
கோல்டு ஃபண்டுகள், மியூச்சுவல் ஃபண்ட் ப்ரொடக்ட்டின் ஒரு பகுதியாகும். எனினும், இதனை கோல்டு இடிஎஃப் உடன் குழப்பிக் கொள்ளக் கூடாது. ஏனெனில், முதலீட்டுக் கண்ணோட்டத்தில் பார்த்தால் இவை இரண்டும் வெவ்வேறானவை.
கோல்டு ஃபண்டுகள் என்பன, பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள கோல்டு இடிஎஃப்-களில் முதலீடு செய்யக் கூடிய ஈக்விட்டி ஓரியண்டட் திட்டங்களாகும். இவை, தங்கத் துறையைச் சேர்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்கின்றன. இவ்வகை முதலீடுகளில் பணப்புழக்கம், தங்க விலைகளை நேரடியாக ட்ராக் செய்யும் கோல்டு இடிஎஃப் களின் அடிப்படையிலேயே அமையும். கோல்டு சேவிங்ஸ் ஃபண்டுகளுக்கான பராமரிப்புக் கட்டணம், இடிஎஃப் உடன் ஒப்பிடுகையில் அதிகமாக இருக்கும்.
வர்த்தகத்தில் சௌகர்யமாக உணராத முதலீட்டாளர்கள் மற்றும் டீமாட் கணக்கு இல்லாதோர் இதனை தேர்வு செய்யலாம். எனினும், கோல்டு ஃபண்ட் மற்றும் கோல்டு இடிஎஃப் ஆகியவற்றுக்கு பராமரிப்புத் தொகை செலுத்த வேண்டி உள்ளதால் இவை கூடுதலான விலை கொண்டுள்ளன. மேலும், இவை அதிக எக்சிட் லோடுகளை கொண்டுள்ளன.


Click it and Unblock the Notifications