'வாட்' வரி தெரியும்.. அது என்ன 'மாட்' (மினிமம் ஆல்டர்னேட்டிவ் டாக்ஸ்)?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மினிமம் ஆல்டர்னேட்டிவ் டாக்ஸ் அல்லது மாட் என்றால், அபரிமிதமான லாபம் பெறும், டிவிடென்ட்டை அதன் பங்குதாரர்களுக்கு விநியோகிக்கும் நிறுவனங்கள்/குழுமங்கள் அல்லது லிமிட்டெட் லையபிலிட்டி பார்ட்னர்ஷிப் (LLP) போன்றவை மீது விதிக்கப்படும் வரியாகும். இவ்வாறு டிவிடென்ட்களைப் பெறும் பங்குதாரர்கள் இந்திய வரி விதிப்பு அமைப்பை தமக்கு சாதகமாக்கிக் கொண்டு அரசின் வரி விதிப்பு பெட்டகத்துக்கு உரிய தொகையை செலுத்துவதில்லை.(வாட் என்றால் என்ன?)

எனவே, இது போன்ற கார்ப்பொரேட்களுக்கு, குறைந்த பட்ச வரியாக, அவர்களின் பதிவு செய்யப்பட்ட லாபத்தில், அதாவது அவர்களின் கணக்குப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள லாபத்தில், ஒரு குறிப்பிட்ட சதவீதம் வரையிலான தொகை மினிமல் ஆல்டர்னேட்டிவ் டாக்ஸ் (மாட்) ஆக வசூலிக்கப்படுகிறது. மேலும், இது போன்று கார்ப்பரேட்களின் கணக்குப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள லாபக்கணக்கு, வருமான வரிச் சட்டத்தின் நிபந்தனைகளின் படி உள்ளனவா என்பதை உறுதி செய்து சான்றிதழ் அளிக்க வேண்டியது ஒரு கணக்கு தணிக்கையாளரின் கடமையாகும்.

மாட் வரிவிதிப்புக்கான காரணம்

மாட் வரிவிதிப்புக்கான காரணம்

கார்ப்பரேட்கள் தங்களின் மிகச் சிறப்பான வரி திட்டமிடல் மற்றும் வருமான வரிச் சட்டத்தின் கீழ் காணப்படும் பிடித்தங்கள், விலக்குகள் மற்றும் ஊக்கத் தொகைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அரசின் வருமான வரி பெட்டகத்துக்கு உரிய தொகையை செலுத்தாமல் இருக்க முற்படுவதால், மாட் வரி உலகளவில் பல்வேறு அரசாங்கங்களால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாட் வரி விதிப்பு, வரி வசூலிப்பில் காணப்படும் குறைபாடுகளைக் களைந்து, அதன் மூலம் பணவீக்கம் உயரக்கூடிய சாத்தியக்கூறை முறியடிப்பதற்கான பல்வேறு அரசாங்கங்களின் முனைப்பே ஆகும்.

மாட் வரி விதிக்கப்படும் விகிதம்

மாட் வரி விதிக்கப்படும் விகிதம்

பதிவு செய்யப்பட்ட லாபத்தில் சுமார் 18.5 சதவீதத்துக்கும் குறைவான டாக்ஸ் லையபிலிட்டியைக் கொண்டுள்ள கார்ப்பரேஷன்கள் அல்லது நிறுவனங்கள், கல்வித்தீர்வை மற்றும் வருமான வரிச் சட்டத்தின் நிபந்தனைகளின் படி கணக்கிடப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ள லாபங்களுக்கான கூடுதல் கட்டணம் ஆகியவற்றோடு மினிமம் ஆல்டர்னேட் டாக்ஸ் (மாட்) ஆக சுமார் 18.5% கட்ட வேண்டியிருக்கும்.

19.06 சதவீத மாட்

19.06 சதவீத மாட்

லிமிட்டெட் லையபிலிட்டி பார்ட்னர்ஷிப் நிறுவனங்கள் (எல்எல்பிக்கள்), அவர்களுக்கான வழக்கமான வருமான வரி லையபிலிட்டித் தொகை, அவர்களுக்கு விதிக்கப்பட்ட மாட் வரித்தொகையைக் காட்டிலும் குறைவாக இருப்பின், அவர்களது சரிசெய்யப்பட்ட மொத்த வருமானத்திலிருந்து சுமார் 19.06% வரை மினிமம் ஆல்டர்னேட் டாக்ஸ் (மாட்) ஆக செலுத்த வேண்டியிருக்கும்.

மாட் கிரெடிட்

மாட் கிரெடிட்

ஒட்டுமொத்த வரி வசூலிப்பில், புறக்கணிக்கத்தக்க வரி லையபிலிட்டியைக் கொண்டிருக்கும் கார்ப்பரேஷன்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற நோக்கில் அவர்களின் மீது விதிக்கப்பட்ட கூடுதல் தொகையே மாட் கிரெடிட் என்று குறிப்பிடப்படுகிறது. ஒரு நிறுவனத்தின் சராசரி வரி லையபிலிட்டி, அவர்கள் செலுத்தக்கூடிய மாட் வரியைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் பட்சத்தில், வழங்கப்பட்ட ஊக்கத்தொகைகளை அரசாங்கம் வாபஸ் வாங்குவதில்லை; அதற்கு மாறாக, ஒரு வித அட்ஜஸ்ட்மென்ட் அல்லது கேரி ஃபார்வர்டு வாய்ப்பு, அடுத்து வரும் 10 வருடங்கள் வரை வழங்கப்படுகிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is minimum alternative tax (MAT)?

Minimum alternate tax or MAT is a tax levied on firms/ companies or limited liability partnership (LLPs) making abundant profits as well as distributing dividend
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X