அடேங்கப்பா.. ஒத்த வீடியோவில்.. தாத்தா சம்பாதித்த ரூ. 15 லட்சம்... செம கடுப்பில் பிரான்க் ஷோ இளைஞர்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பார்சிலோனா : ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பார்சிலோனாவில் வசித்து வரும் புகழ்பெற்ற யூடியூப் சேனல் ஒன்றின் பிராங்க் ஸ்டாரான, கங்குவா ரென்னை பல லட்சம் பேர் யூடியூபில் பின்தொடர்கிறார்களாம்.

 

அதிலும் அவரின் யூடியூப் வீடியோக்களுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டாம்.

இந்நிலையில் அவர் கடந்த 2017ம் ஆண்டில் எடுத்த ஒரு வீடியோ நிகழ்ச்சியினையும் வீடியோவினையும் யூடியூப்பில் பதிவிறக்கம் செய்துள்ளார். ஆமாப்பு அந்த வீடியோவில் ரென் நடத்திய பிராங்க் ஷோ ஒன்றில், வசிக்க வீடு இல்லாத நிலையில் தெருவில் அமர்ந்திருந்த 52 வயதுடைய முதியவர் ஒருவருக்கு உணவு அளிப்பதாக கூறி ஓரியோ பிஸ்கெட் பாக்கெட்டினை வழங்கியுள்ளார்.

வாந்தி மயக்கம்

வாந்தி மயக்கம்

அந்த முதியவரும் பசியால் அந்த பாக்கெட்டை வாங்கிக் கொண்டு, நன்றி கூறியதோடு சாப்பிடவும் தொடங்கியுள்ளார். அவருக்கு இருந்த கடும் பசியால் பிஸ்கெட் முழுவதும் தின்றுவிட்டாராம். இதனை ரென் வீடியோவாகவும் எடுத்துள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அந்த வயதான முதியவர் வாந்தி எடுத்து, மயக்கமும் அடைந்துள்ளார்.

கேவலமான செயல்

கேவலமான செயல்

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவலும் கொடுத்துள்ளனர். ஆமாப்பு ரென் செய்த இந்த கேவலாமான வேலையால் முதியவர் மனதால் எந்த அளவு பாதிக்கப்பட்டிருப்பார், அதோடு அவர் உடல் நிலையிலும் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் அப்பகுதி ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

ரென்னுக்கு எதிராக போர்கொடி
 

ரென்னுக்கு எதிராக போர்கொடி

இந்த நிலையில் ரென்னுக்கு எதிராக போர்க் கொடிகள் அதிகமாகவே ரென்னை கைது செயதுள்ளனர் போலீசார். இதன் பின்னர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி, நடந்த விவரத்தை கூறவே நீதிபதியே கடுப்பாகியுள்ளார். இதையடுத்து நீதிமன்றத்தில் ரென்னுக்கு 15 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாம்.

யூடியூப் சேனல் முடக்கம்

யூடியூப் சேனல் முடக்கம்

அத்துடன் பாதிக்கப்பட்ட முதியவருக்கு 20,000 யூரோக்களையும் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.15,49,824) அளிக்கவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளதாம். அது மட்டும் இல்லைங்க யூடியூப் மட்டும் இல்லாம அவரோட எல்லா சமூக வலைதளங்களையும் 5 வருடத்துக்கு முடக்க உத்தரவிட்டுள்ளாராம் ஜட்ஜ்.

பழைய வீடியோ

பழைய வீடியோ

எனினும் இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், ரென் 19 வயதில் இருக்கும்போது இந்த வீடியோவை எடுத்துள்ளதாகவும், அதோடு இதுவரை அவருக்கு 1.2 மில்லியன் ஆதரவாளர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

காமெடிக்காக எடுத்த வீடியோ

காமெடிக்காக எடுத்த வீடியோ

அதோடு ரென் இது குறித்து கூறுகையில் இது அந்த முதியவரை சுத்தப்படுத்துவதற்காக குக்கீஸ்களில் இவ்வாறு பேஸ்ட் வைத்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இது மொக்க காமெடி எனவும் வாய் விட்டுள்ளார். ஆமாப்பு அவருக்கு அந்த வீடியோ எடுக்கும்போது சனி தலைல உட்கார்ந்துட்டார் போல.

முதியவருக்கு நல்ல வாய்ப்பு

முதியவருக்கு நல்ல வாய்ப்பு

இது குறித்து நீதிபதி கூறுகையில், ரென் இது மோசமான ஜோக் என கூறியிருந்தாலும், இது அந்த வீடில்லா முதியவருக்கு மிக நல்ல வாய்ப்பு தான். ஏனெனில் ஒரு வீடியோவில் 20000 யூரோக்களை சம்பாதித்து கொடுத்துள்ளதே என்றும் கூறியுள்ளராம். சபாஷ் சாணயக்கியா சரியான தீர்ப்பு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

YouTuber who gave man toothpaste-filled Oreo biscuits sentenced to prison

Barcelona prankster Kanghua Ren, 21 was sentenced on Friday to 15 months in prison for his crime against the "moral integrity" of the homeless man, also The court reportedly ordered Ren's YouTube and other social media channels to be shut down for five years and said he must give the victim 20,000 euros in compensation.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X