உச்சாணிக் கொம்பில் இருந்து கவிழ்ந்த 'யாஹூ'.. முடிவுக்கு வந்த சகாப்தம்..!

ஒரு காலத்தில் இணைய உலகைப் புரட்டி போட்ட யாகூவின் சகாப்தம் முடிவுற்றது. அமெரிக்க தொலைத்தொடர்பு நிறுவனமான வெரிசோன் யாஹூ நிறுவனத்தின் சில சேவைகளை மட்டும் அடிமாட்டு விலையான ரூ.4.83 பில்லியன் கொடுத்து வாங்கியது.

இணையத்தில் மிகப்பெரிய மாற்றத்தைச் செய்த யாகூ தனது இரண்டாம் இன்னிங்ஸை வெரிசோனுடன் துவங்கியுள்ளது. யாஹூ நிறுவனம் துக்கப்பட்ட்டதில் இருந்து நடந்த சில சுவாரஸ்யமான நிகவுகளைப் பற்றிய தகவல்களை இங்குப் பார்ப்போம்.

துவக்கம்

துவக்கம்

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்ற ஜெரி யங், டேவிட் ஃபிலோ என்ற இரு மின் பொறியியல் பட்டதாரிகளால் 1994 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் யாஹூ நிறுவனம் துவங்கப்பட்டது.

ஜெரி & டேவிட்ஸ் கைட்

ஜெரி & டேவிட்ஸ் கைட்

ஜெரி & டேவிட்ஸ் கைட் என்ற பெயரில் உலகளாவிய வலையில் அறியப்பட்டு பின்னர் யாஹூ என பெயரிடப்பட்டது.

உண்மையில் யாகூ சுருக்கமாகும்

உண்மையில் யாகூ சுருக்கமாகும்

நம்புவீர்களோ, இல்லையோ யாகூ(Yahoo) ஒரு சுருக்கமாகும். யாஹூ என்றால் 'Yet Another Hierarchical Officious Oracle'என்பதைக் குறிக்கிறது.

Yahoo!(ஆச்சரியக்குறி)

Yahoo!(ஆச்சரியக்குறி)

யாஹூ பெயரின் பின்னால் ஏன் ஆச்சரியக்குறி வருகிறது என்று உங்களுக்குத் தெரியுமா. பிபிகியூ சாஸ் நிறுவனம் இந்தப் பெயரை ஏற்கனவே பயன்படுத்தி வந்ததால் ஆச்சரியக்குறி சேர்க்கப்பட்டதாக கூறுகின்றனர்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வழங்கிய ஆஃபர்

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வழங்கிய ஆஃபர்

2008 ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் யாஹூ நிறுவனத்தை வாங்க 45 பில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்க முன்வந்தது.

ஆனால் அதை யாஹூ நிராகரித்தது, பின்னர் கூடுதலாக 5 பில்லியன் டாலர் அளிப்பதாகக் கூறியும் யாகூ ஏற்றுக்கொள்ளவில்லை.

 

கூகுள் நிறுவனத்தை வாங்க முயற்சி

கூகுள் நிறுவனத்தை வாங்க முயற்சி

கூகுள் நிறுவனத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் முன்பே ஒரு பில்லியன் டாலர் கொடுத்து வாங்க முயற்சி செய்த யாஹூ நிறுவனம் கூகிள் இணை நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரினிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.

எங்களுக்கு ஒரு பில்லியன் டாலர் வேண்டும் ஆனால் விற்கும் என்னம் இல்லை என்று கூறியதற்கு யாஹூ தலைமை நிர்வாக அதிகாரி டெர்ரி செம்மல் ஒரு பில்லியன் டாலர் கொடுக்க ஒப்புக்கொண்டார் என்றும் கூறப்படிகிறது.

 

யாகூவின் விலையுயர்ந்த கையகப்படுத்தல்

யாகூவின் விலையுயர்ந்த கையகப்படுத்தல்

5.7 பில்லியன் டாலர் கொடுத்து Broadcast.com என்ற நிறுவனத்தை யாஹூ வாங்கியதை டெக்னாலஜி நிறுவனங்களின் மோசமான கையகப்படுத்தல் என்று ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இ-காமர்ஸ் நிறுவனப் பங்கு

இ-காமர்ஸ் நிறுவனப் பங்கு

2005 ஆம் வருடம் சீனாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவில் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்து தற்போது அலிபாபா நிறுவனத்தின் 32 பில்லியன் மதிப்புதக்க 15 சதவீத பங்குகளை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

4 வருடங்களில் 53 நிறுவனங்கள்

4 வருடங்களில் 53 நிறுவனங்கள்

2012 ஆம் வருடம் மரிசா மேயர் சிஈஓ பெருப்பேற்ற உடன் நான்கு ஆண்டுகளில் 53 நிறுவனங்களை யாஹூ கையகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+