
(Gold rates in India on July 2)
கடந்த ஓராண்டில், இந்திய கோல்டு இடிஎஃப்கள், தங்க விலைகளைச் சார்ந்து சுமார் 13 சதவீத நெகடிவ் ரிட்டன்களை வழங்கியுள்ளது. இந்த மோசமான ரிட்டன்களைப் பார்க்கும் போது, எவர் மனதிலும் கேள்வி: தற்போது கோல்டு இடிஎஃப்களை விற்கலாமா? என்பதே ஆகும்.
அதற்கு முன் சர்வதேச தங்க விலையின் போக்கு எவ்வாறு உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளுதல் அவசியம்; ஏனெனில், இந்திய கோல்டு இடிஎஃப்கள் சர்வதேச விலைகளையே பெரும்பாலும் பின்பற்றுகின்றன.
தங்கத்தின் விலையில் சுமார் மூன்று ஆண்டுகளில் குறைந்த விலையை அடைந்துள்ளது, இவ்வளவு குறைந்த விலையில் இடிஎஃப்களை விற்பது புத்திசாலித்தனம் அல்ல. சொல்லப் போனால், வீழ்ச்சியின் போது வாங்குவதும், விலையேற்றத்தின் போது விற்பதுமே முதலீடுகளின் தாரக மந்திரமாகும். தங்கமும் இதற்கு விதிவிலக்கல்ல.
மேலும், உலகெங்கிலும் பெரும்பாலான நிதி நிறுவனங்கள் மற்றும் பிரதான முதலீட்டு வங்கிகள், தனியிட தங்க விலை இலக்கை ஒரு அவுன்ஸுக்கு சுமார் 1250-1400 டாலர்கள் என்று நிர்ணயத்துள்ளன. இது, ஒரு அவுன்ஸுக்கு 1185 டாலர்கள் என்ற தற்போதைய விலையைக் காட்டிலும் மிகவும் அதிகமாகும்.
இந்த பெருமதிப்பு கொண்ட உலோகம் மோசமான சமயங்களில் எல்லாம் கைகொடுக்கக் கூடியதாக இருந்துள்ளது. தற்சமயம் உலகளவில் நிறைய நன்மை தரும் விஷயங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. யு.எஸ். மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து வந்து கொண்டிருக்கும் பொருளாதார புள்ளி விவரங்கள் நம்பிக்கை தரக்கூடியனவாய் உள்ளன. தற்போது ஈக்விட்டிகள் தான் முதலீட்டுக்கான நேச்சுரல் அஸ்ஸெட் க்ளாஸாக உள்ளன, தங்கம் இல்லை.
அடுத்து வரும் ஆண்டில் தங்கத்தின் போக்கு எவ்வாறு இருக்கும் என்பது, ஃபெட் அதன் குவான்டிட்டேட்டிவ் ஈஸிங் ப்ரொக்ராமை பொறுத்தே அமையும். ஃபெட் அமைப்பு ஒவ்வொரு மாதமும் பல்வேறு சொத்துகளை வாங்கியதன் மூலம் லிக்விடிட்டியை புகுத்தி வந்துள்ளது; இதில் பெரும்பாலான தொகை தங்கத்தில் முடங்கியுள்ளது. இவ்வமைப்பு தன் தூண்டுதலை வாபஸ் பெறத் தீர்மானிக்கும் பட்சத்தில் தங்கத்தின் விலை சரிவைடையும்.
அதனால் கோல்டு இடிஎஃப்களும் அவ்வாறே சரிவை நோக்கிச் செல்லும். மற்றொரு புறம், கொரிய தீபகற்பம் அல்லது இரான்-இஸ்ரேல் விவகாரங்கள் தலை தூக்கும் பட்சத்தில் தங்கத்தின் விலை எட்டாத உயரத்துக்கு மறுபடி செல்லக்கூடும்.
தற்சமயம், ஃபெட் என்ன செய்யக்கூடும் அல்லது உலகளவில் என்ன மாற்றங்கள் நிகழக்கூடும் என்பவற்றையெல்லாம் யூகிப்பது மிகவும் சிரமம்.
எவ்வாறாயினும், தொடர்ந்து முதலீடுகளை கையில் வைத்திருப்பதே அறிவுடைமையாகும். பயத்தில் அனைத்தையும் விற்று விட்டால், அது நஷ்டங்களுக்கும், மனவருத்தங்களுக்குமே வித்திடுவதாக இருக்கும்.
More From GoodReturns

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?



Click it and Unblock the Notifications