சென்னை: இந்தியாவில் பங்குகள் விற்பனை அதாவது ஷேர் டிரேடிங் செய்யப் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. டிமேட் அக்கவுண்ட் அல்லது பங்கு விற்பனை கணக்குகள் இல்லாத ஆளே இல்லை என்று சொல்லுமளவிற்குச் சாமானியன் கூட இன்று பங்கு விற்பனையில் ஈடுபடுகின்றார்கள்.
இது எல்லாம் உங்கள் பொறுமை, முந்தைய அனுபவம் மற்றும் பங்குகள் மீதான உங்களது சவுகரியத்தைப் பொறுத்து அமைகிறது. எடுத்துக்காட்டாக டே டிரேடர்ஸ் எனப்படும் தினசரி வியாபாரிகள் ஒரு சில நிமிடங்களில் வாங்கி விற்று விடுவார்கள். இன்னும் சிலர் வாங்கியவற்றைப் பல வருடங்களுக்கு வைத்துக் கொண்டிருப்பார்கள்.
இந்தியாவில் பங்கு விற்பனை செய்யப் பல முறைகள் உண்டு, இதனைப் பற்றியே முழுமையாக இப்போது பார்ப்போம். விற்பனை என நாங்கள் குறிப்பிடுவது முதலீட்டையும் உள்ளடக்கியதுதான்.

டே டிரேடிங் அல்லது தினசரி வர்த்தகம்
இது ஒரு பிரபலமான வர்த்தக முறை. இதன் மூலம் நீங்கள் பங்குகளை ஒரே நாளில் வாங்கவும் விற்கவும் செய்வீர்கள். முதலில் விற்றுவிட்டு பிறகு வாங்காவும்கூடச் செய்யலாம். வர்த்தகர்கள் பெருமளவிலான பங்குகளை வாங்கி விற்பதன் மூலம் சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்களால் இலாபம் அடைகிறார்கள். எடுத்துக்காட்டாக ஒரு தினசரி வர்த்தகர் ஸ்டேட் பாங்க ஆப் இந்தியாவின் 1000 பங்குகளை ரூபாய் 177 இற்கு வாங்கி அதை 178 ரூபாய்க்கு விற்பதன் மூலம் 1000 ரூபாய் இலாபம் அடையமுடியும்.
இதைத் தற்போதைய பணச் சந்தையிலோ அல்லது பியூச்சர்ஸ் எனப்படும் எதிர்வரும் சந்தைகளிலோ செய்ய இயலும். இந்தப் பியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் (எதிர்வரும் வாய்ப்புகள்) வர்த்தகத்தில் பெருமளவு எண்ணிக்கைகள் கையாளப்படுவதுடன் அதிக அளவு வேறுபாட்டு மதிப்பை (மார்ஜின்ஸ்) முழுவதுமாகச் செலுத்த வேண்டியிருக்காது.
தற்போது தினசரி வர்த்தகர்கள் நிறைய நுட்பங்களை வரை படங்களையும் விலை மாறுபட்டு விவரங்களையும் அலசி ஆராய்ந்த பின்னரே முதலீடு செய்கிறார்கள். அவர்கள் அடிப்படை விவரங்களை ஒதுக்கிவிட்டு விலைகளை மட்டுமே ஆராய நினைப்பதுண்டு. பரிமாற்றங்களில் வரும் மதிப்பீட்டு வேறுபாடுகளால் கிடைக்கும் ஆதாயங்களையும் அவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

முதலீட்டாளர்கள்
முதலீட்டாளர்கள் உண்மையில் வர்த்தகர்கள் அல்ல. அவர்கள் பங்குகளை வாங்கி நீண்ட காலத்திற்கு வைத்துக் கொண்டு அதன் மூலம் அந்தப் பங்குகளின் மதிப்பு உயர்வால் இலாபம் அடைகின்றனர். எடுத்துக்காட்டாக
ப்ளு சிப் எனப்படும் ஐடிசி, ஹிந்துஸ்தான் யுனிலிவர் மற்றும் ரிளையன்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகளைக் கடந்த பல வருடங்களாக வைத்திருக்கும் பல முதலீட்டாளர்கள் உள்ளனர்.
முதன்மைப் பங்கு வெளியீட்டில் அல்லது இருண்ட சந்தையில் வர்த்தகம்
ஐபிஓ எனப்படும் முதன்மைப் பங்கு வெளியீடுகள் அதிக அளவில் வெளி வந்த காலங்கள் மலையேறிவிட்டன. தற்போது முதன்மைப் பங்கு வெளியீடுகளின் அளவு மிகவும் குறைந்துவிட்டது. இது வர்த்தகர்களுக்குச் சந்தை வாய்ப்பைக் குறைத்துள்ளது.

இந்தியாவில் பங்கு வர்த்தகம் செய்ய நீங்கள் முதலில் செய்யவேண்டியது என்ன?
பங்கு வர்த்தகம் செய்ய நீங்கள் ஒரு பங்கு வர்த்தகக் கணக்கை அதாவது டிமேட் அக்கவுன்டைத் துவக்க வேண்டியது அவசியம். இதில் ரூபாய் 10 அல்லது 20 எனப் பல தள்ளுபடி தரகுத் தொகைகளும் வர்த்தகர்களுக்குக் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. நீங்கள் முதலீடு செய்யா நினைத்தால் உங்களுக்கு அறிவுரைகளையும் ஆய்வறிக்கைகளையும் வழங்கக் கூடிய பிரபலமான தரகு நிறுவனங்களை அணுகுவது நல்லது.
எய்துவாக இருந்தாலும் புதியவர்கள் வர்த்தகத்தைச் செய்ய அறிவுறுத்தப்படுவதில்லை. மாறாகப் பங்குகளில் நீண்ட நாட்களுக்கு முதலீடு செய்யலாம். வர்த்தகம் நல்ல சந்தை விவரம் அறிந்தவர்களுக்கும் கூட மிகவும் அபாயகரமானதும் ஆபத்துக்கள் நிறைந்ததும் ஆகும். எனவே புதிதாக முதலீடு செய்ய விரும்புபவர்கள் வர்த்தகத்தைத் தவிர்த்து நீண்டகாலத் திட்டங்களை மனதில் வைத்து முதலீடு செய்வது நல்லது.


Click it and Unblock the Notifications