தங்க நாணயம் வாங்கும் முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்

சென்னை: கடந்த 15 நாள்களாக தங்கத்தின் விலை 15 முதல் 20 சதவீதம் அளவிற்கு குறைந்திருக்கிறது. அதனால் இந்தியாவில் உள்ள பல நகைக் கடைகள் மக்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடிக் கொண்டிருக்கின்றன. தங்கத்தை, தங்க நாணயங்கள் மற்றும் தங்கள் நகைகள் என்று மக்கள் அதிகமாக வாங்குகின்றனர். எனினும் தங்க நாணயங்களை வாங்கும் முன்பு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை இதோ,

விலை வேறுபாட்டை சரிபார்த்துக் கொள்ளுங்கள்

விலை வேறுபாட்டை சரிபார்த்துக் கொள்ளுங்கள்

வங்கிகள் மற்றும் நகைக் கடைகள் ஆகியவை தங்க நாணயங்களை விற்பனை செய்தாலும், அந்த நாணயங்களின் விலை வங்கிகளுக்கு வங்கிகள் மற்றும் நகைக் கடைகளுக்கு நகைக் கடைகள் மாறுபடுகின்றன. அதனால் தங்க நாணயங்களின் விலையை ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லது. தங்க நாணயங்கள் வாங்குவது ஒரு இருசக்கர வாகனம் வாங்குவது போல் அல்ல. ஏனெனில் இருசக்கர வாகனங்களின் விலை அனைத்து டீலர்களிடமும் ஒரே மாதிரியாகவே இருக்கும். ஆனால் தங்க நாணயங்களின் விலையில் பெரிய வித்தியம் இருக்க வாய்ப்பு உண்டு. எனவே தங்க நாணய விலைகளை ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லது.

மீண்டும் வாங்காத வங்கிகள், மீண்டு வாங்கும் நகைக் கடைகள்

மீண்டும் வாங்காத வங்கிகள், மீண்டு வாங்கும் நகைக் கடைகள்

வங்கிகளில் தங்க நாணயங்களை வாங்கி அவற்றை மீண்டும் வங்கிகளிடம் விற்க நினைத்தால் அந்த தங்க நாணயங்களை வங்கிகள் மீண்டும் வாங்குவதில்லை. ஆனால் நகைக் கடைகள் அப்படியல்ல. நகைக் கடைகளில் வாங்கிய தங்க நாணயங்களை அவர்களிடமே விற்றாலும் அவர்கள் மீண்டும் வாங்கிக் கொள்வார்கள். அவ்வாறு விற்கப்படும் நாணயங்களுக்கு ஒரு கிராமுக்கு ரூ.100 குறைத்து அந்த கடைகள் மீண்டும் வாங்கிக் கொள்கின்றன.

வங்கிகளைவிட நகைக் கடைகளில் விலை குறைவு

வங்கிகளைவிட நகைக் கடைகளில் விலை குறைவு

பெரும்பாலும் வங்கிகளைவிட நகைக் கடைகளில் தங்க நாணயங்களின் விலை குறைவாக இருக்க வாய்ப்பு உண்டு. எனினும் பல வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் தங்க நாணயங்களை விற்பனை செய்கின்றன. ஆனால் தனியார் வங்கிகளில் தங்க நாணயங்களின் விலை அதிகமாக இருக்கும்.

"Assay" சான்றிதழை சரிபார்த்தல்

தாங்கள் விற்கும் தங்க நாணயங்கள் மிகவும் சுத்தமாக இருக்கின்றன என்பதற்கான "assay" என்ற சான்றிதழை பல வங்கிகளும் மற்றும் நகைக் கடைகளும் வழங்குகின்றன. மேலும் எல்லா வங்கிகளுமே மிக எளிதாக பார்க்கக்கூடிய உடையாத ஒரு கண்ணாடி உறையில் தங்க நாணயங்களைப் போட்டுத் தருகின்றன. எனவே மற்ற இடங்களில் தங்க நாணயங்களை வாங்கும் போது assay சான்றிதழ் இருக்கிறதா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.

விலை ஒரு நிலைக்கு வர காத்திருங்கள்

விலை ஒரு நிலைக்கு வர காத்திருங்கள்

உலக அளவில் தங்கத்தின் விலை அடிக்கடி ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறது. குறிப்பாக 15 நாள்களுக்கு முன்பு உலக அளவில் ஒரு அவுன்சு தங்கம் 1322 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது அதன் விலை உயர்ந்து ஒரு அவுன்சு தங்கத்தின் விலை 1470 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே அடிக்கடி விலையேற்றம் அல்லது இறக்கம் இருக்கும் போது தங்க நாணயங்கள் வாங்காமல் தங்கத்தில் விலை ஒரு நிலைக்கு வரும்போது வாங்குவது நல்லது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+