சென்னை: பல காரணங்களுக்காக வங்கிகளில் கடன் பெற தனிநபர் கடன் திட்டங்கள் தான் கவர்ச்சியாக தெரிகிறது. மிகவும் எளிதாக கேட்கவும், நிதி தேவைகளுக்கேற்ற வசதியான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளவும் தனிநபர் கடன் உள்ளது.
இத்தகைய கடன்களுக்கு செக்யூரிட்டி தேவையில் என்பதால், யாருடைய தலையீட்டையும் வேண்டி மன்றாடத் தேவையில்லை. தனிநபர் கடன்களை திரும்பச் செலுத்தும் முறையும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
சில பேருக்கு மிகவும் எளிதாக பணம் பெற உதவும் வழியாக தனிநபர் கடன் தோன்றினாலும், வேறு சிலர் வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களின் மேல் சந்தேகக் கண்களை வீசத் தவறுவதில்லை.
இந்த வேளையில் தனி நபர் கடன் மிகவும் சிறந்து என நிருபிக்க சில ஆதாரங்களை இங்கு தருகிறோம். படித்து தான் பாருங்களேன்...
தனிநபர் கடன்களை பெறுவதற்கு நாம் ஆர்வம் காட்டுவதற்கு முக்கிய காரணம்,இவை முழுவதுமே செக்யூரிட்டி இல்லாத கடன்களாகும். வங்கிகள் உங்களுடைய கடன் செலுத்தும் திறனை பரிசோதிககும். உங்களுடைய மாத வருமானம் அல்லது சம்பளம், வேலை மற்றும் வியாபாரத்தின் தொடர்ச்சி நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கடன் வாங்குபவரால் கடனை வட்டியுடன், குறித்த நேரத்தில் திரும்பத் தர முடியும் என்று நிர்ணயம் செய்கிறார்கள். தனிநபர் கடன்களுக்கென எந்தவிதமான செக்யூரிட்யும், கேரண்டியும் கேட்கப்படாததால், ஒரு கடனாளியாக நாம் மாறுவதற்கான தயக்கமும், தடைகளும் பறந்து விடுகின்றன. தனிநபர் கடன்களை அனைத்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களம் சரியான அளவிலும் மற்றும் போட்டி போடக்கூடிய வட்டி விகிதங்களுடனும் வழங்கி வருகின்றன. 24 மணி நேரத்திற்குள் தனிநபர் கடன்களை பணமாகவோ அல்லது காசோலையாகவோ வழங்கி விடுகின்றனர். சில வங்கிகளில் இநத சேவையை இணையம் வழியாகவும் வழங்குகின்றனர். இதற்காக நீங்கள் வங்கிகளுக்கு செல்லத் தேவையில்லை. ஆனால் பொதுத்துறை வங்கிகளில் தனிநபர் கடன் வாங்குவது சுலபமாக இருக்காது. நீங்கள் எதற்காக தனிநபர் கடன்களை வாங்குகிறீர்கள் என்று வங்கிகள் உங்களை கேட்கப் போவதில்லை. நீங்கள் அவர்களுடைய வழிகாட்டுதல்களை சரியாகப் பின்பற்றினால், தனிநபர் கடன் உடனே ரெடி. தனிநபர் கடனாக பெறும் பணத்தை என்ன செய்யப் போகிறீர்கள் என்பது உங்களுடைய விருப்பம் அல்லது தேவையைப் பொறுத்ததாகும். 1 இலட்சம் முதல் 15 இலட்சம் வரையிலும் வழங்கப்பட்டு வரும் தனிநபர் கடன்களை நிதி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இந்த கடன்களை இ.எம்.ஐ முறையில், உங்களுக்கு ஏற்ற குறிப்பிட்ட கால வரம்புக்குள் திரும்பச் செலுத்தலாம். கடனாக பெறப்பட்ட தொகையை மொத்த கால வரம்பிற்கும் ஏற்றவாறு வட்டியுடன் கணக்கிட்டு, அதற்கேற்ற இ.எம்.ஐ அளவு கணக்கிடப்படுகிறது. இடைத்தரகர்கள் இடையில் புகுந்து கடன் வழங்கும் செயல்பாட்டை நிறுத்தி விடும் விஷயங்கள் தனிநபர் கடன்களில் அறவே கிடையாது என்பது தான் குறிப்பிடத்தக்க விஷயம். தனிநபர்கள் நேரடியாக வங்கிகளை அணுகி, தங்களுக்கான தனிநபர் கடன்களை தேவையற்ற கால தாமதங்கள் இல்லாமல் பெறலாம். குறிப்பிட்ட சில விதிகள் அல்லது உறுதிமொழிகளின் அடிப்படையில் தகவல்களை பெறுவதை தான் இரகசிய காப்பீடு குறிப்பிடுகிறது. வங்கிகளும், நிதி நிறுவனங்களும் போதுமான அளவிற்கு இரகசிய காப்பீடு முறைகளை பின்பற்றுகின்றன. செக்யூரிட்டி அல்லது கேரண்டி ஆகியவைகளும் தனிநபர் கடன்களுக்கு தேவையில்லை என்பதால் இதை நீங்கள் முழுமையாக நம்பலாம்.
செக்யூரிட்டி அல்லது கேரண்டி தேவையில்லை
எளிதில் பெற முடியும்
காரணங்கள் தேவையில்லை
எளிதில் திரும்ப செலுத்த முடியும்
முகவர் அல்லது இடைத்தரகர் தேவையில்லை
இரகசிய காப்பீடு
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications