சென்னை: உலக அளவில் 2011ம் அக்டோபருக்குப் பின்பு இந்த வாரம் தங்கத்தின் விலை கணிசமான அளவிற்கு உயர்ந்திருக்கிறது.
உலக அளவில் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுவதைப் பொறுத்தே இந்தியாவிலும் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் உலக அளவில் கடந்த 16ல் ஒரு அவுன்ஸ் 1320 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் இந்த வார முடிவில் 150 அமெரிக்க டாலர்கள் உயர்ந்து இந்த வார இறுதியில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1470 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இந்த வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை படிப்படியாக உயர ஆரம்பித்திருக்கிறது. தங்கத்தில் விலை உயர்வதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
மீண்டும் ஏறுமுகம் ஏன்?
தங்கத்தின் விலை இந்த வாரம் மீண்டும் ஏறுமுகத்தில் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் விலை குறைந்தவுடன் உலக அளவில் ஏராளமான மக்கள் தங்க நகைகள் வாங்கத் தொடங்கினர். மேலும் முதலீட்டாளர்கள் ஈடிஎஃப்பை மறந்துவிட்டு மீண்டும் தங்கத்தின் மீது முதலீடு செய்யத் தொடங்கிவிட்டனர்.
கூடுதல் தங்கம் வாங்கும் துருக்கி
உலகிலேயே துருக்கி தான் அதிக அளவில் தங்கத்தை வாங்கும் நாடாக உள்ளது. இந்நிலையில் துருக்கியில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதையடுத்து அது இந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் மிக அதிக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்திருக்கிறது என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதுபோல் ரஷ்யாவும் தங்க கையிருப்பை அதிகரித்துள்ளது என்று ஐஎம்எப் தெரிவித்திருக்கிறது.
இரண்டாவது இன்னிங்ஸ்
தங்கம் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடத் தொடங்கி இருக்கிறது என்று சொல்லலாம். தங்கத்தின் விலை இனி கூடுமா அல்லது குறைமா என்று தீர்மானித்து சொல்ல முடியாது.
More From GoodReturns

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

அது மட்டும் நடந்தால் தங்கம், வெள்ளி, நிஃப்டி என்னவாகுமோ? ஈரான் போர் மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை?

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!



Click it and Unblock the Notifications