தங்க நிதி என்றால் என்ன? அவற்றில் முதலீடு செய்யலாமா?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்க நிதி என்றால் என்ன? அவற்றில் முதலீடு செய்யலாமா?
சென்னை: வெவ்வேறு வடிவங்களில் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பினால், அத்தகைய பொருட்களைப் பற்றி தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். பொதுவாக நாம் தங்க நிதி மற்றும் தங்க ஈடிஎஃப்(ETF) பற்றி குழப்பிக் கொள்வோம். மேலும் நம்முடைய குழப்பத்தை அதிகப்படுத்தும் விதமாக இவை இரண்டுமே மியூச்சுவல் ஃபண்ட்கள் ஆகும்.

தங்க நிதி என்பது மியூச்சுவல் ஃபண்டின் ஒரு பகுதியாகும். ஆனால் ஒருவர் தங்க நிதியையும் தங்க ஈடிஎஃப் ஐயும் குழப்பிக் கொள்ள கூடாது. ஏனெனில் இந்த இரண்டுக்கும் வெவ்வேறான முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன.

தங்க நிதிகள் தங்க ஈடிஎஃப்களில் முதலீடு செய்கின்றன. மேலும் தங்க ஈடிஎஃப்கள் பங்குகள் போல் பங்கு சந்தைகளில் பட்டியலிடப்பட்டு வர்த்தகமாகின்றன. ஆனால் தங்க நிதிகள் தங்க துறையைச் சேர்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்கின்றன.

இந்த நிதி விஷயத்தில், நிதி இயக்கம் தங்க ஈடிஎஃப்களை சார்ந்துள்ளது. அவைகளுடைய நிதி இயக்கம் நேரடியாக தங்கத்தின் விலையை சார்ந்துள்ளது. தங்க நிதிகளில் நிர்வாக கட்டணம் தங்க ஈடிஎஃப்களுடன் ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது.

வர்த்தகத்தை விரும்பாத மற்றும் டீமேட் கணக்கு இல்லாத முதலீட்டாளர்கள் இந்த தங்க நிதியை தேர்வு செய்யலாம். ஆனால் கூடுதலாக தங்க நிதி மற்றும் தங்க ஈடிஎஃப் பராமரிப்புக் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் இவை இரண்டிற்கும் அதிக வெளியேறும் கட்டணம் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are gold funds? Should you invest in them?

If you are looking for investment in gold in different forms you should have clear idea on the product. Usually, people get confused with gold fund and gold etf. However, they both are products from mutual fund.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X