வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது போல் ஏஐ துறையில் தற்போது பெரும் போட்டி நிலவி வருகிறது. ஒருப்பக்கம் கூகுள் ஜெமினி மற்றும் ஓபன்ஏஐ சாட்ஜிபிடி இத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும் மறுப்முனையில் பல பெரிய புரட்சிகள் வெடிக்க துவங்கியுள்ளது. ஏற்கனவே இவ்விரு நிறுவனத்திற்கும் போட்டியாக claude, grok, Deepseek ஆகியவை இருக்கும் வேளையில் மெட்டா ஒரு பெரும் ஏஐ வல்லுனர்கள் படையை திரட்டி வருகிறது.
இதெல்லாம் ஒருப்பக்கம் இருக்க சீனாவில் சிறிதும் பெரிதுமாக பல LLM மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே கூகுள் ஜெமினி மற்றும் ஓபன்ஏஐ சாட்ஜிபிடி உடன் போட்டிப்போட Deepseek இருக்க, சீன தரப்பில் ஜெமினி மற்றும் சாட்ஜிபிடி ஆதிக்கத்தை உடைக்க GLM-4.5 என்ற புதிய ஏஐ மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் போட்டி அதிகரித்துள்ளது.

சீனாவின் முன்னணி AI நிறுவனமான Z.ai (முன்பு இதன் பெயர் Zhipu, எலான் மஸ்க்-ன் xAI போலவே பெயர் வைத்துள்ளது) என்ற மிகப்பெரிய ஓப்பன் சோர்ஸ் செயற்கை நுண்ணறிவு (AI) மாடலை வெளியிட்டு. இது உலகளாவிய AI போட்டியில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என பேசப்படுகிறது.
Z.ai நிறுவனத்தின் இந்த புதிய ஏஐ மாடலின் பெயர் வGLM-4.5, இது இந்நிறுவனத்தின் பிளாக்ஷிப் மாடலாகும். இது திங்கள்கிழமை முதல் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Z.ai இந்த முயற்சியின் மூலம் உலகளாவிய ஏஐ கிங்மேக்கராக இருக்கும் OpenAI-க்கு சவால் விடும் வகையில் AI துறையில் தனது இடத்தை உறுதி செய்ய முயற்சிக்கிறது இந்த சீன ஸ்டார்ட்அப் நிறுவனம்.
சமீபத்தில் அமெரிக்க நிறுவனங்களுக்கு போட்டியாக சீன AI ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் புதிய ஒப்பன் சோர்ஸ் மாடல்களை வெளியிடுவதில் போட்டிப்போட்டு வருகின்றன. Moonshot நிறுவனம் அதன் Kimi K2 மாடலை ஓப்பன் சோர்ஸ் மாடாலாக மாற்றியுள்ளது. அதேபோல StepFun தனது புதிய ரீசனிங் மாடலைஅறிவித்துள்ளது.
ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தகவல் படி உலகளவில் போட்டிப்போடும் இலக்குடன் Zhipu என்ற பெயரை Z.ai ஆக மாறியது. இதேபோல் உலகளவில் வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதற்காக தனது IPO திட்டத்தை சீன நிலப்பரப்பிலிருந்து ஹாங்காங்-க்கு மாற்றியுள்ளது.
Z.ai நிறுவனத்தில் சீனாவின் மிகப்பெரிய டெக் நிறுவனமாக இருக்கும் அலிபாபா மற்றும் டென்சென்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் முதலீடு செய்து அதன் ஆதரவில் இயங்கி வருகிறது. இந்த ஐபிஓ-வில் சுமார் 300 மில்லியன் டாலர் வரையிலான முதலீட்டை ஈர்க்க திட்டமிட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications