சவரன் தங்கப் பத்திரம் என்பது இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் ஒரு திட்டமாகும். இந்த திட்டம் திடவடிவ தங்கத்தில் கிடைக்கும் அனைத்து நன்மைகளையும் வழங்குகின்றன.
இந்திய ரிசர்வ் வங்கி இந்த திட்டத்தை வெளியிட்டாலும், உண்மையில், ஆர்பிஐ இந்த பத்திரங்களை இந்திய அரசாங்கத்தின் சார்பாக வெளியிடுகிறது. இந்த தங்கப் பத்திரத்தின் மதிப்பு மும்பையில் தங்கத்தின் விலைகள் மாறுவதைப் பொறுத்து அதிகரிக்கவும் மற்றும் குறையவும் செய்யும்.
யார் முதலீடு செய்யலாம்..?
இந்த தங்கப் பத்திரங்கள் முதலீட்டாளர்கள் மற்றும் தனிநபர்களுக்கானது. முதலீட்டிற்காக தங்கக் கட்டிகளை வாங்குபவர்கள், அதற்கு பதிலாக இந்த தங்கப் பத்திரங்களை வாங்கலாம்.
கட்டணங்கள்
ஒரு முதலீட்டாளர் விரும்பினாலும் அல்லது விரும்பாவிட்டாலும் கட்டித் தங்கத்தை வாங்கும்பொழுது சில கட்டணங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கும்.
ஆனால் அவர் சவரன் தங்கப் பத்திரங்களைத் தேர்ந்தெடுத்தால் இந்தக் கட்டணங்களைச் செலுத்தத் தேவையில்லை.
வட்டி வருமானம்
இந்தத் தங்கப் பத்திரங்கள் சந்தையில் கட்டித் தங்கத்திற்குள்ள கிராக்கியை குறைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் கட்டித் தங்கத்தை வாங்குவதற்குப் பதிலாக இந்தத் தங்கப் பத்திரங்களைத் தேர்ந்தெடுத்தால், இத்துடன் அவர்கள் சிறிது வட்டியையும் ஈட்ட முடியும்.
இந்த வட்டி விகிதம் ரிசர்வ் வங்கியால் நிர்ணயிக்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது.
வாங்குவதும் விற்பதும் எளிது..
நீங்கள் சவரன் தங்கப் பத்திரங்களை பங்குச் சந்தையில் வாங்கவும் அல்லது விற்கவும் முடியும். நீங்கள் மும்பையிலுள்ள தங்க விலை நிலவரங்களைக் கண்காணித்தால் தங்கப் பத்திரங்களை விரைவாக வாங்கவோ அல்லது விற்கவோ முடியும்.
More From GoodReturns

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை என்ன? இன்று நகை வாங்க சரியான நேரமா?

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?



Click it and Unblock the Notifications