மும்பை: இந்தியாவின் முதல் அனைத்து-மகளிர் வங்கியான பாரதிய மஹிளா வங்கி, அடுத்த நான்கு மாதங்களில் சுமார் 16 புதிய கிளைகளை துவக்குவதற்கு திட்டமிட்டுள்ளது.
"அடுத்து வரும் நான்கு மாதங்களில் சுமார் 16 புதிய கிளைகளை எமது அமைப்பில் இணைக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்," என்று மஹிளா வங்கியின் சேர் பர்ஸனும், நிர்வாக இயக்குனருமாகிய உஷா அனந்த சுப்ரமணியன் பிடிஐயிடம் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் தனது இரு கிளைகளை தில்லி மற்றும் இந்தூர் ஆகிய நகரங்களில் புதிதாக துவக்கவுள்ள இவ்வங்கி, அடுத்த நிதியாண்டிலிருந்து கிராமப்புறங்கள் மற்றும் வங்கி வசதி இல்லாத இடங்களில் அதன் 25 சதவீத கிளைகளை துவக்க வேண்டும் என்ற இலக்கை எட்டி விட வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறது.
தற்போது 100 ஊழியர்களுடன் செயல்பட்டு வருகிகது மஹிளா வங்கி, இவர்களுள் பெரும்பாலானோரை மாநில வங்கி அமைப்பில் பணிபுரிந்தவர்கள். இது தவிர, அதிகாரிகள் பிரிவில் சுமார் 110 பிரஷ்ஷர்களை பணியமர்த்தியுள்ளது இவ்வங்கி.


Click it and Unblock the Notifications