சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி கீழ் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றோரு மாநிலத்திற்குப் பொருட்களை எடுத்துச் செல்லும் போது மின்னணு முறையில் இ-வே பில் பெறுவது 2018 ஏரல் 1 முதல் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஒரு மாநிலத்தில் இருந்து மற்றோரு மாநிலத்திற்கு 50,000 ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய பொருட்களை எடுத்துச் செல்லும் போது ஜிஎஸ்டி சட்டப் பிரிவு 68-ன் கீழ் இ-வே பில் பெற வேண்டும்.
இ-வே பில்லை பெற வேண்டும் என்றால் ஜிஎஸ்டி எண் பயன்படுத்தி அனைத்து வணிகர்களும் ewaybillgst.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் எப்படி இ-வே பில் சேவைக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிப்பது என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.
ஜிஎஸ்டி பதிவு செய்த டிரான்ஸ்போர்ட் நிறுவனங்கள் இ-வே பில்லுக்கு எப்படி விண்ணப்பிப்பது?
ஜிஎஸ்டி கீழ் பதிவு செய்து வணிகம் செய்து வரும அனைவரும் ஜிஎஸ்டி எண்ணைப் பயன்படுத்தி இ-வே பில் இணையதளமான ewaybillgst.gov.in-ல் பதிவு செய்ய வேண்டும். பின்னர் அங்கு ‘இ-வே பில்லிக்குப் பதிவு செய்க' என்ற தெரிவை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.
ஜிஎஸ்டி எண்
இ-வே பில்லுக்குப் பதிவு செய்யும் தெரிவை கிளிக் செய்த பிறகு ஜிஎஸ்டி எண் மற்றும் கேப்ட்ச்சா குறியீட்டை உள்ளிட்ட பிறகு விண்ணப்பம் தோன்றும். அதில் உங்கள் வணிகச் சார்ந்த தகவல்களை அனைத்தையும் உள்ளிட்ட வேண்டும்.
ஒரு முறை கடவுச் சொல்
விண்ணப்பத்தினைப் புர்த்திச் செய்த பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு முறை கடவுச்சொல் அனுப்பப்படும். அதனை உள்ளிட்ட பிறகு இ-வே பில் சேவைக்கான பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் அளிக்கப்படும்.
இ-வே பில்
இ-வே பில் இணையதளத்திற்கான பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி உள்நுழைந்து உங்களுக்கான பில் விவரங்களை அளித்து இ-வே பில் பெற முடியும்.
ஜிஎஸ்டி பதிவு செய்யாத டிரான்ஸ்போர்ட் நிறுவனங்கள் என்ன செய்வது?
ஜிஎஸ்டி பதிவு செய்யாத டிரான்ஸ்போர்ட் நிறுவனங்கள் ewaybillgst.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று 'Enrolment for Transporters' என்ற தெரிவை கிளிக் செய்து படிவத்தினைப் பூர்த்திச் செய்து சமர்ப்பித்து இ-வே பில் சேவைக்கான டிரான்ஸ்போர்ட் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உருவாக்கலாம். டிரான்ஸ்போர்ட் பயனர் ஐடியை தங்களது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications