கோடக் கோல்ட் இடிஎஃப்!!!

கோடக் தங்க இடிஎஃப் என்பது ஒரு ஓப்பன் எண்டெட் தங்க நிதி ஆகும். மின்னனு வடிவத்தில் விற்பனையாகும் இந்த நிதியின் மூலம் திரட்டப்படும் நிதியானது தங்கத்தில் முதலீடு செய்யப்பயன்படுத்தப்படுகிறது. இந்த நிதி தங்கத்தின் விலையை கூர்ந்து கவனித்து தக்க தருணத்தில் தங்கத்தில் முதலீடு செய்து முதலீட்டாளர்களூக்கு லாபம் தருவதை குறிக்கோளாகக் கொண்டு செயல் படுகிறது. மேலும் இந்த நிதி, முதலீட்டாளர்களுக்கு நேரடியாக தங்கத்தில் முதலீடு செய்யாமல் தங்கத்தில் முதலீடு செய்திருந்தால் கிட்டக் கூடிய முதலீட்டுப் பலனை வழங்குகிறது. இந்த கோடக் தங்க இடிஎஃப்பில் ஒரு யூனிட் என்பது ஒரு கிராம் தங்கத்தின் விலைக்கு சமமாகும்.

முதலீட்டு குறிக்கோள்

முதலீட்டு குறிக்கோள்

இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், தங்கத்தில் முதலீடு செய்திருந்தால் கிடைக்கும் வருவாயை கண்காணிப்பு பிழைக்கு உட்பட்டு உருவாக்குவதாகும்.

கேஜிஇஎஃப்டி(KGEFT) இன் செயல்முறைகள் அதன் பாதுகாப்பாளரான ஸ்காட்டியா மகொட்டாவின் பாதுகாப்பில் உள்ள தங்கத்தின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்தப் படுகிறது. ஸ்காட்டியா மகொட்டாவிடம் உள்ள கட்டித் தங்கம் லண்டன் தங்க சந்தை சங்கத்தின் (LBMA) விதிகளின் படி KGEFTக்கு டெலிவரி செய்யப்படுகிறது.

 

திட்டம்

திட்டம்

கோடக் தங்க இடிஎஃப் கட்டித் தங்கத்தில் முதலீடு செய்கிறது. இது முடிந்த வரை நெருக்கமாக உள்ளூர் சந்தைகளின் தங்கத்தின் உடனடி விலையை கண்காணித்து வருமானத்தை அதிகரிக்க முயற்சி செய்கிறது. எனவே இது முதலீட்டாளர்களூக்கு கட்டித் தங்கத்தில் முதலீடு செய்யாமல் அதற்குரிய முதலீட்டு பலனை அடையும் சந்தர்பத்தை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் ஒரு யூனிட் என்பது கிட்டத்தட்ட ஒரு கிராம் தங்கத்திற்கு சமமாகும்.

இந்த நிதியின் முழு நோக்கம் தங்கத்தில் முதலீடு செய்வதாகும். இந்த நிதி தொடர்ந்து தங்கத்தின் உடனடி விலையை கண்காணித்து வருகிறது. இந்த நிதி தங்கத்தில் முதலீடு செய்தது போக எஞ்சியிருக்கும் தொகையை கடன் மற்றும் பண சந்தை உபகரணங்களில் முதலீடு செய்கிறது.

 

அடிப்படை விவரம்

அடிப்படை விவரம்

பட்டியலிடப்பட்ட சந்தைகள்: பிஎஸ்இ, என்எஸ்இ
குறைந்தபட்ச முதலீடு: ரூ 5000
மேலாளர்: திரு அபிஷேக் பைசன்.
ஐஎஸ்ஐஎன்(ISIN): INF373I01015

திரும்பப் பெறும் முறை

திரும்பப் பெறும் முறை

முதலீட்டாளர் தன்னுடைய முதலீட்டை திரும்பப் பெற நினைத்தால் அதற்குறிய ஏஎம்சி (AMC) மீட்பு கோரிக்கை படிவத்துடன் முதலீட்டாளருடைய மீட்பு கோரிக்கையுடன் அதற்குரிய சேமிப்பு முகவர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அந்த படிவத்தை சமர்பிக்கும் முன் அதில் சேமிப்பு முகவரின் ஒப்புதல் கையொப்பம் பெற்ற பின் சமர்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை பெறும் முகவர் அதைப் பரிசீலித்து நிறுவன பதிவாளருக்கு அனுப்பி வைப்பார். முதலீட்டை திரும்பப் பெறும் காலம் அந்தந்த சேமிப்பு நிறுவங்களின் வரையறைகளைப் பொறுத்தது. முதலீட்டை திரும்பப் பெறும் காலம் படிவத்தை சமர்பித்த நாளிருந்து அதிக பட்சம் 10 வணிக நாட்கள் ஆகும்.

வேறுபாடு தன்மை

வேறுபாடு தன்மை

ஒரு சொத்து பிரிவான இது உங்களுடைய போர்ட்ஃபோலியோவிற்கு வேறுபடு தன்மையையினுடைய நன்மைகளை தருகிறது.

பணப்புழக்கம்

பணப்புழக்கம்

இது பங்கு போன்ற வணிகமாவதால், இதை வாங்குதல் மற்றும் விற்பது மிகவும் எளிது. எனவே இது முதலீட்டிற்கு நீர்மைத் தன்மையை வழங்குகிறது.

அபாயமின்மை

அபாயமின்மை

கோடக் தங்க இடிஎஃப் திருட்டு மற்றும் பிற ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பு வழங்குகிறது. மேலும் தங்கத்தின் சுத்தத்தை பற்றிய கவலை உங்களூக்கு இல்லை.

பாதுகாப்பு

பாதுகாப்பு

இங்கு அனைத்து நடவடிக்கைகளும் மின்னணு முறையில் நடப்பதால், இந்த நிதி எதிர்பாராத அசம்பாவிதங்களில் இருந்து உங்களுடைய முதலீட்டிற்கு பாதுகாப்பு அளிக்கிறது.

குறைந்த செலவு

குறைந்த செலவு

கோடக் தங்க இடிஎஃப் வாங்கும் பொழுதும் விற்கும் பொழுதும் ஏற்படக்கூடிய செலவுகள், கட்டித் தங்கத்தை வாங்கி, சேமித்து, விற்பனை செய்யும் செலவுகளை விட மிகக் குறைவு. மேலும் இங்கு உங்களுக்கு காப்பீடு செலவும் இல்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+