சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி நாட்டின் மறைமுக வரியை விதியமைப்பை முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. வர்த்தக, உற்பத்தி, சேவை நிறுவனங்கள் அனைத்தும் தற்போது ஜிஎஸ்டி க்கு மாறி தங்களது வர்த்தகத்தை நடத்தி வருகின்றனர்.
பல விதமாக விதிக்கப்பட்டு வந்த மறைமுக வரியை ஒற்றை வரி விதிப்பாக மாற்றியதே இந்த ஜிஎஸ்டி. இதன் மாற்றத்தில் சந்தையில் இருந்து காணாமல் போன வரிகளை என்னென்ன என்பதேயே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
சுங்க வரி
மறைமுக வரி அனைத்தும் நீக்கப்பட்டு ஒரே வரியாக ஜிஎஸ்டி வந்த பின்னர், சுங்க வரி மட்டும் பலதரப்பட்ட வரி விதிப்புகளாக விதிக்கப்படுகிறது.
தற்போது நடைமுறையில் இருக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்புகள் கண்காணிக்க மத்திய அரசு பல வகையில் உதவியாக உள்ளது.
மத்திய அரசு
மறைமுக வரி விதிப்பின் கீழ் மத்திய அரசு விதித்து வந்த வரி விதிப்புகள்
1. மத்திய கலால் வரி
2. கலால் வரி (மருந்து மற்றும் சுகாதாரப் பணிகள்)
3. கூடுதல் கலால் வரி (சிறப்பு முக்கியத்துவம் பெற்ற பொருட்கள்)
4. கூடுதல் கலால் வரி (டெக்ஸ்டைல் மற்றும் டெக்ஸ்டைல் பொருட்கள்)
5. கூடுதல் சுங்க வரி (சிவிடி)
6. சிறப்புக் கூடுதல் சுங்க வரி (எஸ்ஏடி)
7. சேவை வரி
8. மத்திய கூடுதல் கட்டணம் மற்றும் செஸ் (சரக்கு மற்றும் சேவை)
மாநில அரசு
மறைமுக வரி விதிப்பின் கீழ் மாநில அரசு விதித்து வந்த வரி விதிப்புகள்
1. மாநில மதிப்பு கூட்டு வரி
2. மத்திய விற்பனை வரி
3. ஆடம்பர வரி
4. நுழைவு வரி
5. பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை வரி
6. விளம்பரம் மீதான வரி
7. விற்பனை வரி
8. லாட்டரிகள், பந்தயம் மற்றும் சூதாட்டம் மீதான வரி
9. மாநில கூடுதல் கட்டணம் மற்றும் செஸ் (சரக்கு மற்றும் சேவை)
ஜூலை 1
மேலே கூறப்பட்ட அனைத்து வரிகளையும் நீக்கிவிட்டு ஜூலை 1ஆம் தேதி மத்திய அரசால் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் பின் கலால் வரி, ஆக்டிராய், விற்பனை வரி, CENVAT, சேவை வரி, விற்றுமுதல் வரி என அனைத்து விதமான வரிகளும் நீக்கப்பட்டது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications