இந்த 'சைன்' தெரியுதா.. அப்டீன்னா நீங்க "டாட்டா" காட்ட வேண்டிய 'டைம்' வந்தாச்சு பாஸ்!

சென்னை: வேலை செய்யும் இடத்தில் மோசமான நாள் வருவதை தவிர்க்க முடியாது. ஆனால், மோசமான நாட்கள் அடிக்கடி வந்து போனால், இது அந்த வேலையை விட்டுச் செல்வதற்கான நேரம் என்று சொன்னால் மிகையாகாது.

எந்த நேரத்தில் வேலைய விடலாம் என்று நிறைய பேர் யோசித்துக் கொண்டிருப்பது இன்றளவும் பிரபலமான செய்தி. ஆனால், வேலை எப்பொழுது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லையோ, அந்த நேரத்தில் விட்டு விடுவது நலம். உண்மையான மனிதன் தன்னுடைய வேலையை விட்டு விட மாட்டான் என்று நிறைய பேர் சொல்லுவார்கள், எனினும், தொல்லை தரும் வேலையை இல்லை என்று சொல்வதே மேல்!. எனவே, எப்பொழுது வேலையை விடலாம் என்பதற்கான 5 அறிகுறிகளை நாங்கள் சொல்லுகிறோம்.

கடும் மனஅழுத்தம்

கடும் மனஅழுத்தம்

ஒரு சில மாதங்களுக்கொருமுறை ஒன்றிரண்டு நாட்கள் கடுமையான மன அழுத்தம் தரக்கூடிய வேலை இருந்தால் பரவாயில்லை. உங்களுடைய வேலையை விட மேலான பல விஷயங்கள், தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கின்றன. எனவே, உங்களை நீங்களே வருத்திக் கொள்வதற்கு முன்னதாக வேலையை விடும் முடிவை செயல்படுத்துங்கள்.

சவால் இல்லாத வேலை

சவால் இல்லாத வேலை

நாட்கள், மாதங்கள், வருடங்கள் மேலும் பல ஆண்டுகள் ஒரே இடத்தில் வேலை செய்வதால், உங்களுடைய பணியில் எந்தவித சவால்களையும் எதிர் கொள்ள முடியாது. இதனால் நீங்கள் எதிர்பார்த்ததை விட, வாழ்க்கை போரடிக்கத் துவங்கி விடும். இது உங்களுடைய வேலையின் ஒரு தொடக்கமாகக் கூட இருக்கலாம். எனவே, வேலையில் முன்னேறிச் செல்லும் வாய்ப்புகள் வந்தால், எக்காரணத்தைக் கொண்டும் அவற்றைத் தவர விட வேண்டாம்.

நிறுவனத்தின் நிலை

நிறுவனத்தின் நிலை

நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் எப்பொழுது என்ன நடக்குமோ என்ற நிலை இருந்தால், அந்த நிறுவனத்திடம் இருந்து மாத சம்பளத்தைத் தவிர வேறெதுவும் கிடைக்கப் போவதில்லை. நீங்கள் செய்யும் வேலையை பணம் சம்பாதிக்கும் வழியாக மட்டுமே எண்ணாதீர்கள். பணியிடத்தில் தான் நமது கனவுகள், செயல்வடிவம் பெறுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்திற்கு எந்தவிதமான எதிர்காலமும் இல்லை என்ற நேரத்தில், உங்களுடைய குறிக்கோள்களை சமாதானப்படுத்திக் கொண்டு அங்கே வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

எங்கே வளர்ச்சி?

எங்கே வளர்ச்சி?

ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் முக்கியமானதாக இருக்கும் இலட்சியத்திற்கான ஊக்கத்தை என்றும் இழந்து விட வேண்டாம். நீங்கள் வேலை செய்யும் துறையில், வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பை உங்களுடைய வேலை தரவில்லை என்று நினைத்தால், வேறொரு சரியான வேலைக்கு செல்வதைப் பற்றி யோசிக்கத் துவங்கவும்.

மனம் மாறியதோ!

மனம் மாறியதோ!

நீங்கள் செய்யும் வேலை ஆர்வமூட்டுவதாக இல்லாத போது, மனதிற்கு போரடிக்கத் துவங்குகிறது. விரைவிலேயே உங்களுடைய வாழ்க்கை புதிய திசைகளை தேடுவதை துவங்கும். இப்படிப்பட்ட வேலையில் தவழ்ந்து கொண்டு, குப்பை கொட்டுவதால் உங்களுடைய பணி வாழ்க்கையோ அல்லது நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் எதிர்காலமோ வளரப் போவதில்லை.

கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டு

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+