எளிதாக நகை கடன் வாங்குவது எப்படி?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எளிதாக நகை கடன் வாங்குவது எப்படி?
சென்னை: நகை கடன் வாங்குவது மிகவும் எளிது. நகை கடன் விரைவில் கிடைத்துவிடும். அதோடு நகை கடன் வாங்குவதற்கு ஏராளமான ஆவணங்கள் தேவையில்லை. முத்தூட் பைனான்ஸ் மற்றும் மணப்புரம் பைனான்ஸ் போன்ற நகை கடன் வழங்கும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து மிக எளிதாக மற்றும் விரைவாக நகை கடன் வாங்க முடியும். ஏராளமான வங்கிகளும் நகை கடன் வழங்குகின்றன.

 

தனிநபர் கடன்களை (பர்சனல் லோன்களை) விட நகைக் கடன் சற்று வித்தியாசமானது. அதாவது ஒருவர் வைத்திருக்கும் சொத்து, ரொக்கம் மற்றும் அவர் பெறும் வருமானம் ஆகியவற்றை மதிப்பிட்டு தனிநபர் கடன் வழங்கப்படுகிறது. ஆனால் நகை கடன் ஒருவர் வைத்திருக்கும் தங்க நகைகளை மதிப்பிட்டு வழங்கப்படுகிறது.

யார் நகை கடன் வாங்கலாம்?

தங்கம் மற்றும் தங்க நகை வைத்திருக்கும் எவரும் நகை கடன் வாங்கலாம். உங்களுடைய நகை மதிப்பிடப்பட்டு அதற்கேற்ப கடன் வழங்கப்படும். நகை கடன் வங்குபவர் தன்னுடைய அடையாள அட்டை மற்றும் குடியிருப்பு சான்றிதழ் ஆகியவற்றை வழங்க வேண்டும்.

நகை கடனுக்கான வட்டி விகிதம்

நாம் வாங்கும் நகை கடனுக்கான வட்டி விகிதம் 12 முதல் 24 சதவீதம் வரை இருக்கிறது. ஒரு சில நிறுவனங்கள் 12 சதவீதம் வட்டியை நிர்ணயிக்கிறது.

நகை கடனுக்கான காலம்

அவசரத் தேவைகளுக்காக நகை கடன் வழங்கப்படுகிறது. எனவே நகை கடன் 1 வருட காலத்திற்கு வழங்கப்படும். ஆனால் ஒரு ஆண்டு முடிந்தவுடன் மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டித்துக் கொள்ளலாம். வங்கிகள் அல்லது நகை கடன் வழங்கும் நிறுவனங்கள் அரசு நிர்ணயம் செய்திருக்கும் விதிகளின்படி நகை கடன் வழங்குகின்றன.

எடுத்துக்காட்டாக நாம் ரூ.1 லட்சம் மதிப்பிலான நகையை வழங்கினால் நமக்கு ரூ.60,000 கடனாக வழங்கப்படும்.

எவ்வாறு நகை கடனை திருப்பி செலுத்துவது?

ஒரு சில நிறுவனங்கள் நகை கடனுக்கான வட்டியை ஒவ்வொரு மாதமும் செலுத்தி, ஓராண்டு முடிவில் மொத்த அசலையும் செலுத்தவும் பணிக்கின்றன. பொதுவாக ஒரு மாதம் முதல் ஓராண்டு வரை நகை கடனை நிர்ணயிக்கலாம்.

நகைகளுக்கு பாதுகாப்பு

நகையை வாங்கும் நிறுவனங்கள் பொதுவாக அவற்றை பாதுகாப்பாகவே வைத்திருக்கும். ஆனால் ஒரு சில நேரங்களில் நகைகளுக்கு சேதம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to take a gold loan? | எளிதாக நகை கடன் வாங்குவது எப்படி?

Gold loans are extremely easy to avail with minimal documentation and speedy approvals. You can avail of gold loans from specialised gold loan finance companies like Muthoot Finance and Manappuram Finance. Besides, a host of other banks also provide loans against gold as a collateral. Gold loans are a little different from personal loans, in the sense that personal loans are given on the basis of one's credit worthiness, while gold loans are given on the basis of gold as a collateral.
Story first published: Monday, April 1, 2013, 10:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X