உலக அரசியலில் இவருக்கு எப்போது தனி இடம் உண்டு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழ்நாட்டில் ரஜினி அரசியலுக்கு வருவாரா, சகாயம் அரசியலுக்கு வருவாரா, என்றெலாம் நாம் எதிர்பார்த்துக் காத்து இருக்கும் நிலையில் கடந்த மற்றும் நிகழ் காலங்களில் உயர் பதவிகளில் பொறுப்பேற்றுக்கொண்ட இளம் தலைவர்களைப் பட்டியலிட்டு ஈடீ மேகசின் என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தத் தகவல்களை வைத்துப் பார்க்கும் போது தமிழகமும், இந்தியாவும் இது போன்று இளம் வயதுடைய ஒரு தலைவரை ஏற்குமா என்பது விடை தெரியாத கேளவியாகவே இன்றளவிலும் உள்ளது. சரி மக்கள் ஏற்றுக்கொண்டாலும் யார் இந்த இளம் தலைவர் என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.

இப்படி பல குழப்பங்கள் மத்தியில் உலகளவில் அதிகாரம் படைத்த இளைய தலைமுறை தலைவர்களை பார்க்கலாம் வாங்க.

எம்மானுவேல் மக்ரோன், 39

எம்மானுவேல் மக்ரோன், 39

மே 7 ல் நடைபெற்ற பிரெஞ்சு தேர்தல்களில் வெற்றிபெற்ற 39 வயதே ஆன எம்மானுவேல் மக்ரோன் தற்போதைய உலகின் மிகக் குறைந்த வயது இளைஞராக இருப்பார். பிரான்கோயிஸ் ஹோல்லண்டேவைத் தொடர்ந்து வரும் இந்தப் புதிய பிரெஞ்சு அதிபர் மே 14 ல் எலிசீ அதிபர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஜஸ்டின் டிருடியு, 45

ஜஸ்டின் டிருடியு, 45

இவர் தனது 43 வது வயதில் கனடா நாட்டின் பிரதம மந்திரியாகத் தேர்ந்தேடுக்கப்பட்டார். கனடா நாட்டின் மிகக் குறைந்த வயது இளம் தலைவர் 1979 ல் பிரதம மந்திரியாக 39 வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜோ கிளார்க்.

டிருடியு ஏப்ரல் 2013 ல் லிபரல் பார்ட்டியின் தலைவர் பதவியை வென்ற இவர் கனடியன் பாராளுமன்றத்தில் 36 இடங்களோடு மூன்றாவது இடத்தில் இருந்த கட்சியை 184 இடங்களுடன் முன் எப்போதையும் இல்லாத அளவில் மிகப் பெரும்பான்மை பெற்று 2015 தேர்தலில் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

 

ஜிக்மே க்ஹெசர் நம்ஜிஎல் வாங்சுக், 37

ஜிக்மே க்ஹெசர் நம்ஜிஎல் வாங்சுக், 37

பூட்டான் அரசின் ஐந்தாவது தற்போதைய அரசின் தலைவராக உள்ளார். இவரது தந்தை ஜிக்மே சிங்கே வாங்சுக் தனது மகனுக்குச் சாதகமாகப் பதவியைத் துறந்த பின்னர் 26 வயது ஜிக்மே பூட்டானின் 100 வது ஆண்டுச் சர்வாதிகார ஆட்சிக்கு அனுகூலமான 2008 ம் ஆண்டு நவம்பர் 1 ம் தேதியில் முடி சூட்டிக் கொண்டார்.

கிம் ஜோங்-உன், 33

கிம் ஜோங்-உன், 33

வடகொரியாவின் இணையற்ற தலைவர். டிசம்பர் 2011 ல் நடைபெற்ற அவரது தந்தையின் இறுதிச் சடங்கிற்குப் பிறகு கிம் அதிகாரப்பூர்வ தலைவராக அறிவிக்கப்பட்டார்.
மத்திய ராணுவ தலைமையகம், தேசிய பாதுகாப்புத் தலைமையகம் கொரியாவின் தொழிலாளர் கட்சி ஆகியவற்றுக்குக் கிம் தலைவராகப் பொறுப்பேற்றார். கொரியா மக்கள் ராணுவத்தின் அதிகாரமிக்கத் தலைவராகவும், கொரியா தொழிலாளர் கட்சியின் மதிப்புமிக்கப் பொலிட்பீரோ உறுப்பினராகவும் இருக்கிறார்.

வனேசா ட அம்ப்ரோசியோ, 29

வனேசா ட அம்ப்ரோசியோ, 29

ஏப்ரல் 2017 முதல் அக்டோபர் 2017 வரை சான் மரிநோவின் இளம் தலைவராக இருந்தார். அவரது தாத்தா பிரான்செஸ்கோ பேர்டி சான் மரிநோவின் கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்தவர்களில் ஒருவராக இருந்தார்.
ஏப்ரல் 1981 முதல் அக்டோபர் 1981 வரை வயது குறைந்த தலைவராக இருந்த மரியா லே பெடினி-அன்ஜெலினி தான் உலகின் மிகக்குறைந்த பெண் தலைவர். அப்போது அவருக்கு வயது 26 மட்டும்தான்.

கடந்த காலத் தலைவர்களிலிருந்து

கடந்த காலத் தலைவர்களிலிருந்து

1984 அக்டோபர் 31 ல் பிரதம மந்திரியாகப் பதவியேற்கும் போது ராஜீவ் காந்திக்கு வயது 40 தான். இரண்டு மாதங்கள் கழித்து நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் முன்னெப்போதையும் பேலில்லாமல் அதிக இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்தார். லால் பகதூர் சாஸ்திரிக்குப் பிறகு இந்திரா காந்தி பதவியேற்றபோது அவருக்கு வயது 48.

சிக்முண்டுர் டேவிட் கன்லாக்சன்

சிக்முண்டுர் டேவிட் கன்லாக்சன்

2013 ல் ஐஸ்லேன்ட் பிரதமராகப் பதவியேற்றபோது இவருக்கு வயது 38. 2016ல் பனமா ஊழல் வழக்குக் கசிந்தபோது தனது பதவியை இவர் ராஜிநாமா செய்தார்.

தியோடோர் ரூஸ்வெல்ட்

தியோடோர் ரூஸ்வெல்ட்

42 வயதில் அதிபரான இவர் அமெரிக்காவின் இளம் அதிபராவார். 1901 ல் வில்லியம் மெக்கன்லி கொல்லப்பட்ட பிறகு உச்சத்திற்கு வந்தவர் இவர். வாஷிங்டன் க்கு முன் இவர் நியூயார்க் மாகாண உறுப்பினராக இருந்தார். 23 வயதில் மாகாண அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் நியூயார்க்கின் சட்ட வரைவாளராகவும் இருந்தார்.

பிடேல் காஸ்ட்ரோ

பிடேல் காஸ்ட்ரோ

கடந்த ஆண்டு மரணமடைந்த கியூபாவின் புரட்சித் தலைவர் 32வது வயதில் புரட்சிக் குழுக்கள் நாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தபோது தலைவரானார். உலகக் கம்யூனிஸ்ட் தலைவர்களில் கடைசியாக இருந்த இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி பொறுப்பிலிருந்தார்.

ஜான் எப் கென்னெடி

ஜான் எப் கென்னெடி

செல்வந்தரான இவர் அதிபராகப் பொறுப்பேற்றபோது இவருக்கு வயது 43. 1961ல் ரிபப்ளிக்கன் கட்சியின் ரிச்சர்ட் நிக்சன் ஐ தோற்கடித்து அதிபரானார்.

ஜீன் – கிளாடே டுவாலியர்

ஜீன் – கிளாடே டுவாலியர்

பேபி டாக் எனச் செல்லமாக அழைக்கப்பட்ட ஜீன் - கிளாடே டுவாலியர் ஏப்ரல் 1971 ல் அவரது தந்தை பிரான்கோயிஸ் டுவாலியர் மறைவுக்குப் பின்னர்த் தனது 19 வது வயதில் 1986 ல் உலகின் மிக இளம் பிராய அதிபராக ஆனார்.

டோனி ப்ளேர், டேவிட் கமேரோன் , பிரிட்டன்

டோனி ப்ளேர், டேவிட் கமேரோன் , பிரிட்டன்

1812 ல் 42 வயதில் பதவியேற்ற லார்ட் லிவெர்பூல் க்குப் பிறகு 1997 ல் தனது 43வது வயதில் டோனி ப்ளேர் பிரிட்டன் பிரதம மந்திரியாகப் பதவியேற்றார்.

2010 ல் பிரிட்டன் தலைவராகப் பதவியேற்ற டேவிட் கமேரோன் க்கும் 43 வயதுதான் என்றாலும் ப்ளேரை விடச் சில மாதங்கள் இளையவராக இருந்தார்.

பிரிட்டன் மக்கள் ஐரோப்பிய யூனியனில் நீடிப்பது குறித்துச் சமாதானம் ஆகாத நிலையில் கடந்த ஆண்டுக் கமேரோன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

நடிகர்களின் பின்னாலும் சீரழிவுகளின் பின்னாலும் செல்வதை விடுத்து இவர்களைப்போல் நமது இளைஞர்களும் சாதித்துக் காட்டும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Young world leaders of the past and present

Young world leaders of the past and present
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X