உடைத்தெரியப்பட்ட சில முதலீட்டு கட்டுக்கதைகள்!!!!..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: முதலீடு என்று வரும் போது அதற்கென தனியாக பார்முலா என எதுவும் கிடையாது. முதலீட்டு துறையில் விளங்கும் பல ஜாம்பவான்களிடம் அறிவுரை பெறலாம். ஆனால் அவை அனைத்தும் சரியாக செயல்படும் என்று சொல்லி விட முடியாது. இதோ முதலீடு பற்றிய சில கட்டுக்கதைகளை பற்றி இப்போது பார்க்கலாம்.

நீண்ட கால முதலீடு

நீண்ட கால முதலீடு

வர்த்தக சந்தையில் நிலையான சூழ்நிலை இல்லாத தற்போதைய சூழலில் நீண்ட கால முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என்பது தாத்தியம் இல்லை. நிறுவனங்களின் வளர்ச்சி கட்டுப்பாடுகளை அதிகமாக நம்பியுள்ளது. இந்த கட்டுப்பாட்டு தடைகளால் தொலைத் தொடர்பு, மருந்து மற்றும் இரும்பு நிறுவனங்கள் அடிக்கடி சரிவை சந்திக்கின்றன.

ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

இதே போல் வளர்ந்து வரும் பல நிறுவனங்கள் இவ்வகை கட்டுப்பாடுகளால், இருந்த சுவடே தெரியாமல் காணாமல் போயுள்ளது. இந்தியவின் பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எல்லாம் இப்போது எங்கே? இந்த பட்டியல் மிகவும் பெரியது. அதனால் நீண்ட கால முதலீடு என்பது ஆபத்தில் கூட முடியலாம்.

பல பங்குகளில் பிரித்து முதலீடு செய்வது உதவும்

பல பங்குகளில் பிரித்து முதலீடு செய்வது உதவும்

ஒரு வருடத்திற்கு முன்பு உங்கள் பணத்தை முழுவதுமாக மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தால் இன்று அதிக லாபம் பார்த்திருந்திருக்கலாம். ஆனால் அதற்கு மாறாக ஆட்டோமொபைல், தொலைத் தொடர்பு மற்றும் இரும்பு நிறுவனங்களில் பிரித்து முதலீடு செய்திருந்தால் லாபம் குறைவாகவே கிடைத்திருக்கும்.

மருந்துவம், ஐ.டி. மற்றும் எஃப்.எம்.சி.ஜி

மருந்துவம், ஐ.டி. மற்றும் எஃப்.எம்.சி.ஜி

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் மருந்துவம், ஐ.டி. மற்றும் எஃப்.எம்.சி.ஜி. நிறுவனங்கள் மட்டுமே நன்றாக லாபம் ஈட்டி கொடுத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. ஏற்கனவே நாங்கள் சொன்னது போல் பங்குச் சந்தை முதலீட்டில் எந்த ஒரு நிரந்த விதி என்பது கிடையவே கிடையாது.

 

 

தங்கத்தில் முதலீடு!!....

தங்கத்தில் முதலீடு!!....

இதுவும் தவறான ஒரு நம்பிக்கையே. கடைசி ஒரு வருடத்தில் தங்கம் எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தியுள்ளது. போட்ட முதலில் 10% சரிவை தான் ஏற்படுத்தியுள்ளது. கன்ஸ்யூமர் ப்ரைஸ் இன்டெக்சும் (CPI) 10% ஒட்டியே சென்றுள்ளது. உலக அரசியல் மற்றும் பொருளாதார சிக்கல்கள் ஏற்படும் போது தங்கத்தின் விலை உயரும்.

லெஹ்மேன் சகோதர்கள்

லெஹ்மேன் சகோதர்கள்

லெஹ்மேன் சகோதர்கள் நெருக்கடிக்கு பிறகு, கடந்த ஐந்து ஆண்டு காலமாக உலகளாவிய பொருளாதார சிக்கல்கள் நிலவி வருவதால் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. தற்போது பொருளாதார நிலை சீராகி வருவதால் தங்கத்தின் விலை சரிந்து பங்குகளின் விலை உயர்கிறது.

வைப்பு நிதி பாதுகாப்பானது

வைப்பு நிதி பாதுகாப்பானது

இதுவும் ஒரு கட்டுக்கதையே. பல முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை நிறுவன வைப்பு நிதியில் முதலீடு செய்து தொலைத்துள்ளனர். முதலீட்டாளர்கள் எப்படி தங்களின் பணத்தை நிறுவன வைப்பு நிதியில் முதலீடு செய்து தொலைத்தனர் என்பதை பற்றி விலாவரியாக ஒரு பிரபல அரசியல் பத்திரிகை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

டிப்ஸ் வேஸ்ட்!!!..

டிப்ஸ் வேஸ்ட்!!!..

முதலீடு செய்வதற்கு எந்த ஒரு நிரந்த விதிமுறைகளும் இல்லை என்பது இப்போது தெளிவாக புரிகிறதா. அதனால் முதலீட்டு வல்லுனர்களிடம் டிப்ஸ் மேல் டிப்ஸ் வாங்கி அப்பாவியாக இருக்காதீர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

A few investments myths debunked

There are no set formulas when it comes to investment. You can have different investment gurus, suggesting different things, which may not necessarily work.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X