வைப்பு நிதிகளை முதிர்வு காலத்திற்கு முன்னதாக முறித்துக் கொண்டால் விளையக்கூடிய இழப்புகள்!!

வைப்பு நிதிகளை முதிர்வு காலத்திற்கு முன்னதாக முறித்துக் கொண்டால் விளையக்கூடிய இழப்புகள்!!
முதலீடு செய்வதற்காக தங்கத்தை இனிமேலும் கருத முடியாது என்று ஆய்வாளர்கள் கூறி வரும் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில், ஃபிக்ஸட் டெபாசிட்கள் சிறந்த முதலீட்டு வாய்ப்பாக தென்படுவதில் வியப்பு ஒன்றுமில்லை. இச்சூழலை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள விரும்பும் வங்கிகள், குறிப்பிட்ட காலக்கெடுக்களுடன் கூடிய நிரந்திர வைப்பு நிதிகளுக்கு (எஃப்டி) வட்டி விகிதங்களை உயர்த்தியிருப்பதன் மூலம் மேலும் பல வாடிக்கையாளர்களுக்கு எஃப்டிக்களில் முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை வலுப்படுத்தியுள்ளன.

எஃப்டியின் நிலையான வட்டி விகிதம் மற்றும் பாதுகாப்பான தன்மை போன்றவற்றினால், அபாயமான முதலீடுகளை செய்யத் தயங்கும் முதலீட்டாளர்கள், பல்வேறு மெச்சூரிட்டி காலங்களுடனான எஃப்டிக்களில் முதலீடு செய்ததன் மூலம் தொடர்ந்து ரிட்டர்ன்கள் கிடைக்கப் பெறுகின்றனர்.

முதலீட்டாளர்கள், தங்களின் எதிர்கால பணத் தேவைகளை உத்தேசித்து தங்கள் எஃப்டிக்களை குறிப்பிட்ட காலகட்டத்திற்கு லாக் இன் செய்து வைத்திருந்தாலும், சில சமயங்களில் அவர்களின் வாழ்வில் ஏற்படக்கூடிய சில எதிர்பாரா நிகழ்வுகள் அக்குறிப்பிட்ட காலத்துக்கு முன்னரே தங்கள் எஃப்டியை முறித்துக் கொள்ளவோ அல்லது தாங்கள் முதலீடு செய்துள்ள பணத்தை ப்ரீமெச்சூர் வித்ட்ராயல் செய்யும்படியோ அவர்களை நிர்பந்திக்கக்கூடும்.
மேலும், பொருளாதாரக் கண்ணோட்டத்தைப் பொறுத்து, வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட்கள் மீதான வட்டி விகிதங்களை அவ்வப்போது மாற்றி வருவதால், இதனைக் காட்டிலும் அதிகமான ரிட்டர்ன்களை வழங்கக்கூடிய ஆதாயம் மிக்க முதலீட்டுத் திட்டங்களில் தங்கள் பணத்தை செலுத்தும் நோக்கில், தற்போதுள்ள முதலீடுகளை முறித்துக் கொள்ளலாம் என்ற சபலத்தினாலும் சில வாடிக்கையாளர்கள் அவ்வாறு முனைகின்றனர்.

மேலும், எஃப்டியை குறிப்பிட்ட காலத்துக்கு முன்னரே முறித்துக் கொள்வது, வங்கியுனுடைய அஸ்ஸெட்ஸ் மற்றும் லையபிலிட்டிக்களுக்கு இடையே பொருத்தமற்ற நிலை உருவாக வழி வகுப்பதினால், வங்கிகள் இந்த இழப்புகளை ஈடு செய்ய அபராதக் கட்டணங்கள் மற்றும் இதர இழப்புகளாக வாடிக்கையாளர்களின் தலை மீது சுமத்துகின்றனர். இவ்வாறு ஃபிக்ஸட் டெபாசிட்களை குறிப்பிட்ட காலத்துக்கு முன்னரே முறித்துக் கொள்வதனால் வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய இத்தகைய இழப்புகள், வங்கிகளுக்கு இடையே வேறுபடுகின்றன. எனினும், இவ்வாறு சுமத்தப்படும் சில பொதுவான இழப்புகள் அல்லது அபராதக் கட்டணங்கள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன:

1. வட்டி விகிதம், டெபாசிட் தொகை வங்கியின் வசம் இருந்த காலகட்டத்தை உத்தேசித்து வழங்கப்படும்:

ஃபிக்ஸட் டெபாசிட்டை குறிப்பிட்ட காலத்துக்கு முன் முறித்துக் கொண்டால், எஃப்டியின் மீதான வட்டி விகிதம், டெபாசிட் செய்யப்பட்ட காலத்தின் போது இருந்த விகிதத்தில், டெபாசிட் தொகை வங்கியின் வசம் இருந்த காலம் வரை கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.

2. அபராதக் கட்டணங்கள் அல்லது குறைவான வட்டி விகிதம்:

ப்ரீமெச்சூர் வித்டிராயலானது, ஸ்வீப்-இன் மற்றும் பார்ஷியல் வித்டிராயல்களுக்கு வங்கிகளுக்குத் தக்கவாறு 0.5%-1% வரையிலான குறைவான வட்டி விகிதத்தை வங்கிகள் வழங்கவும் வழி வகுக்கும். சில மாநில வங்கிகள், வாடிக்கையாளர்கள் தற்போது கிடைப்பதைக் காட்டிலும் அதிகமான வட்டி விகிதத்தைப் பெறும் பொருட்டு, தற்போதுள்ள எஃப்டியின் எஞ்சியிருக்கும் தவணைக் காலத்தைக் காட்டிலும் அதிகமான காலத்துக்கு, அதே வங்கியிலேயே மறுமுதலீடு செய்வதற்காக தற்போதுள்ள எஃப்டியை முறித்துக் கொண்டால் அதற்கு அபராதக் கட்டணங்கள் எதுவும் விதிப்பதில்லை. பொதுத்துறை வங்கிகளைப் போல் இல்லாமல், தனியார் வங்கி நிறுவனங்கள் மறுமுதலீடுகள் மற்றும் எஃப்டியை சீக்கிரமே முறித்துக் கொள்ளுதல் போன்றவற்றிற்கும் அபராதம் விதிக்கின்றன.

உண்மையில் எஃப்டியை முதிர்வு காலத்திற்கு முன்கூட்டியே வித்டிராயலோ அல்லது முறித்தோ கொண்டால் எவ்வளவு ரிட்டர்ன் கிடைக்கும் என்பதை பின்வரும் உதாரணத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

உதாரணம்

ஒரு நபர் சுமார் 10,000 ரூபாயை, 6.5% கூட்டு வட்டி வழங்கக்கூடிய 1 வருட கால எஃப்டியில் முதலீடு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஏதோ ஒரு காரணத்தினால், ஏழு மாதங்களுக்குப் பின் அந்த எஃப்டியை முறித்துக்கொள்கிறார். இத்தகைய சூழலில், 7 மாதங்களுக்குண்டான வட்டித்தொகை மட்டுமே அவருக்கு வழங்கப்படும். மேலும் வங்கிகள் இதற்கான அபராதமாக, வட்டி விகிதத்தையும் சுமார் 05%-1% வரை குறைக்கின்றன. ஆக மொத்தம், ரிட்டர்னின் அசல் விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து விடும்.

தேவை இருந்தாலொழிய, மொத்தமாகவோ அல்லது அதிகமான ரிட்டர்னை அளிக்கக்கூடியதான மற்றொரு எஃப்டியில் முதலீடு செய்வதற்காகவோ, முதலீட்டாளர்கள் தங்களின் தற்போதைய எஃப்டி முதலீட்டை முறித்துக் கொள்ள தலைப்படும் முன் நன்கு யோசித்து முடிவெடுத்தல் நலம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+