தங்கத்தின் மவுசு மட்டும் ஏன் குறைவதே இல்லை?

தங்கத்தின் மவுசு மட்டும் ஏன் குறைவதே இல்லை?
சென்னை: எல்லா உலோகங்களையும் விட தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இன்னும் தங்கத்தின் மீதான மோகம் குறைந்துவிடவில்லை. அதனால் தான் பாதுகாப்பான சொர்க்கம் என்று தங்கம் அழைக்கப்படுகிறது.

ஏன் இன்னும் தங்கம் தனது மதிப்பை இழக்காமல் இருக்கிறது என்று பார்ப்போம்.

பொருளாதாரம்

பொருளாதாரமே தங்கத்தினால் தான் அளவிடப்படுகிறது. ஒரு நாட்டில் தங்கத்தின் இருப்பு அதிகமாக இருந்தால், அந்த நாட்டின் பொருளாதாரம் ஆரோக்கியமாக இருக்கிறது என்று கருதப்படுகிறது. தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றம் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதிக்கிறது. அதாவது பொருளாதார நிலைமை சரியில்லை என்றால் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்துவிடும். ஏனெனில் பொருளாதாரம் ஆரோக்கியமாக இருக்கும் போது மக்கள் தங்கத்தைத் தவிர்த்து பங்குச் சந்தை, மற்றும் ரியல் எஸ்டேட் போன்றவற்றில் முதலீடு செய்வார்கள். பொருளாதாரம் சரியில்லை என்றால், தங்கத்திற்கு இருக்கும் நல்மதிப்பை வைத்து எல்லோரும் தங்கத்தின் மீதே முதலீடு செய்வர். அதனால் அதன் விலையும் உயர்ந்துவிடும்.

பயம்

கடந்த சில ஆண்டுகளாக ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையின் காரணமாக அந்த நாடுகள் தங்கத்திற்கான மதிப்பை நிர்ணயம் செய்வதில் தடுமாறி வருகின்றன. அதனால் மற்ற பொருள்களில் முதலீடு செய்தால் நட்டம் ஏற்பட்டுவிடுமோ என்று பயந்து பலர் தங்கத்தின் மீதே முதலீடு செய்து வருகின்றனர். அதனால் தங்கத்தின் தேவையும் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது.

டாலருக்கும் தங்கத்திற்கும் உள்ள உறவு

அமெரிக்காவில் தங்கம் வாங்கப்பட்டு விற்கப்படுவதால், தங்கத்திற்கும், அமெரிக்க டாலருக்கும் இடையே நெருங்கிய உறவு உள்ளது. எனவே அமெரிக்க டாலரில் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் அது தங்கத்தின் விலையை பாதிக்கிறது. சமீபத்தில் அமெரிக்க டாலரில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் தங்கத்தின் விலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது டாலர் வீழ்ச்சி அடையும் போது தங்கத்தின் விலை உயர்ந்து விடுகிறது.

தங்கத்தின் தேவை

தங்கத்தின் தேவை மற்றும் அதன் சப்ளை ஆகியவற்றில் ஏற்படும் வித்தியமாசமும், தங்கத்தின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. தங்கத்தின் உற்பத்தி குறைவாக இருப்பதால், பெரும்பாலும் தங்கத்தின் தேவை, அதன் சப்ளையை விட அதிகமாக இருக்கும். மேலும் சீனாவில் தங்கத்தின் தேவை பல மடங்கு அதிகரித்திருப்பதால், தங்கத்தின் தேவையும், விலையும் அதிகரித்திருக்கிறது.

தங்கம் ஒரு முதலீடு

தங்கத்தின் மதிப்பு குறையாமல் இருப்பதால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதையே பெரிதும் விரும்புகின்றனர். மேலும் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பாக இருக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர். இந்தியாவில் திருமணம் மற்றும் திருவிழா நேரங்களில் தங்கம் கண்டிப்பான தேவையாக இருக்கிறது. அதோடு தங்கத்தின் இருப்பு இந்திய குடும்பங்களின் அந்தஸ்தையும் நிர்ணயிக்கிறது.

அதனால் தான் தங்கத்தின் தேவையும், அதன் பயன்பாடும், அதன் மீதான முதலீடும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் அதன் விலையும் உயர்ந்து கொண்டிருக்கிறது. தங்கத்தின் மவுசும் குறையாமல் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+