ஜிஎஸ்டி E-Way பில் என்றால் என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையேற்ற ஜிஎஸ்டி கவுன்சிலில், ஜிஎஸ்டி தொடர்பான ஈ-வே அல்லது மின்னணு வழி கட்டண முறையின் இறுதி விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தக் கட்டணம் முறை முழுமையாக செயல்படுத்தப்படுவதற்கு மையப்படுத்தப்பட்ட இயங்கு தளத்தில் (centralized platform) அக்டோபர் மாதத்திற்கு பிறகு நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

50,000 ரூபாய்

50,000 ரூபாய்

இந்த மின்னணு வழி கட்டண விதி ரூ. 50,000 க்கும் மேல் மதிப்புள்ள சரக்குகளை அனுப்பும் வேலையில் ஈடுபடும் பதிவுச் செய்யப்பட்ட தனிநபர்களுக்குப் பொருந்தும்.

ஜிஎஸ்டி ஐஎன்எஸ் 01 படிவத்தில் இது தொடர்பான அனைத்து விவரங்களும் சரக்குகள் அனுப்பப்படுவதற்கு முன் வழங்கப்பட வேண்டும்.

 

ஜிஎஸ்டிஎன் இணையதளம்

ஜிஎஸ்டிஎன் இணையதளம்

இந்த மின்னணு வழி ரசீதை ஜிஎஸ்டிஎன் இணையதளத்தில் உருவாக்கிக் கொள்ளலாம். ரூ.50,000 க்கும் மேற்பட்ட மதிப்புள்ள சரக்குகளை இயக்குவதற்கு இது கட்டாயமாகும்.

ரசீது
 

ரசீது

இந்த ரசீது இல்லாமல் சரக்கை வெளியேற்ற முடியாது. மேலும், இந்த மின்னணு ரசீதை உருவாக்கவோ அல்லது நீக்கவோ எஸ்எம்எஸ் எனப்படும் குறுஞ்செய்தி வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தக் குறிப்பிட்ட மற்றும் தனிப்பட்ட ஈபிஎன் அல்லது மின்னணு வழி ரசீது எண் உருவாக்கப்பட்ட பிறகு அந்த எண் விநியோகஸ்தர், பெறுநர் மற்றும் போக்குவரத்தாளர் ஆகியோருக்குக் கிடைக்கப் பெறும்.

 

5 விதிகள்

5 விதிகள்

சரக்கு அனுப்புதலைப் பொறுத்தவரை இதில் மேற்கொண்டு 5 விதிகள் பொருந்தும்:

1. இது தொடர்பான அனைத்து விவரங்களும் முன்கூட்டி வழங்கப்பட வேண்டும். அதாவது, சரக்குகளை அனுப்புவதற்கு முன் அல்லது சரக்குகளுடன் மின்னணு வழி ரசீது அனுப்பப்பட வேண்டும்.
2. சரக்ககளை எடுத்துச் செல்லும் பொறுப்புடைய நபர் தன்னுடன் தேவையான ஆவணங்களையும் கருவிகளையும் கொண்டு செல்ல வேண்டியது அவசியமாகும்.
3. ஆவணங்கள் மற்றும் போக்குவரத்திலுள்ள சரக்குகளைச் சரிபார்த்தல்.
4. சரக்குகளைச் சோதனையிடல்.
5. ஒரு வேளை வாகனங்கள் தடுக்கப்பட்டால் தகவல்களை அளிக்கும் வசதி.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What Is EWay Bill Under GST?

What Is EWay Bill Under GST?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X