் ஜாம்பவானான ஜியோமி நிறுவனம் அதன் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சீனாவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் அங்கு கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அங்கு உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் சீனாவில் தொழில் துறை வளர்ச்சி என்பது மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஜியோமி பணி நீக்கம்
இதற்கிடையில் தான் தற்போது சீனாவின் டெக் ஜாம்பவானான ஜியோமி நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிகிறது. ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான ஜியோமி, அதன் ஸ்மார்ட்போன் மற்றும் இணைய சேவை செய்யும் பிரிவுகளில் பணி நீக்கம் செய்து உள்ளதாக ஹாங்காங் செய்தித்தாள் ஒன்று வெளியிட்டுள்ளது.
எத்தனை பேர் பணி நீக்கம்
இந்த பணி நீக்கத்தின் மூலம் ஜியோமியின் 15% ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் கடந்த செப்டம்பர் நிலவரப்படி 35,314 பேர் இருந்தனர். இதில் மொத்த பணியாளர்களில் சுமார் 32,000 பேர், சீனாவின் பிரதானமான பகுதியினை அடிப்படையாக கொண்டுள்ளனர்.
அதிக பாதிப்பு யாருக்கு?
ஜியோமியின் இந்த பணி நீக்க நடவடிக்கையினால் அதிகம் பாதிக்கப்படுவது, அண்மையில் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளவர்கள் என கூறப்படுகின்றது. ஜியோமி நிறுவனம் டிசம்பர் 2021ல் பணியமர்த்தலை செய்தது. சீனாவில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் நுகர்வோர் தேவை குறைந்து வருகின்றது.
வருவாய் சரிவு
இதன் காரணமாக அதன் வருவாய் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மூன்றாவது காலாண்டில் 9.7% சரிவினைக் சந்தித்துள்ளது. இந்த போக்கு தொடரலாம் என்ற அச்சத்தின் மத்தியில் தான் இந்த செலவு குறைப்பு நடவடிக்கையினை எடுத்து வருகிண்றது. ஜியோமியின் வருவாயில் சுமார் 60% ஸ்மார்ட்போன் மூலம் கிடைக்கும் வருவாயாகும். இது கடந்த ஆண்டினை காட்டிலும் 11% சரிவினைக் கண்டுள்ளது.
எந்தவுக்கு பாதிப்பு?
பணி நீக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ள ஜியோமி ஊழியர்கள் சமூக வலைதளங்களிலும் இது குறித்து தங்கள கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
ஜியோமியின் இந்த அறிவிப்பானது சீன நிறுவனங்கள் எந்தளவுக்கு கொரோனாவாலும், மந்த நிலையாலும் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிடுகின்றது.
போட்டிகள் அதிகரிப்பு
ஜியோமி நிறுவனத்திற்கு விவோ, ஓப்போ, ஒன்பிளஸ் என சீன நிறுவனங்களும் போட்டியாளர்களாக உள்ளன. ஆக இதுவும் ஜியோமின் சரிவுக்கு ஒரு முக்கிய காரணம் எனலாம்.
ஜியோமியின் மிகப்பெரிய சந்தையாக இருந்து வரும் இந்தியாவிலும், சாம்சங், விவோ, ரியல்மி மற்றும் ஒப்போ உள்ளிட்ட பல நிறுவனங்களும் போட்டியாளர்களாக அமைந்துள்ளன. இதன் காரணமாக தனது சந்தை பங்கினை ஜியோமி இழக்க தொடங்கியுள்ளது.
யார் டாப்?
இது குறித்த கவுண்டர்பாயிண்ட் அறிக்கையில், ஜியோமி மற்றும் சாம்சங் என இரண்டுமே 19% சந்தை பங்கினையும், விவோ 17% சந்தை பங்கினையும், ரியல்மி 16% பங்கினையும், ஒப்போ 11% பங்கினையும் கொண்டுள்ளன. எனினும் முன்னதாக ஜியோமி தான் சந்தை பங்கில் முன்னணியில் உள்ள ஒரு நிறுவனமாக இருந்து வந்தது.ஆனால் சமீபத்திய காலமாக சீன டெக் நிறுவனங்கள் மீதான நம்பிக்கையானது குறைந்து வரும் நிலையில், சீன போன்கள் மீதான ஆர்வமும் குறைந்து வருகின்றது என்ற கருத்தும் இருந்து வருகின்றது.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications