
உலகச் சந்தையினைத் தொடர்ந்து இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை படிப்படியாகக் குறைந்து வருகிறது.
(Silver futures slip 9%; trades below Rs 45,000)
தற்போது இந்திய சந்தையில் தங்கத்தின் விலை ரூ.28,000க்கு குறைந்திருக்கிறது. மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது தங்கம் வாங்கலாமா?
உலக சந்தையில் தங்கத்தின் விலைக் குறையும் போது, இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை குறையும் என்பதை, இந்தியாவில் தங்கம் வாங்குபவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். உலக அளவில் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது என்றால் அதற்கு காரணம் அமெரிக்காவில் இருக்கும் முதலீட்டாளர்கள் ஆவர். தற்போது அமெரிக்காவில், பங்கு வர்த்தகத்தில் அதிகம் பேர் முதலீடு செய்வதால், தங்கத்தில் அவர்கள் செய்யும் முதலீடு மிக வெகுவாக குறைந்து வருகிறது.
அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெகிழ்வு தன்மையின் காரணமாக, பலரும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். அதனால் தங்கத்தின் மீது பலருக்கும் இருந்த மோகம் தற்போது படிப்படியாகக் குறைந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் அமெரிக்காவில் தங்கத்தில் முதலீடு செய்து வந்தவர்களில், பலர் தங்கத்தை விட்டுவிட்டு, பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கின்றனர். அதனால் தங்கத்தின் எதிர்காலம் சற்று மங்கலாக இருக்கும் என்றே தெரிகிறது.
மேலும் மில்லியன் கணக்கான முதலீட்டாளர்கள், தங்கத்தில் முதலீடு செய்வது அவ்வளவு பாதுகாப்பு எல்லை என்று நினைக்கின்றனர். அதனால் தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் சிறிது காலம் காத்திருக்கலாம். ஆனாலும் ஐரோப்பிய நாடுகள் இன்னும் பொருளாதார சரிவிலிருந்து மீண்டு வர இன்னும் போராடி வருகின்றன. குறிப்பாக சைப்ரஸ் நாடு தனது பொருளாதார சரிவிலிருந்து மீண்டு வர, அந்த நாட்டிற்கு அளவுக்கதிகமான அளவு பணம் தேவைப்படுகிறது.
அதோடு கிரீஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளும், பொருளாதார சரிவிலிருந்து மீள போராடி வருகின்றன. மேலும் அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சீர்திருத்தம், வரும் காலங்களில் அமெரிக்காவை வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும் என்று நம்பப்படுகிறது. அதனால் தங்கத்தின் விலை குறையவும் வாய்ப்பு இருக்கிறது என்று நம்பப்படுகிறது.
மேலும் வட கொரிய பகுதியில் ஏற்பட்டிருக்கும் போர் பதற்றம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அதனால் இன்னும் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பிருக்கிறது. எனவே இன்னும் சிறிது காலம் கழித்து அதாவது தங்கத்தின் விலை இன்னும் சற்று குறைந்த பிறகு, தங்கத்தை வாங்குவது சிறப்பாக இருக்கும் என்று நம்பலாம்.
More From GoodReturns

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?



Click it and Unblock the Notifications