ஜாரா என்றால் இன்றைய இளம் பெண்களுக்கு நியாபகம் வருவது பேஷன் உடைகளும், அழகான பேக்குகள், ஷூக்கள், செப்பல்கள் என பெண்களுக்கு தேவையான அத்தனை பொருட்களும் மாடர்னாகவும், மிக அழகானதாகவும் இருப்பதே.
அந்தளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்த ஜாரா உலகம் முழுக்க உள்ள 3,785 சில்லறை வர்த்ததக கடைகளை மூடியுள்ளதாக அறிவித்துள்ளது.
ஸ்பானிஷினை சேர்ந்த பேஷன் உரிமையாளரான ஜாரா மற்றும் இண்டிடெக்ல்ஸ் நிறுவனங்கள் மொத்தம் 4,000 கடைகளை மூடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதிரடி முடிவு
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினை கருத்தில் கொண்டும் இம்முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் கொரோனா தொற்று நோயின் காரணமாக அதன் செயல்பாடுகள் கணிசமான அளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது 39 சந்தைகளில் கட்டாயம் மூட வேண்டிய நிலையில் உள்ளது.
விளைவு என்ன?
மேலும் கொரோனா வைரஸின் விளைவுளை பற்றி முன்கூட்டியே சொல்வது கடினமாகும். ஆனால் நிச்சயம் அதனால் வணிகம் பாதிக்கப்படும் என்பது உண்மை. எனினும் அதன் வணிக மாதிரி மற்றும் அதன் மீது உள்ள நம்பிக்கை குறித்து நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் ஜாரா தெரிவித்துள்ளது.
விற்பனை வீழ்ச்சி
மார்ச் முதல் இரண்டு வாரங்களில் கடைகள் மூடப்பட்டுள்ளதால் அதன் விற்பனை 24.1% பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இண்டிடெக்ஸின் மிகப்பெரிய கடைகள் ஸ்பெயினில் உள்ளது. ஆனால் ஸ்பெயினில் தற்போது நாடு தழுவிய அளவில் மூடப்பட்டுள்ளதால், அனைத்து கடைகளையும் ஜாரா மூடியுள்ளது. இதனால் அதன் விற்பனை முற்றிலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னேற்றம் தான்
இந்த நிலையில் ஜனவரி 31 அன்று நிறுவனம் விற்பனை மற்றும் வருவாய் இரண்டிலுமே முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நிகர விற்பனை 8% அதிகரித்து, 28.3 பில்லியன் யூரோக்களாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதே சமயம் ஆன்லைன் விற்பனையிலும் 23% அதிகரித்துள்ளதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நஷ்டம் அதிகரிக்கலாம்
ஆக தற்போது இந்த விற்பனை அறிக்கையில் வரி வருவாய் நலன்களுக்கு முன், முந்தைய ஆண்டில் 5.5 பில்லியன் யூரோவிலிருந்து 7.6 யூரோக்களாக அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த பூட்டுதலால் நிறுவனம் மேலும் நஷ்டத்தினைக் காணக்கூடும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications