அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தல் உலக முழுவதும் பரபரப்பாக பேசப்படும் ஒரு விஷயமாக மாறி இருக்கிறது. அமெரிக்க நியூயார்க் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ஸோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றிருக்கிறார்.
அமெரிக்காவின் மிக முக்கியமான அதே வேளையில் பிரபலமான ஒரு நகரம் நியூயார்க். இந்த நகரத்தின் மேயராக இருந்த எரிக் ஆடம்ஸ், ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார் .இதனை அடுத்து நியூயார்க் நகர மேயர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலை பொருத்தவரை ஜனநாயக கட்சி சார்பாக 34 வயதான இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸோஹ்ரான் மம்தானி போட்டியிட்டார்.

மம்தானியை பொறுத்தவரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த தேர்தலில் டிரம்பின் குடியரசு கட்சி சார்பில் கர்டிஸ் ஸ்லிவா போட்டியிட்டார் . தேர்தலில் மம்தானிக்கும் டிரம்ப் கட்சி வேட்பாளருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மம்தானியை கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார்.
டிரம்பின் விமர்சனத்தினாலேயே நியூயார்க் மேயர் தேர்தல் உலக கவனம் பெற்றது. மம்தானி நியூயார்க் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மத்திய அரசு எந்த ஒரு நிதி உதவியும் நியூயார்க் நகரத்திற்கு என டிரம்ப் அச்சுறுத்தினார். இத்தகைய சூழலில் நியூயார்க் நகர மேயர் தேர்தலில் அனைத்து சவால்களையும் கடந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான மம்தானி மாபெரும் வெற்றியை பதிவு செய்து நகரத்தின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் .
நியூயார்க் நகரின் முதல் இந்திய வம்சாவளி மேயர், முதல் இஸ்லாமிய மேயர் , இளம் வயது மேயர் என பல்வேறு பெருமைகள் இவருக்கு கிடைத்திருக்கின்றன. தன்னுடைய தேர்தல் வெற்றியை தொடர்ந்து ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய மம்தானி, இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பேச்சை மேற்கோள் காட்டி பேசினார். இந்தியா ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் அடைந்த பிறகு ஆகஸ்ட் 14 1947 ஆண்டு நள்ளிரவில் ஜவஹர்லால் நேரு ஆற்றிய வெற்றி உரையை மேற்கோள் காட்டி தனது பேச்சை தொடங்கினார் மம்தானி.

"இந்த நொடிப்பொழுது வரலாற்றில் மிக அரிதாகவே வரும் , ஒரு வரலாறு முடிவுக்கு வந்து மற்றொரு புதிய வரலாறு உருவாகும் காலகட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். ஒடுக்கப்பட்ட ஒரு தேசத்தின் ஆன்மா இன்று மௌனம் கலைக்கிறது" என்ற நேருவின் பேச்சை மேற்கோள் காட்டி பேசினார் . இளமை, சிறந்த பேச்சுத் திறன், ஆளுமை , சமூக ஊடகங்களில் பிரபலம் என இந்த தலைமுறை அரசியல் தலைவருக்கான அனைத்து தகுதிகளையும் கொண்டவராக மம்தானி கவனம் பெற்றுள்ளார்.
மம்தானிக்கும் இந்தியாவிற்கும் மிக நெருக்கமான ஒரு தொடர்பு இருக்கிறது. ஸோஹ்ரான் குவாமே மம்தானி 1991ஆம் ஆண்டு உகாண்டா நாட்டில் பிறந்தவர். புரட்சியாளரும் கானாவின் முதல் பிரதமருமான குவாமே நக்ருமாவின் நினைவாக மம்தானியின் பெயரில் குவாமே என்பது சேர்க்கப்பட்டுள்ளது. மம்தானியின் தாயார் புகழ்பெற்ற இந்திய அமெரிக்க திரைப்பட இயக்குநர் மீரா நாயர், தந்தை கொலம்பியா பல்கலைகழக பேராசிரியர் மஹ்மூத் மம்தானி.
மம்தானிக்கு 5 வயதாகும் போதே குடும்பம் தென்னாப்பிரிக்காவுக்கு இடம்பெயர்ந்தது. அடுத்த 2 ஆண்டுகளிலேயே இவர்கள் குடும்பமாக நியூயார்க் நகரத்திற்கு வந்தனர். தனது ஆரம்ப பள்ளி நாட்களை கழித்த நியூயார்க் நகரத்திற்கே தற்போது மேயராக பொறுப்பேற்று சாதனை படைத்துள்ளார் மம்தானி. இனி இவருக்கும் டிரம்புக்கும் இடையிலான மோதல்கள் அரசியல் உலகில் சுவாரஸ்யத்தை கூட்டும்.
இதே போல அமெரிக்காவின் சின்சினாட்டி நகரின் மேயராகவும் இந்திய வம்சாவளியை சேர்ந்த அஃப்தாப் புரேவல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர் இரண்டாவது முறையாக மேயராக வெற்றி பெற்றுள்ளார். குடியரசு கட்சி வேட்பாளர் கோரி போமானை தோற்கடித்து சின்சினாட்டி நகர மேயராக வாகை சூடியுள்ளார்.
More From GoodReturns

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications