நிதி நெருக்கடியை தவிர்ப்பதற்கான வழிகள்.

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நிதி நெருக்கடியை தவிற்பதற்காக முன் கூட்டியே திட்டமிடுவது நல்லது. ஆபத்து கால நெருக்கடியை சாமளிப்பதற்கான நிதியை பாதுகாத்து வைத்திருப்பது உங்களை பல வகைகளிலும் காப்பாற்றும். இங்கே நிதிநிலையை அதிகப்படுத்துவதைப் பற்றியும், ஆபத்து கால நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கான சில குறிப்புகளை வழங்குகிறோம்.

செலவுகள் குறைக்கவும்

செலவுகள் குறைக்கவும்

சில செலவுகள் தவிர்க்க முடியாதது என்றாலும், செலவுகளை குறைக்கலாம். இது மறைமுகமாக நிதியை சேமிக்க உதவும். தேவைப்படாத பொருட்களை கண்டிப்பாக வாங்காதீர்கள். அவ்வாறு இல்லையெனில் கண்டிப்பாக தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே வாங்கவும் நம்மில் பலருக்கும் இருக்கும் ஒரு மிகப் பெரிய பிரச்சனை என்னவெனில், நாம் நம்மிடம் பணம் இருக்கும் பொழுது தேவையற்ற பொருட்களைப் பற்றி கவலைப்படாமல் செலவு செய்து விடுவதுதான்.

செலவுகளை தள்ளிப்போடவும்

செலவுகளை தள்ளிப்போடவும்

சில செலவுகளை எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு ஒத்திவைக்க முடியும். எடுத்துக்காட்டாக ஏர் கண்டிஷ்னருக்கு சர்வீஸ் தேவைப்படும் பொழுது அந்த செலவை குளிர்காலத்திற்கு ஒத்திவைக்க முடியும். வீட்டிற்கு மர வேலை செய்வதாக இருந்தால், உங்களுக்கு பணம் கிடைத்த பொழுது அதை மேற்கொள்ளலாம். அல்லது பணத்தை சேமித்த பிறகு அதற்குரிய செலவுகளை மேற்கொள்ளலாம்.

நிதி

நிதி

தேவைப்படும் பணத்தின் அளவு பெரிதாக இல்லை எனில் அதைப்பற்றிய கவலையை விடுங்கள். அதை திருப்பக் கொடுக்க முடியும் என்கிற நம்பிக்கை உள்ளதெனில், உறவினர் மற்றும் நண்பர்களிடம் இருந்து சிறிய அளவிலான பணத்தை பெற்று உங்களுக்கு தேவைப்படும் மொத்த பணத்தையும் உருவாக்குங்கள். அவ்வாறு பெற்ற பணத்தை சீக்கிரமே திருப்பிக் கொடுக்கும் பட்சத்தில், நீங்கள் தனி நபர் கடன் அல்லது குறுகிய கால கடானுக்கான வட்டியிலிருந்து தப்பிக்கலாம். இதுவும் ஒரு வகையான சேமிப்பாகும்.

நீண்ட கால முதலீடு

நீண்ட கால முதலீடு

உங்களுக்கு தேவைப்படும் பணத்தை உங்களால் சமாளிக்க முடியும் வரை சமாளிக்க முயற்சி செய்யுங்கள். அதற்காக உங்களுடைய நிலையான வைப்பு நிதி, பொது வருங்கால வைப்பு நிதி, என்எஸ்சி அல்லது காப்பீட்டு பிரிமியம் போன்ற நீண்ட கால முதலீடுகளை உடைத்து பணமாக மாற்ற முயற்சி செய்ய வேண்டாம் . எல்லா விதமான வழிகளும் அடைபட்ட பின்னர் மட்டுமே நீண்ட கால முதலீட்டை பணமாக்குங்கள். இத்தகைய நீண்ட கால முதலீடுகள் என்பது நீண்ட கால நோக்கத்தில் அதிகப்படியான வருமானத்தை தரக்கூடியது. அவற்றை குறுகிய கால நோக்கத்திற்காக வீணாக்காதீர்கள்.

தங்கம்

தங்கம்

தங்க இருப்புக்களை பணமாக மாற்றுங்கள், மிகச் சிறந்த திட்டமான இது மட்டும் ரிசர்வ் வங்கியால் ஆரம்பிக்கப்பட்டால் பல்வேறு மக்களின் நிதி நெருக்கடியை சமாளிக்க உதவும். தனி நபர்கள் தங்களிடம் உள்ள தங்க இருப்புகளை தேசிய வங்கியில் கொடுத்து, அதற்கு ஈடாக பணப் பத்திரத்தை பெற்றுக் கொள்ளலாம். இந்த பத்திரம் தங்க இருப்பின் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. இதற்கு நிலையான வட்டி வருவாயும் கிடைக்கும். இது நம்முடைய பண வருவாயை அதிகரிக்கும். மேலும் நிதி நெருக்கடியையும் குறைக்கும்.

பணம்

பணம்

நிதியை கையாளுவதில் ஒழுக்கமான அணுகுமுறையை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். ஏதாவது பொருட்களை வாங்குவற்கு முண்டியடிப்பது, மற்றும் தேவையற்ற பொருட்களை வாங்குவது போன்றவை மாத இறுதியில் உங்களுடைய பர்ஸை பதம் பார்க்கும். ஆகவே புத்திசாலித்தனமாக செலவழித்து சேமிப்பு வழக்கத்தை விட்டு விடாமல் வாழ்க்கை முழுவதும் தொடருங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 ways to avoid a financial crunch?

It is also essential that you prepare yourself early and plan for any contingency in case of cash shortages.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X