பெங்களூரு: உலகளவில் தேடுதல் தளம் மற்றும் மென்பொருள் துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் யாஹூ நிறுவனம் இந்த வருடம் குறைந்துபட்சம் 10 சதவீத ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
இதற்கான பணிகளை ஜனவரி மாதத்திற்குள் துவங்க யாஹூ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
யாஹூ
யாஹூ நிறுவனம் கடந்த சில வருடங்களாகத் தொடர்ந்து வர்த்தகத்தில் மிகக் குறைவான வளர்ச்சியை மட்டுமே அடைந்து வருகிறது, இதனால் பல கோடி ரூபாய் இழப்பையும் பெற்று வருகிறது.
இதனைச் சரிசெய்ய யாஹூ பல வழிகளைச் சோதனை செய்து தோல்வியுற்ற நிலையில், நிறுவனத்தின் நிதிநிலையைச் சரிசெய்யச் சுமார் 10 சதவீத ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது யாஹூ.
மறுப்பு
ஆனால் வழக்கம் போல் யாஹூ நிறுவனம் இச்செய்தியை முழுமையாக மறுப்புத் தெரிவித்துள்ளார் இந்நிறுவனத்தின் சாரா மெரான் தெரிவித்துள்ளார்.
முக்கியத் துறையில் 1,000 ஊழியர்கள்..
யாஹூ நிறுவனத்தின் மீடியா வர்த்தகம், ஐரோப்பிய ஆப்ரேஷன்ஸ் மற்றும் பிளாட்பார்ம் டெக்னாலஜி பிரிவில் சுமார் 1000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய உள்ளதாகப் பிஸ்னஸ் இன்சைடர் பத்திரிக்கை நிறுவனம் தெரிவித்துள்ளது.
அலிபாபா
அதுமட்டும் அல்லாமல் அலிபாபா நிறுவனத்தில் இருக்கும் இந்நிறுவனப் பங்கு இருப்பையும் குறைக்க யாஹூ திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications