சென்னை: அவரச காலங்களில் நம்முடைய திடீர் பண தேவைக்கு நம் நினைவிற்கு முதலில் வருபவை வங்கி சேமிப்பு கணக்கில் இருக்கும் பணம் அல்லது பங்குகளை இருப்பை குறைத்து பணத்தை பெறுதல் (பங்கு சந்தையில் முதலீடு செய்வோருக்கு மட்டும்) போன்ற வழிகள் தான்.
பொதுவாக அனைவருக்கும் சேமிக்கும் பழக்கும் இருக்கும், இத்தகையை இக்கட்டான சூழ்நிலையில் நம்முடைய சேமிப்பில் பணம் இல்லாமல் இருந்தால் என்ன செய்வது?? இப்படியான அவசர நிலையில் சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமல் பணத்தை நிமிடங்களில் பெற சில வழிகள் உண்டு இதை பற்றி தான் இங்கு பார்க்கப்போகிறோம்.
தங்க கடன்
எத்தகைய நிலையிலும் இந்தியார்களின் வீட்டில் தங்கம் நகைகள் அல்லது நாணயங்கள் இல்லாமல் இருக்காது. தங்கத்தை வைத்து வங்கிகளிலோ அல்லது நிதி நிறுவனங்களிலோ நொடிகளில் பணத்தை பெறலாம். வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் தங்கத்தின் தூய்மையை பரிசோதித்து, அன்றைய தேதியின் படி தங்க விலைகளை கணக்கிட்டு நிறுவனம் உங்களுக்கு பணத்தை வழங்கும். இந்த பணிகளுக்கு வெறும் 15 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் வரை மட்டுமே ஆகும்.
கிரேடிட் கார்டு
இன்றைய நாட்களில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெரும்பாலானோர் கிரேடிட் கார்டு வைத்துள்ளனர். உங்களின் பணத் தேவை 50,000 ரூபாய்க்கு குறைவாக இருந்தால் இதுவே சரியான தேர்வு. சில நொடிகளில் உங்கள் கையில் பணம் இருக்கும். ஆனால் இதில் ஒரு சிக்கல் உண்டு, கடனாக பெற்ற தொகையை உரிய நாட்களுக்குள் வங்கிக்கு செலுத்தவில்லை என்றால் வங்கிகள் அத்தொகைக்கு 24 முதல் 40 சதவீதம் வரை வட்டி விதிக்கும்.
தனி நபர் கடன்
வங்கிகளில் கணக்கு வைத்திருந்தால் உங்களுக்கு எளிதாக பணம் கிடைத்து விடும். கிரேடிட் கார்டு கடனின் வட்டி வகிதத்தை விடவும் இதில் குறைவான வட்டியே விதிக்கப்படுகிறது. வங்கிகளில் கிடைக்கும் தனி நபர் கடன்களுக்கு 12 முதல் 24 சதவீதம் வரை வட்டி விதிக்கப்படுகிறது. மேலும் இக்கடன் பெற சில உள்ளீடு கட்டணங்களும் செலுத்த வேண்டும்.
பத்திரங்களுக்கு எதிராக கடன்கள்
நீங்கள் தபால் நிலைங்களில் அளிக்கப்படும் கிஸ்ஸான் விகாஸ் பத்திரம் மற்றும் தேசிய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்திருந்தீர்கள் என்றால் கடன் பெற இது சரியான வாய்ப்பாக அமையும். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இந்த பத்திரங்களை அடமானம் வைத்து பணத்தை பெறலாம். கிரேட்டி கார்டு மற்றும் தனிநபர் கடன்களை விடவும் இதற்கு குறைவான வட்டி விதிக்கப்படுகிறது.
முடிவுரை
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து வழிகளுமே அவசர காலத்தில் பணம் கிடைக்காத பொழுதில் பயன்படுத்த வேண்டியவை. மேலும் இவை அனைத்திற்கும் வட்டி விகிதங்கள் மிகவும் அதிகம் என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும்.
More From GoodReturns

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!



Click it and Unblock the Notifications