
(Deposits and instruments where there is no TDS deduction)
தங்க சேமிப்புத் திட்டங்கள் செயல்படும் விதம்
நகைக் கடைகள் வழங்கும் தங்க சேமிப்புத் திட்டங்கள் ஏறக்குறைய வங்கிகளில் செய்யப்படும் ரெக்கரிங் டெபாசிட் போன்றதாகும். அதாவது ஒவ்வொரு மாதமும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கியில் டெபாசிட் செய்து வருகிறீர்கள். அந்த தொகைக்கு வங்கியிடமிருந்து உங்களுக்கு வட்டி கிடைக்கிறது.
ஆனால் தங்க சேமிப்புத் திட்டங்களில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி வருகிறீர்கள். ஆனால் அதற்காக உங்களுக்கு நகைக் கடைகள் வட்டியை வழங்குவதில்லை. ஆனால் அதற்கு பதிலாக நீங்கள் செலுத்த வேண்டிய இறுதி மாத தவணையை நகைக் கடைகள் செலுத்துகின்றன.
உதாரணமாக, பெரும்பாலான தங்க சேமிப்புத் திட்டங்கள் 12 மாத காலத்தைக் கொண்டிருக்கும். நீங்கள் ஒரு திட்டத்தில் சேர்ந்து 11 மாதம் பணத்தைச் செலுத்திவிட்டீர்கள். 12வது மாத பணத்தை நகைக் கடைகள் செலுத்தும். அதாவது நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.3000 செலுத்துகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்க 11 மாதம் ரூ.33,000 செலுத்திவிட்டீர்கள். 12வது மாதத் தொகையான ரூ.3000ஐ நகைக் கடைகள் செலுத்திவிடும்.
தங்க சேமிப்புத் திட்டத்தில் இருக்கும் குறைபாடுகள்
தங்க சேமிப்புத் திட்டத்தில் இருக்கும் மிக முக்கிய குறைபாடு என்னவென்றால், திட்ட காலம் முடிவுறும் 12வது மாத இறுதியில் நீங்கள் தங்க நகைகளை வாங்க வற்புறுத்தப்படுவீர்கள். நீங்கள் செலுத்திய பணத்தை, பணமாகத் திரும்பப் பெறமுடியாது. திட்ட கால முடிவில் தங்கத்தின் விலை அதிகமாக இருந்தால், நீங்கள் அதிகமான விலைக்குத் தங்கத்தை வாங்கத் தள்ளப்படுவீர்கள்.
தங்க சேமிப்புத் திட்டங்களை வழங்கும் நகைக் கடைகளுக்கு இந்த திட்டங்களால் ஏராளமான நன்மைகள் உள்ளன. ஏனெனில் திட்டத்தில் சேரும் வாடிக்கையளர்களை, நகைகளை வாங்க, நகைக் கடைகள் வற்புறுத்துகின்றன.
மேலும் இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வரும் லாபம் மிகக் குறைவே. அதற்கு பதிலாக வங்கிகளின் வைப்பு நிதிகளில் சேமித்து வந்தால் இதே லாபத்தை மிக எளிதாகப் பெறலாம். மேலும் வங்கிகள் வழங்கும் பாதுகாப்பை நீங்கள் சேமிக்கும் பணத்திற்கு நகைக் கடைகள் வழங்குவதில்லை.
தங்கள் மகள்களின் எதிர்காலத் திருமணத்திற்காக தங்க நகைகளைச் சேர்க்க வேண்டும் என்ற உந்துதலில் பலர் நகைக் கடைகள் வழங்கும் நகை சேமிப்புத் திட்டங்களில் சேர்ந்துவிடுகின்றனர். ஆனால் அவை அவர்களுக்கு எந்த அளவிற்கு பலன் அளிக்கும் என்பது கேள்விக் குறியே. எனவே தங்கத்தை சேமிக்க விரும்புபவர்கள் தங்க இடிஎஃப்களை வாங்கினால் அது அவர்களுக்கு நல்ல பலனைத் தரும்.


Click it and Unblock the Notifications