தீபாவளி போனஸ், சலுகைகள் என மக்கள் கையில் பணம் இருக்கும் போது வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்க நினைப்பது அல்லது முதலீடு செய்வது என்பது இயல்பு.
அப்படித் தீபாவளியின் போது தங்கம் வாங்குவதை ஒரு சிறப்பு மிக்க நாளாகவே மக்கள் கடைப்பிடிப்பதை பார்த்து இருப்போம். தீபாவளியின் போது தங்க வாங்கினால் அதிர்ஷ்டம் வரும் என்று கூறியும் கேள்விப்பட்டு இருப்போம். எனவே தங்கம் வாங்கும் போது ஏமாராமல் எப்படி வாங்குவது என்று இங்குப் பார்ப்போம்.
தங்கத்தின் சுத்தம்
தங்கத்தின் சுத்தம் காரர் என்பதன் மூலம் அளவிடப்படுகிறது: பொதுவாக 24 காரட் தங்க என்றால் சுத்தமான தங்கம் என்றும், நாம் வாங்கும் ஆபரணத் தங்க 82 சதவீதம் சுத்தமான தங்க என்பதும் குறிப்பிடத்தக்கது.
அது மட்டும் இல்லாமல் 18 காரட், 14 காரட் சுத்த அளவிலும் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றில் வெள்ளி, காப்பர், ஜிங்க் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டும் இருக்கும்.
24 காரட் தங்கத்தால் ஆபரணங்கள் செய்ய முடியாது. பொதுவாக நகை கடைகளில் 22 காரட் தங்க நகை ஆபரணங்கள் தான் விற்பனை செய்யப்படும். ஆன்லைனில் 14 மற்றும் 18 காரட் தங்கம் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் தங்கம் விலை கூடுதல் என்பது போல அடைமானம் வைக்கும் போது அல்லது விற்கும் போது அதிகம் பணம் கிடைக்கும். 14 அல்லது 18 காரட் என்றால் அவற்றின் தரத்திற்கு ஏற்றார் போல் விலை குறையும்.
செய் கூலி
ஆபரணத் தங்கம் வாங்கும் போது பொதுவாகச் செய் கூலியும் அதன் விலையில் அடங்கும். அது பொதுவாக நிலையாக இருக்கும். சில நகை கடைக்காரர்கள் சலுகை என்ற பெயரில் அதனை உயர்த்தி நம்மை ஏமாற்றவும் வாய்ப்புள்ளது. எனவே தங்கம் வாங்கும் போது செய் கூலி விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
ஆபரணத் தங்கம் விலை கணக்கிடுதல்
கிராம் தங்கத்தின் விலை * (தங்கத்தின் எடை + செய்கூலி)* தங்கத்தின் எடை + ஜிஎஸ்டி என்ற அடிப்படியில் தங்கம் விற்பனை செய்யப்படுவது வழக்கம் ஆகும்.
கைவேலை அல்லது இயந்திரம்
தங்கம் வாங்கும் போது அது கைவேலை மூலம் செய்யப்பட்டு என்றால் செய் கூலி அதிகமாக இருக்கும். இதுவே இயந்திரத்தின் வடிவமைப்பு என்றால் செய் கூலி விலை குறைவாக இருக்கும்.
எடை
ஆபரணத் தங்கம் எடை அளவினால் தான் விற்பனை செய்யப்படுகிறது. அதிக எடையில் வாங்கும் போது அதிகச் செலவாகும். சில நேரங்களில் வைரம், எம்ரல் போன்றவையும் தங்கத்தில் அலங்காரம் செய்யப்பட்டு விலையினை உயர்த்தும்.
பை பேக்
பழைய நகையை மாற்றிப் புதிய நகை வாங்கப் பல நகை கடைகள் அனுமதி அளிக்கின்றன. நகையின் வடிவம் மற்றும் டிரெண்ட் வேண்டுமானால் மாறலாம் ஆனால் அதன் மதிப்பு ஒன்று தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நகை கடை
இந்தியாவில் லட்சம் கணக்கான நகை கடைகள் உள்ளன.சிறு கடைகளில் நகை வாங்கும் போது அதில் கலப்படங்கள் அதிகமாகித் தங்கத்தின் அளவு குறைவாக இருக்கவும் வாய்ப்புகள் உண்டு. எனவே நம்பிக்கை வாய்ந்த, உள்ளூரில் நல்ல பெயர் பெற்ற கடைகளில் நகையினை வாங்குவது நல்லது.
தர நிலைகள்
இந்திய தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் ஹால்மார்க் உள்ள நகைகளை மட்டுமே வாங்க வேண்டும். இந்தப் பிஐஎஸ் ஹால்மார்க் திட்டம் சர்வதேச அளவில் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலை தடாலடியாக ரூ.6000 உயர்வு.. MCX சந்தையில் நடப்பது என்ன..?

பதறும் மத்திய கிழக்கு நாடுகள்.. எகிறும் தங்கம், வெள்ளி விலை! இனி என்னவாகும்?

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தங்கம், வெள்ளி.. ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்க தாக்குதலின் எதிரொலி..!!

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!



Click it and Unblock the Notifications