சென்னை: நீங்கள் திடவடிவத் தங்கத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால் அப்படி செய்ய வேண்டாம். சவரன் தங்கப் பத்திரங்களை வாங்குவது சிறந்த தேர்வாகும்.
ஏனென்றால், அது திருட்டு, மோசடி போன்ற பல அபாயங்களை தடுக்கிறது. நீங்கள் நாட்டில் பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகளில் ஒன்றில் இந்த தங்கப் பத்திரங்களை வாங்கலாம். இந்தப் பத்திரங்கள் உங்களுக்கு 2.75 சதவிகித வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இந்த மீட்டெடுக்கக் கூடிய விலைகள் ஆர்பிஐ ஆல் அவ்வப்போது நிர்ணயிக்கப்படுகிறது.
வரி விதிப்பு
நீங்கள் இந்தப் பத்திரங்களை பங்குகளை வைத்திருக்கும் கூட்டுக் குழுமங்களிலும் (Stock Holding Corporation), தபால் அலுவலகங்களிலும் வாங்கலாம்.
முதலீட்டாளர்கள் இந்தப் பத்திரங்களில் ஈட்டப்படும் வட்டி வரிவிதிப்புக்குரியது என்பதால் இந்தப் பத்திரங்களை வாங்க வேண்டாம் என்று பரிந்துரைக்கிறார்கள்.
இரண்டு நன்மைகள்
இருந்தாலும், நீங்கள் இந்தப் பத்திரங்களில் இரண்டு வகையான நன்மைகளைப் பெறலாம். ஒன்று மூலதன வருவாய் மற்றொன்று வழக்கமான வட்டி.
எனவே இரண்டு வழிகளிலும் ஒரு முதலீட்டாளர் சூழ்நிலையை அறிந்து நன்மை அடையலாம்.
முக்கிய கேள்வி
இந்தப் பத்திரங்களைப் பற்றி அடிக்கடி எழும் ஒரு கேள்வி என்னவென்றால், இந்தப் பத்திரங்களைப் பணமாக்குவது மிகவும் மோசமாக உள்ளது.
மேலும், இந்தப் பத்திரங்களைப் மிகப் பெரிய அளவுகளில் விற்க முடியாது என்பதாகும்.
என்எஸ்ஈ பட்டியல்
இந்தப் பத்திரங்கள் என்எஸ்ஈ பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தங்கப் பத்திரங்களின் தற்போதைய விலை 10 கிராம்கள் ரூ 28,000 ஆகும். இந்தப் பத்திரங்கள் தங்க விலைகளைக் கண்காணிக்கும் விதத்தில் தங்க ஈடிஎஃப் களை பெருமளவில் ஒத்திருக்கிறது.
லாபகரமானது
இதில் அடிக்கடி எழும் மற்றொரு கேள்வி என்னவென்றால், இந்தப் பத்திரங்களை வாங்குவது முழுமையாக மதிப்புடையதா? ஆமாம், இந்தப் பத்திரங்களின் வட்டி விகிதம் லாபகரமானது. நாட்டிலுள்ள சில புகழ்பெற்ற நகைக் கடைகளைத் தவிர வேறு எந்த தங்க திட்டங்களிலும் இவ்வளவு வட்டி தரப்படுவதில்லை.
முதலீடு
பணத்தை பணமாக வைத்திருப்பதை விட இந்த தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்து ஏதாவது சிறிதளவு லாபத்தையேனும் பெறுவது நல்லது. இதன் வட்டி விகிதங்களின் காரணமாக இந்த திட்டத்தை நாம் விரும்புகிறோம் அதே சமயம் இந்தத் திட்டத்தின் பூட்டப்படும் கால வரையறையால் இந்தத் திட்டத்தை மக்கள் விரும்புவதில்லை.
மேலும் இது வரி விலக்கு இல்லாத திட்டம் என்பதாலும் மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பு பெறவில்லை.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?



Click it and Unblock the Notifications