நீங்கள் ஏற்கனவே நிரந்தர வைப்புத்தொகையில் முதலீடு செய்திருந்தாலும் அல்லது இப்போது முதலீடு செய்ய விருப்பமிருந்தால், உங்களுக்கு ஒர் நற்செய்தி. வர்த்தக சந்தையில் ரூபாயின் மதிப்பு சரிவதை தடுக்க, மத்திய ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகளின் விளைவாக வங்கிகள் சேமிப்புகளுக்காக வட்டி வீதத்தை அதிகரிக்க தொடங்கிவிட்டன.
பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கிகள்
கடந்த வாரம் பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கிகள் 151-179, 180-269 நாட்களுக்குள் முதிர்ச்சி அடையக்கூடிய சேமிப்புகளுக்கான ஆண்டு வட்டி வீதத்தை 8 விழுக்காட்டில் இருந்து 8.25 விழுக்காடாக உயர்த்தின.
ஒரு வருடம் முதல் இரண்டு வருடங்களில் வருடங்களுக்குள் முதிர்ச்சி அடையக்கூடிய சேமிப்புகளுக்கான வட்டி வீதம் 0.25% உயர்ந்து, 8.75 விழுக்காட்டில் இருந்து 9 விழுக்காடாக உயர்ந்துள்ளன.
எச்டிஎஃப்சி வங்கி
HDFC வங்கி 15 நாட்கள் முதல் 6 மாததிற்குள் முதிர்ச்சி அடையக்கூடிய சேமிப்புகளுக்கான வட்டி வீதத்தை ஒரு விழுக்காடு அதிகரித்துள்ளது.
ஆக்சிஸ் வங்கி
ஆக்சிஸ் வங்கி 15-29 நாட்களுக்குள் முதிர்ச்சி அடையக்கூடிய சேமிப்புகளுக்கான வட்டி வீதத்தை நான்கு விழுக்காடு அதிகரித்துள்ளது. அதாவது 4 விழுக்காட்டில் இருந்து 8 விழுக்காடாக உயர்ந்துள்ளது. மேலும், 7-14 நாட்களுக்குள் முதிர்ச்சி அடையக்கூடிய ஒரு கோடிக்கும் அதிகமான அளவிலான சேமிப்புகளுக்கான வட்டி வீதத்தை நான்கு விழுக்காடு அதிகரித்துள்ளது.
யெஸ் வங்கி
தனியார் வங்கியான யெஸ் வங்கியும், சில குறிப்பிட்ட கால அளவிலான சேமிப்புகளுக்கான வட்டி வீதத்தை 25 தசம பின்னம் முதல் 50 தசம பின்ன விழுக்காடு வரை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது,
பணப்புழக்கத்தை கட்டுபடுத்த மத்திய ரிசர்வ் வங்கி எடுத்த முயற்சிகளின் விளைவாக, வங்கிகள் இந்த முடிவை எடுக்க நேர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
எம்ஸ்எஃப் (MSF) விகிதம்
மேலும் ரிசர்வ் வங்கியின் MSF விகிதத்தையும் 200(bps) புள்ளிகள் அதிகரித்ததை நினைவிருக்கும். இதன் விளைவாக ரிசர்வ் வங்கியிடம் இருந்து 8.25 விழுக்காடு வட்டி அளவில் வங்கிகள் கடன் பெற்றது, மேலும் ஜூலை 17ஆம் தேதியில் இருந்து 10.25 விழுக்காடு வட்டி விகித அளவை கடன் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.
மேலும் ரிசர்வ் வங்கி, நிகர தேவை மற்றும் காலக் கடப்பாடுகளில் (NDTL) இருந்து வங்கிகள் கடன் பெரும் தொகையை ஒரு விழுக்காடாக செய்துள்ளது.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications