சென்னை: மியூச்சுவல் ஃபண்ட்களில் (பரஸ்பர நிதி) கே.ஒய்.சி எனப்படும் வாடிக்கையாளர் அடையாள விவர விண்ணப்பங்கள் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தற்போது உங்கள் தனிப்பட்ட விவரங்களை தனித்தனியாக தரவேண்டும். இது குறித்து செபி வெளியிட்டுள்ள புதிய நெறிமுறைகள் படி, நீங்கள் முதலீடு செய்யும் நிதி நிறுவனத்திடம் உங்கள் வருமானம் குறித்த விவரங்களை கண்டிப்பாக தரவேண்டும்.
செபியின் இந்த புதிய விதிகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இதற்கு முன்னர் உங்கள் பெயர், முகவரி, ஆண்டு வருமானம், நிகர சொத்து மதிப்பு மற்றும் நீங்கள் அரசியலில் தொடர்புடையவரா என்பதைக் குறித்த விவரங்களை கே.ஒய்.சி படிவத்தில் நிரப்பினால் போதுமானதாக இருந்தது. அதனால் இந்த படிவத்தை வாடிக்கையாளர் பதிவு மையம் இதனை தன் வசமே வைத்துக்கொண்டது.

எனவே கே.ஒய்.சி படிவத்தில் வருமான நிலை மற்றும் வாடிக்கையாளர் அரசியல் தொடர்பு குறித்த விவரங்களுக்கு அவசியமில்லை என உணர்ந்து அதை மாற்ற எண்ணியது செபி. இதற்கு மாறாக, வருமான விவரங்கள் நிதி நிறுவனங்களுக்கு அந்த வாடிக்கையாளர் வருமானமும் அவருடைய முதலீடுகளும் சமநிலையில் உள்ளனவா என்பதை அறிந்துகொள்ள அவசியமாக இருக்கின்றது .
இந்த நிதி நிறுவனங்கள் மத்திய நிதிப் புலனாய்வு அமைப்பிற்கு சந்தேகத்திற்குரிய பரிவர்தனைகளின் விவரங்களை சமர்பிக்க வேண்டியிருப்பதால், வாடிக்கையாளர்களிடமிருந்து வருமான விவரங்களை பெறவேண்டியுள்ளது. இந்த நிதிப் புலனாய்வு அமைப்பு இது போன்ற தகவல்களை சேகரித்து பிற துறைகளுக்கு மோசடிப் பரிவர்தனைகளைக் கண்டறியும் நோக்கத்திற்காக வழங்குகிறது.
எனவே இனி கே.ஒய்.சி படிவங்கள் இரு பிரிவாக வழங்கப்பட வேண்டும். முதல் பிரிவில் முக்கிய விவரங்களும், இரண்டாவது பிரிவில் பிற விவரங்களும் தரப்படவேண்டும்.

வருமான நிலைகள் இரண்டாவது பிரிவின் கீழ் வரும். எனவே அதை இரண்டாவது படிவத்தில் நீங்கள் தரவேண்டும். மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய மற்றும் சரியான திட்டங்களைத் தேர்வு செய்யத் தேவையான விவரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.
முடிவாக, நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய விரும்பினால், முதலில் இரண்டு கே.ஒய்.சி படிவங்களை நிரப்ப வேண்டும். முதல் பகுதியில் அடிப்படை விவரங்களையும், இரண்டாம் பகுதியில் உங்கள் வருமான விவரங்களையும் இந்த அமைப்புகளுக்கு நீங்கள் தரவேண்டும்.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications