இந்திய வர்த்தக சந்தையின் நிலை???: 3ஆம் குவான்டிடேடிவ் ஈசிங்

மும்பை: வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்க மத்திய வங்கி தனது பத்திர கொள்முதல் திட்டத்தை குறைக்கும் என்ற செய்தி முதலீட்டாளர்களிடையே கவலை ஏற்படுத்தியது. இதன் விளைவாக கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்திய வர்த்தக சந்தைகள் முழுவதும் தீப்பற்றிக்கொண்டன.

பொருளாதார மற்றும் பெருநிறுவன அடிப்படைகளின் தாக்கம் குறைந்து, தற்போது பன்னாட்டு பணச்சந்தையில் ஏற்படும் மாற்றங்களே பங்குவிலையை நிர்ணயம் செய்யும் போக்கு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க மத்திய வங்கி மூன்றாம் காலாண்டிற்கான பத்திர கொள்முதல் திட்டத்தை வெளியிட்ட பின்னர் பன்னாட்டு பணச்சந்தையில் அதீதமான பணப்புழக்கம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. நிறைய முதலீடுகள் பங்குசந்தைக்கும் மற்றும் தங்கம் போன்ற முதலீடுகளை நோக்கியும் பாய்ந்தன. 2013 ஆண்டின் முதல் சில மாதங்களில், ஜப்பானுக்கு அடுத்து ஆசியாவில் இந்தியாவிற்கு அதிகமான பன்னாட்டு மூலதனம் வந்தது.

3ஆம் குவான்டிடேடிவ் ஈசிங் திட்டம்

3ஆம் குவான்டிடேடிவ் ஈசிங் திட்டம்

மூன்றாம் குவான்டிடேடிவ் ஈசிங் திட்டத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாதமும் 85 பில்லியன் டாலர் மதிப்புள்ள அடமானக் கடன் பத்திரங்களை அமெரிக்க மத்திய வங்கி வாங்கி வருகிறது. அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சிப்பாதையில் இருந்து மீண்டு, வளர்ச்சிப்பாதையில் வலுவாக சென்று கொண்டிருப்பதால் அடமானக் கடன் பத்திரங்களை வாங்கும் அளவினை மத்திய வங்கி செப்டம்பர் மாதம் முதல் குறைக்கலாம். இதன் காரணமாக உலக பணப்புழக்கம் குறையும் என்று அர்த்தம், இந்திய பங்கு சந்தைகளில் வெளிநாட்டு நிதி ஓட்டம் குறைவாக இருக்கும்.

இந்திய சந்தைகளில் தீ!!!

இந்திய சந்தைகளில் தீ!!!

இதன் காரணமாகவே கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்திய சந்தைகளில் தீப்பற்றிகொண்டது. அமெரிக்க மத்திய வங்கி இந்த நடவடிக்கைகளை செயல்படுத்துமாயின் அந்நிய நிதி இந்தியச் சந்தையில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு விடும் என்று முதலீட்டாளர்களுக்கு கவலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாகவே அந்நிய முதலீட்டாளர்கள் பெருபான்மையான பங்குகளை கொண்டுள்ள எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐடிசி போன்ற முக்கிய பங்குகளின் வர்த்தகம் சரிந்தது.

விளைவு

விளைவு

இதன் விளைவாக அந்நிய முதலீடு குறைந்து இந்தியா ரூபாய் மதிப்பு மேலும் சரியும்.

இந்திய வர்த்தக சந்தையின் நிலை???

இந்திய வர்த்தக சந்தையின் நிலை???

அமெரிக்காவின் மத்திய வங்கி, பத்திர கொள்முதல் திட்டத்தில் முடிவு எடுக்கப்போவது உறுதி. அதுவரை இந்திய சந்தை ஏற்ற இறக்கங்களை ஓரளவுக்கு சமாளிக்கமுடியும். அதன்பின் அமெரிக்க பாம்பாட்டியின் மகுடி இசைக்கு இந்திய பாம்புகள் ஆடுவது உறுதி.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+