தனிப்பட்ட நெருக்கடிகள் உங்களின் அலுவலகப் பணியை பாதிக்கிறதா..?

By Batri Krishnan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களின் தனிப்பட்ட சில பிரச்சனைகள் உங்களின் அலுவலக வேலைகளைப் பாதிக்கலாம். ஒரு சில நிறுவனங்களில், கஷ்டப்படும் ஊழியர்களுக்கு உதவ ஆலோசனை மற்றும் இதர வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

 

எது எப்படி இருந்தாலும் உங்களுக்கு உதவ மேலும் சில ஆலோசனைகள் தேவைப்படுகின்றன.

திறந்து மனப்பான்மையுடன் செயல்படுங்கள்

திறந்து மனப்பான்மையுடன் செயல்படுங்கள்

நாம் அனைவருக்கும் வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் வந்து போகும். அது சில நேரங்களில் அலுவல் பணிகளை பாதிக்க நேரிடலாம்.

அத்தகைய தருணங்களில், நீங்கள் உங்களின் முதலாளியிடம் சென்று உங்களின் சொந்த பிரச்சனைகளைப் பற்றி அவருடன் விவாதிக்கலாம். "எனினும், நீங்கள் அவ்வாறு செய்யும் முன், நீங்கள் எவ்வுளவு தகவல்களை உங்களுடைய முதலாளியிடம் வெளிப்படுத்தப் போகின்றீர்கள் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

நீங்கள் உங்களுடைய அனைத்து பிரச்சனைகளைப் பற்றி உங்கள் முதலாளியிடம் தெரிவித்தால் அது அவரைக் கண்டிப்பாக சங்கடப்படுத்தும்", என ஸ்வப்னில் காமத், நல்ல வேலைப் பயிற்சி தலைமை நிர்வாக அதிகாரி தெரிவிக்கின்றார்.

உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள்

உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள்

உங்களின் தனிப்பட்ட நெருக்கடிகள் உங்களை ஒரு மோசமான உணர்ச்சிவயப்பட்ட நிலையில் தள்ளி விட்டு விடலாம், ஆகவே நீங்கள் உங்களின் மன அழுத்தத்தைக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும்.

"உங்களின் பணியிடத்தில் நீங்கள் உங்கள் உணர்ச்சிகளைக் கட்டவிழ்த்து விடக்கூடாது. நீங்கள் கண்ணீர் சிந்தக்கூடிய அல்லது மிகவும் போராட்டமான மனநிலையில் இருக்கலாம். அது நடக்கும் போது, ஒரு நடைப் பயிற்சி செய்யுங்கள். உங்களின் மூச்சை ஆழமாக உள்ளிழுத்து விடுங்கள். உங்களின் மனதை தெளிவாக வைத்திருங்கள்", என காமத் தெரிவிக்கின்றார்.

பிரதிநிதித்துவ வேலை
 

பிரதிநிதித்துவ வேலை

நீங்கள் ஏதேனும் அவசர வேலை செய்ய வேண்டி இருந்தால், அதன் பொறுப்பை மற்றவர்களுக்குப் பகிர்ந்தளியுங்கள். இது உங்களின் தனிப்பட்ட பிரச்சனைகளில், நீங்கள் கவனம் செலுத்த உங்களுக்கு உதவும். அதன் காரணமாக நீங்கள் உங்களின் அலுவலகப் பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படாமல் உங்களின் சொந்த பிரச்சனைகளைச் சமாளிக்கலாம்.

"உங்களின் கவனம் சிதறும் பொழுது, உங்களின் பணியிட பொறுப்புகளைத் தற்காலிகமாக உங்கள் அணியில் வேறு யாரோக்காவது ஒதுக்கிக் கொடுங்கள்", என அனுராதா பாரத், தலைவர் மக்கள் நலத்துறை தெரிவிக்கின்றார்.

நியாயமாக நடந்து கொள்ளுங்கள்

நியாயமாக நடந்து கொள்ளுங்கள்

இது போன்ற சூழ்நிலைகளில் உங்களுக்குப் பிரச்சனைகளின் அழுத்தம் அதிகமாக இருக்கும். அப்போது நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு உங்களின் சக ஊழியர்களிடம் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள நேரிடலாம். "ஆமாம், நீங்கள், ஒரு பயங்கரமான உணர்ச்சி வயப்பட்ட நிலையில் இருக்கின்றீர்கள். ஆயினும் தொழில்முறை வல்லுனர் போன்று உங்களின் அனைத்து விபரங்களையும் உங்களின் சக ஊழியர்களிடம் மறைக்க கற்றுக் கொள்ளுங்கள்", என ரேசர்பே நிறுவனத்தின் பாரத் தெரிவிக்கின்றார்.

எப்பொழுதும் நேர்மறையான சிந்தனையில்

எப்பொழுதும் நேர்மறையான சிந்தனையில்

புதிய பணிகளில் உங்களின் மனதைத் திசை திருப்புங்கள். " உங்களின் மனிதவள மேலாளருடன் கலந்து ஆலோசித்து தற்காலிகமாக உங்களின் பிரச்சனைகளை சரிசெய்யும் வேலையைப் பாருங்கள். அது உங்களுக்கு உதவக்கூடிய வீட்டிலிருந்தே வேலையைத் தொடருவதாகட்டும், தனிப்பட்ட அல்லது மருத்துவ விடுப்புபோன்ற ஏதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் ", என திரு பாரத் தெரிவிக்கின்றார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to overcome personal crisis without affecting your job?

How to overcome personal crisis without affecting your job?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X