ஏம்ப்பா இப்ப தங்க வாங்கலாமா?

சென்னை: கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையில் கடும் ஏற்ற இறக்கங்கள் சந்தித்து வருகிறது. ஒவ்வொரு முறையும் தங்க விலை அதிகரிக்கும் என அறிகுறிகள் தெரிந்தாலும், அதன் பின்னர் குறைந்து விடுவதும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. 12 வருடங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இந்த வருடம் இறங்குமுகத்தில் முடிவடையலாம் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது உள்ள சூழலில் தங்கத்தின் விலை உயரும்போது அதனை ஏன் விற்க வேண்டும், என்பதற்கான ஐந்து காரணங்களை இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் தங்கத்தின் தேவை குறைகிறது

இந்தியாவில் தங்கத்தின் தேவை குறைகிறது

இந்திய அரசு தங்க இறக்குமதியை குறைக்க, எடுத்த தொடர் நடவடிக்கைகளின் விளைவாக ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் தங்க இறக்குமதி 95 விழுக்காடு வீழ்ந்தது. இந்த காலகட்டத்தில் ஒரு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.68.81க்கு வீழ்ந்தது நினைவில் இருக்கலாம், அதிக தங்க இறக்குமதியின் விளைவாக பெருமளவில் வெளியேறும் அமெரிக்க டாலர் இந்திய ரூபாய் மதிப்பை குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.

இந்தியாவில் தங்கத்தின் தேவை குறையும் வேளையில், தங்க விலை மேலும் குறையும் சாத்தியக்கூறுகள் அதிகம்.

 

 

அமெரிக்க மத்திய வங்கியின் QE திட்டத்தின் தாக்கம்

அமெரிக்க மத்திய வங்கியின் QE திட்டத்தின் தாக்கம்

செப்டம்பர் 19 ஆம் தேதி முடிவடைய இருக்கும் அமெரிக்க மத்திய வங்கியின் கடன் பத்திரக் கொள்முதல் குறைப்பு திட்டத்தின் தாக்கம் அதிக அளவில் இருக்குமென ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.

அமெரிக்க மத்திய வங்கி ஒவ்வொரு மாதமும் 85 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கடன் பத்திரங்களை வாங்கி வருகிறது. இந்த மொத்த பணமும் உலகச் சந்தைகளில் புழக்கத்திற்கு விடப்படுகிறது. அவ்வாறு புழக்கத்தில் வரும் பணம் தங்கத்தை நோக்கியும் வருகிறது. ஆக ஒருவேளை அமெரிக்க மத்திய வங்கி தனது கடன் பத்திர கொள்முதல் திட்டத்தை குறைக்குமானால், உலகளாவிய அளவில் பணப்புழக்கம் குறைந்து தங்கத்திற்கான தேவையும் குறையும். தங்கத்திற்கான தேவையும் குறைந்தால் அதன் விலையும் குறையும்.

 

 

அமெரிக்க கடன் பத்திரங்களின் வட்டி விகிதம் உயர்வு

அமெரிக்க கடன் பத்திரங்களின் வட்டி விகிதம் உயர்வு

அமெரிக்காவில் கடன் பத்திரங்களின் வட்டி விகிதம் உயர்ந்து, கிட்டத்தட்ட 3 சதவிகிதத்தை தொட்டுள்ளது. உயர்ந்து வரும்
பத்திரங்களுக்கான வட்டிவிகிதம் நிச்சயமாக தங்கம் மற்றும் பங்குச்சந்தைகளுக்கு நல்ல செய்தி அல்ல. கடன் பத்திரங்களின் வட்டி விகிதம் உயர்ந்தால், முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்று கடன் பத்திரங்களின் மீது தங்கள் பணத்தை முதலீடு செய்வர்.

 

 

ரூபாய் மதிப்பு அதிகரிக்கிறது

ரூபாய் மதிப்பு அதிகரிக்கிறது

கடந்த சில நாட்களாக ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருகிறது. ரூபாய் மதிப்பு உயரும் போதெல்லாம், தங்க இறக்குமதி குறைகிறது. ஏற்கனவே இந்த மாதத்தில் ரூபாய் மதிப்பு 7 சதவிதம் அதிகரித்துள்ளது மற்றும் இந்தியவில் தங்க விலை மதிப்பு 30,000 கிழே குறைந்து விட்டது.

உலகளவில் தங்கத்தின் விலை சரிந்தது

உலகளவில் தங்கத்தின் விலை சரிந்தது

இந்த ஆண்டு உலகளவில் தங்க விலை 20 விழுக்காடு குறைந்துவிட்டது. தங்கத்தின் விலை மேலும் குறையும் என தொழில்நுட்ப ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் சர்வேதச தங்க விலையை ஒட்டியே இந்தியாவில் தங்கவிலை நிர்ணயிக்கப்படுகின்றன. இதனால் தங்கத்தின் விலை நிச்சயமாக சரியும், எனவே தங்கத்தை விற்க இது சரியான நேரம். மேலும் தங்கத்தை வாங்க வேண்டும் என்று நினைத்தால், சில வாரங்கள் காத்திருக்கவும் வாங்கவும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+